லினக்ஸ்-இல் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்படி?

லினக்ஸ்-இல் திரைப்பட டப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய எளிய டிப்ஸ்

|

திரைப்படங்களை பார்க்கும் போது சப்-டைட்டிள்கள் இருந்தால் வசனங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இத்துடன் மற்ற மொழி திரைப்படங்களை பார்க்கும் போது சப்-டைட்டிள்கள் அனைத்து வசனங்களையும் புரிந்து கொள்ள வழி செய்யும்.

லினக்ஸ்-இல் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்பட

இணையத்தில் திரைப்படம் பார்ப்பவர்கள், திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை இணையத்திலேயே டவுன்லோடு செய்ய முடியும். எனினும் சப்-டைட்டிள் ஃபைல்கள் திரைப்படத்துடன் சரியாக சின்க் ஆவதில் பிரச்சனை ஏற்படும். லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் திரைப்படங்களுக்கான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது எப்படி?

அனைத்து திரைப்படங்களுக்கும் ஏற்ற சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்த முடியும். அவ்வாறு லினக்ஸ் இயங்குதளத்தில் சீராக இயங்கும் சப்-டைட்டிள் செயலிகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

சப்டவுன்லோடர்:

சப்டவுன்லோடர்:

இந்த மென்பொருள் opensubtitiles.org பயன்படுத்தி திரைப்படங்களுக்கு கிடைக்கும் சப்-டைட்டிள்களை தேடும். மேலும் திரைப்படங்களின் பெயரை கொண்டு தேடல்களை மேற்கொண்டு சரியான சப்-டைட்டிள்களை பரிந்துரை செய்யும்.

விஎல்சப்:

விஎல்சப்:

லினக்ஸ் இயங்குதளத்தில் விஎல்சி மீடியோ பிளேயர் பயன்படுத்தினால் VLSub and Subtitles Finder பிளக் இன் மூலம் சப்-டை்டிள்களை தேடி பயன்பெற முடியும். இந்த பிளக் இன் பயன்படுத்தினால் சப்-டைட்டிள்களை பெறுவது எளிய காரியமாகி விடும்.

ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளியாகும் சாம்சங் எக்ஸ் 'போல்டபில்' ஸ்மார்ட்போன்.!ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளியாகும் சாம்சங் எக்ஸ் 'போல்டபில்' ஸ்மார்ட்போன்.!

சப்லிமினல்:

சப்லிமினல்:

இணையத்தில் கிடைக்கும் பல்வேறு தளங்களில் தேடல்களை மேற்கொண்டு சப்-டைட்டிள் டவுன்லோடு செய்ய இந்த செயலி கமான்ட் லைன் பயன்படுத்தும். இதனால் சரியான சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்வது மிகவும் எளிமையான காரியமாகிவிடுகிறது.

சப்லினிமினல் டர்மினல் டவுன்லோடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தவும்:

"sudo apt-get install subliminal."

சப்லிமினலை நீங்கள் வைத்துள்ள திரைப்படங்களின் ஃபோல்டரில் வைத்து ரன் செய்ய வேண்டும். கமாண்ட் பயன்படுத்தியதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் பயன்படுத்தி சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்யலாம்.

"subliminal -1 en movie_name.mp4"

மேலே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டில் "en" என்ற வார்த்தைக்கு மாற்றாக உங்களுக்கு தேவையான மொழியில் சப்-டைட்டிள் பெற அதற்கான குறியீட்டை வழங்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு ஆங்கில மொழியில் சப்-டைட்டிள்களை தேட வழி செய்யும்.

இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் சப்-டைட்டிள்களை டவுன்லோடு செய்ய உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
If you are using a linux OS, here is how you can download movie subtitles.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X