Home
How to

பிஸிக்கல் SIM கார்டுக்கு குட்பை.. வந்தாச்சு BSNL eSIM.. உங்க ID-ஐ காட்டினா போதும்.. வாங்குவது எப்படி?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது தமிழ்நாடு வட்டத்தில் (Tamil Nadu Circle) சத்தமில்லாமல் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது தமிழ்நாட்டில் தனது இசிம் சேவைகளை (eSIM services) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) ஆகியவைகள் நாடு முழுவதும் இந்த வசதியை (இ-சிம் சேவைகளை) வழங்கி வருகின்றன. தற்போது அந்த பட்டியலில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்துள்ளது.

பிஸிக்கல் SIM கார்டுக்கு குட்பை.. வந்தாச்சு BSNL eSIM!

அறியாதோர்களுக்கு இசிம் என்பது இசிம் ஆதரவு கொண்ட அல்லது இசிம் க்கு இணக்கமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் வியரிபிள்ஸ் டிவைஸ்களில் (அதாவது ஸ்மார்ட் வாட்ச் போன்ற டிவைஸ்களில்) பிஸிக்கல் சிம் கார்டு இல்லாமல் மொபைல் இணைப்புகளை செயல்படுத்த அனுமதிகும் ஒரு சேவை ஆகும்

தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இசிம் சேவை ஆனது இந்தியா முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது பிஎஸ்என்எல் சேவையின் கீழ் கிட்டத்தட்ட ஒன்பது கோடி மொபைல் பயனர்கள் (Mobile Users) உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இசிம் ஐ பெறுவது எப்படி? ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இசிம் ஆதரவு கொண்ட தங்களுடைய டிவைஸ் (ஸ்மார்ட்போன் அல்லது வியரிபிள்ஸ்) மற்றும் செல்லுபடியாகும் ஐடி ஆதாரத்துடன் (Valid ID Proff) பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களை (BSNL customer service centers) அணுகவும்.

இந்த செயல்முறை - டிஜிட்டல் கேஒய்சி (Digital KYC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (Digital know your customer) சரிபார்ப்பை நிறைவு செய்வதையும். இசிம் ப்ரொபைல்-ஐ (eSIM profile) பதிவிறக்க உதவும் ஒன்-டைம் க்யூஆர் குறியீட்டை (One-time QR code) பெறுவதையும் உள்ளடக்கியது.

புதிய பயனர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் ஆகிய இருவருமே இசிம் சேவையை தேர்வு செய்யலாம். அதாவது உங்களிடம் ஏற்கனவே உள்ள பிஸிக்கல் சிம் கார்ட்டில் இருந்து "இடம்பெயர்வும்" முடியும். ஆதரவு கொண்ட அல்லது இணக்கமான டிவைஸ்களில் பிஸிக்கல் சிம் கார்டு உடன் இ-சிம் ஐயும் பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாத்தின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் மேலும் ஒரு சுதந்திர தின சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. முன்னதாக ரூ.1 க்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி பிளானை அறிமுகம் செய்திருந்தது.

தற்போது ஒரு குறிப்பிட்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தின் மீது ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது . இந்த சலுகை 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்த சலுகையின் கீழ் வரும் பிஎஸ்என்எல் பிளான் - பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆன ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் ஆகும்

இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம். அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Now BSNL Customers in Tamil Nadu Can Get BSNL eSIM How and What is the Process
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X