DigiLocker ஆப்பில்.. சைலன்ட் ஆக சேர்க்கப்பட்ட புதிய சேவை! சீனியர் சிட்டிசன்கள் ஹேப்பி!

|

மூத்த குடிமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நோக்கத்தின் கீழ், டிஜிலாக்கர் ஆப்பில் (DigiLocker App) ஒரு புதிய சேவை சேர்க்கப்பட்டுள்ளது.

அதென்ன சேவை? அதனால் சீனியர் சிட்டிசன்களுக்கு என்ன லாபம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பென்ஷன் வாங்குவோருக்கு ஒரு குட் நியூஸ்!

பென்ஷன் வாங்குவோருக்கு ஒரு குட் நியூஸ்!

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிலாக்கரை (DigiLocker) அறிமுகம் செய்தார் அல்லவா?

அந்த டிஜிலாக்கரில் தான், சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொடர்பான ஒரு முக்கிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வசதியை பென்ஷன் வாங்குவோருக்கான ஒரு குட் நியூஸ் என்றே கூறலாம்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

அதென்ன வசதி?

அதென்ன வசதி?

டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமித்து வைக்க உதவும் டிஜிலாக்கரில் பென்ஷன் சான்றிதழ்களை டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மார்க்ஷீட்கள் மற்றும் வாகனப் பதிவு போன்ற ஆவணங்களுக்கான அணுகலோடு சேர்த்து தற்போது டிஜிலாக்கர் வழியாக ஒருவர் தனது பென்ஷன் சான்றிதழையும் அணுகலாம்.

இனி சர்டிபிகேட் சிக்கல் இருக்காது!

இனி சர்டிபிகேட் சிக்கல் இருக்காது!

டிஜிலாக்கரில் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் கீழ், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் ஆனது Bank of Maharashtra வழியாக அணுக கிடைக்கும்.

முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி பென்ஷன் சான்றிதழ்களை பெறுவதில் உள்ள சிக்கல்களை வெகுவாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலருக்கும் தெரியாத Gmail செட்டிங்! ஒருமுறை ஆக்டிவேட் செஞ்சிட்டா.. சிங்கிள் கிளிக்கில் 1500 பேர்!பலருக்கும் தெரியாத Gmail செட்டிங்! ஒருமுறை ஆக்டிவேட் செஞ்சிட்டா.. சிங்கிள் கிளிக்கில் 1500 பேர்!

டிஜிலாக்கர் ஆப் வழியாக ஓய்வூதிய சான்றிதழை பெறுவது எப்படி?

டிஜிலாக்கர் ஆப் வழியாக ஓய்வூதிய சான்றிதழை பெறுவது எப்படி?

நீங்கள் இதற்கு முன்னாள் டிஜிலாக்கர் ஆப்பை பயன்படுத்தியதே இல்லை என்றாலும் கூட பரவாயில்லை.

ஏனென்றால், டிஜிலாக்கர் ஆப் வழியாக உங்கள் ஓய்வூதியச் சான்றிதழை பெறுவதுற்கு - மிகவும் எளிமையான - சில படிகள் மட்டுமே உள்ளன!

கீழ்வரும் படிகளை ஒவ்வொன்றாக செய்வதன் வழியாக, டிஜிலாக்கர் ஆப் வழியாக ஓய்வூதிய சான்றிதழை பெறலாம்!

முதலில் லாக்-இன் செய்ய வேண்டும்!

முதலில் லாக்-இன் செய்ய வேண்டும்!

முதல் படியாக, டிஜிலாக்கர் வலைதளம் வழியாக அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டிஜிலாக்கர் ஆப் வழியாக லாக்-இன் செய்ய வேண்டும்

லாக்-இன் செய்யும் போது, உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண் மற்றும் 6 இலக்க செக்யூரிட்டி பின் (Security PIN) கேட்கப்படும். பின்னர் உங்களுக்கு ஒரு ஒடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும். அதை கொண்டு லாக்-இன் செய்யவும்

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

பென்ஷன் டாக்குமென்ட் என்று டைப் செய்யவும்!

பென்ஷன் டாக்குமென்ட் என்று டைப் செய்யவும்!

டிஜிலாக்கர் ஆப்பிற்குள் லாக்-இன் செய்த பிறகு, "Bank of Maharashtra Pension Certifications in the carousel" என்கிற விருப்பத்தை தேடவும் அல்லது மெனுவில் அணுக கிடைக்கும் Search Documents-க்கு சென்று "pension document" என்று டைப் செய்யவும்.

இப்போது உங்களுக்கு பல விருப்பங்கள் அணுக கிடைக்கும். அதில் "பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பிபிஓ நம்பரை நினைவில் வைத்து கொள்ளவும்!

பிபிஓ நம்பரை நினைவில் வைத்து கொள்ளவும்!

- பட்டியலிலிருந்து இணைப்பை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஒரு சிறிய படிவத்தை பெறுவீர்கள், அதில் ஓய்வூதியதாரரின் பிறந்த தேதி மற்றும் பிபிஓ எண்ணை (PPO Number) உள்ளிட வேண்டும்.

- இப்போது பிபிஓ நம்பர் இருக்கும் வரிசையில், கீழே உள்ள செக்மார்க்-ஐ கிளிக் செய்யவும்.

இப்படி செய்வதன் வழியாக, உங்களுக்கான ஆவணங்களை பெறும் நோக்கத்திற்காக, உங்களை பற்றிய விவரங்களை வழங்குபவர்களுடன் பகிர்ந்து கொள்ள டிஜிலாக்கருக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்று அர்த்தம்!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

அவ்வளவு தான்.. வேலை முடிந்தது!

அவ்வளவு தான்.. வேலை முடிந்தது!

மேற்கூறிய வழிமுறைகளை எல்லாம் சரியாக செய்த பின்னர் "Get Document" என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். அது உங்களுக்காக தயாராக இருக்கும்!

பென்ஷன் சர்டிபிக்கேட்டை தவிர்த்து, DigiLocker-இல் இன்னும் சில புதிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய சேவைகளில் கார் இன்சூரன்ஸ், தண்ணீர் பில் (ஜம்மு மற்றும் காஷ்மீரில்) மற்றும் உத்யம் (Udyam) சான்றிதழ் போன்றவைகளும் அடங்கும்.

அதுமட்டுமல்ல!

அதுமட்டுமல்ல!

ஆதார் அட்டை விவரங்கள், SSC மற்றும் HSC மார்க் ஷீட்ஸ், ஓட்டுநர் உரிமம் விவரங்கள், வருமானச் சான்றிதழ்கள், கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்கள், மற்ற அரசு அடையாள அட்டை போன்றவைகளையும் டிஜிலாக்கர் வழியாக "ஒருங்கிணைக்கப்பட்ட முறையில்" சேமிக்க முடியும்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

ஆகமொத்தம்.. இது உங்களுக்கான ஒரு டிஜிட்டல் அலமாரி!

ஆகமொத்தம்.. இது உங்களுக்கான ஒரு டிஜிட்டல் அலமாரி!

எளிமையாக கூற வேண்டும் என்றால் DigiLocker என்பது, உங்களுக்கான ஒரு டிஜிட்டல் அலமாரி ஆகும். அதில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை சேமிக்க முடியும்.

டிஜிலாக்கரை அணுக உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால் போதும்; அதனை கொண்டே லாக்-இன் செய்யலாம்!

பாதுகாப்பிற்கு எந்த குறையும் இருக்காது!

பாதுகாப்பிற்கு எந்த குறையும் இருக்காது!

டிஜிலாக்கர் என்கிற இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சேவையானது டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (Digital India Corporation - DIC) கீழ் இயங்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Ministry of Electronics and Information Technology - MeitY) உருவாக்கப்பட்டது.

எனவே, உங்களுக்கோ அல்லது உங்களின் ஆவணங்களுக்கோ பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுமா என்கிற கேள்விக்கே இடமில்லை!

Best Mobiles in India

English summary
Now senior citizens can easily access their pension certificate through DigiLocker App Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X