பலருக்கும் தெரியாத Paytm சீக்ரெட்.. இதை தெரிஞ்சுக்கிட்டா கரண்ட் பில் கட்டும் போது செம்ம லாபம் கிடைக்கும்!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் பேடிஎம் ஆப் (Paytm App) இருக்கிறது என்றால், இன்னும் குறிப்பாக பேடிஎம் ஆப் வழியாக - மாதந்தோறும் - மின்சார கட்டணத்தை (Power Bill) செலுத்தும் பழக்கம் / வழக்கம் உங்களிடம் இருக்கிறது என்றால், இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

பேடிஎம் நிறுவனமானது, தனது ஆப் வழியாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்த உதவும் பிஜிலி டேஸ் (Bijlee Days) என்கிற சலுகையை வழங்குகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த சலுகையின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பிஜிலி டேஸின் கீழ் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்குமே நம்பமுடியாத கேஷ்பேக் (Cashback) மற்றும் உறுதியான ரிவார்ட்ஸ் (Rewards) கிடைக்கும் என்பது தான்!

Paytm பிஜிலி டேஸ் ஆபர்: இனி கரண்ட் பில் கட்டும் போது ஒரே லாபம் தான்!

பேடிஎம் நிறுவனத்தின் கூற்றுப்படி, Bijlee Days சலுகைகள் ஆனது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் அணுக கிடைக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் மின்சார கட்டணம் செலுத்தும் போது, ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பயனர்களுக்கு 100% கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் சலுகையின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2,000 வரை கிடைக்கும் என்கிற தகவலையும் பேடிஎம் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது!

கேஷ்பேக் சலுகைகள் மட்டுமின்றி, பேடிஎம் ஆப்பின் பிஜிலி டேஸ் சலுகையின் கீழ் இந்தியாவின் மிகச்சிறந்த ஷாப்பிங் (Shopping) மற்றும் டிராவல் (Travel) பிராண்டுகளின் தள்ளுபடி வவுச்சர்களும் (Discount vouchers) அணுக கிடைக்கும். அதுமட்டுமின்றி, பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி முதல் முறையாக மின்சார கட்டணம் செலுத்த போகிறீர்கள் என்றால், 'ELECNEW200' என்கிற குறியீட்டை (CODE) பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.200 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் ஆப் ஆனது தனது பயனர்களுக்கு பல வகையான கட்டண விருப்பங்களை (Payment options) வழங்குகிறது. அதாவது Paytm UPI, Paytm Wallet, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் Paytm போஸ்ட்பெய்டு உள்ளிட்டவைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, பேடிஎம் ஆப் வழியாக ஆட்டோ-பே (Auto-Pay) என்கிற அம்சமும் அணுக கிடைக்கிறது. இதன் கீழ் உங்கள் மின்சார கட்டணம் தொடர்பான விவரங்கள் பதிவேற்றப்பட்டவுடன் உங்கள் பேடிஎம் அக்கவுண்ட்டில் இருந்து குறிப்பிட்ட பில் தொகை ஆனது தானாகவே கழிக்கப்படும்.

ஒருவேளை உங்களுக்கு பேடிஎம் ஆப் வழியாக மின்சார கட்டணம் செலுத்துவது எப்படி என்று தெரியாதென்றால், கவலை வேண்டாம். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Paytm ஆப்பை திறக்கவும் (ஒருவேளை உங்கள் போனில் பேடிஎம் ஆப் இல்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அதை இன்ஸ்டால் செய்து; உங்கள் மொபைல் நம்பர் மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொண்டு ரிஜிஸ்டர் செய்யவும்). பின்னர் ஆப்பின் ஹோம் பேஜ்ஜிற்கு (Home Page) செல்லவும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரீசார்ஜ்ஜஸ் அண்ட் பில் பேமெண்ட்ஸ் (Recharges and Bill Payments) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், பின்னர் எலெக்ட்ரிசிட்டி (Electricity) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தை தேர்ந்தெடுக்கவும். பின்னர்
உங்களுடைய வாடிக்கையாளர் அடையாள எண்ணை (Customer Identification Number) உள்ளிட்டு ப்ரொசீட் (Proceed) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை தேர்ந்தெடுத்து, உங்களுக்கான மின்சார கட்டணத்தை செலுத்தவும்; அவ்வளவு தான்!

பேடிஎம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, மொபைல் பேமெண்ட்டுகளின் முன்னோடியாக திகழும் பேடிஎம் ஆனது மக்களின் அன்றாட வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும்படியான புதுமைகளைக் கொண்டு வருவதையும், அவர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக பேடிஎம் ஆப் வழியாக மின்சார கட்டணம் செலுத்துவது என்பது மிகவும் எளிமையான மற்றும் வசதியான காரியமாக உருமாறி உள்ளது; கூடுதலாக கேஷ்பேக் மற்றும் ரிவாட்ஸ் வழியாக பணத்தை சேமிக்கவும் உதவுகிறது.

Best Mobiles in India

English summary
Now Paytm Users Can Get Up to Rs 2000 Cashback While Paying Their EB Current Bills Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X