Home
How to

YouTube-ன் ரகசிய அம்சங்கள்: அடிச்சு கூட கேப்பாங்க.. யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க!

யூட்யூப்பில் (YouTube) மணிக்கணக்கில் வீடியோ பார்க்கும் பலருக்கும் கூட தெரியாத சில "ரகசியமான" அம்சங்கள் உள்ளன!

அதென்ன அம்சங்கள்? மற்றவர்களுக்கு கிடைக்காத அந்த அம்சங்களை நீங்கள் மட்டும் பயன்படுத்துவது எப்படி? அதை அணுகுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அடடா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

அடடா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

யூட்யூப்பில் நமக்கு தெரிந்தது எல்லாம்... மேலே உள்ள சேர்ச் பாரில் (Search Bar) நமக்கு தேவையான கன்டென்ட்-ஐ டைப் செய்து தேடுவது.. கிடைக்கும் ரிசல்ட்களில் விருப்பமான வீடியோவை கிளிக் செய்வது, அதை பார்ப்பது - அப்படித்தானே?!

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இதற்கு முன் நாம் கேள்விப்பட்டிராத பல ரகசியமான அம்சங்கள் Youtube-இல் உள்ளதென்று? அதுபற்றி தெரிந்தால்.. "அடடா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!" என்று வருத்தப்படுவீர்கள்!

ஒரு முடிவுக்கு வந்த பின்னர்.. அந்த

ஒரு முடிவுக்கு வந்த பின்னர்.. அந்த "ரகசிய" அம்சங்கள்?

கூகுளுக்குச் சொந்தமான வீடியோ ஷேரிங் பிளாட்பார்ம் ஆன YouTube - தொடர்ச்சியான முறையில் - பல வகையான புதிய அம்சங்களில் வேலை செய்கிறது.

அப்படியான அம்சங்கள், முதலில் ஒரு சிறிய அளவிலான பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்படும். பின்னர் "எல்லாம் சரியாக இருக்கிறது" என்கிற முடிவுக்கு வந்த பின்னர், அந்த அம்சங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும்.

அந்த

அந்த "ரகசிய" அம்சங்கள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமா?

யூட்யூப்-ஐ பயன்படுத்தும் அனைவருக்குமே கிடைக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அணுக கிடைக்கும் அந்த அம்சங்களை நீங்களும் அணுக வேண்டுமா? சோதனை செய்து பார்க்க வேண்டுமா?

அதாவது யூட்யூப்பில் சோதனை செய்யப்பட்டு வீடியோ சேப்டர்ஸ் (video chapters) மற்றும் பிக்சர்-இன்-பிக்ச்சர் மோட் ( and picture-in-picture mode) போன்ற அம்சங்களை பயன்படுத்த வேண்டுமா?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

யூட்யூப்பில் சோதனை செய்யப்படும் புதிய அம்சங்களை 'டெஸ்ட்' செய்யும் பயனர்களின் பட்டியலில், நீங்களும் இணைய வேண்டும் என்றால்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்!

அது என்னவென்றால் - நீங்களொரு யூட்யூப் பிரீமியம் சந்தாதாரராக மாற வேண்டும். அப்போது தான் யூட்யூப்பின் எக்ஸ்ப்ரீமென்டல் ஃபீச்சர்களை (YouTube Experimental features) உங்களால் அணுக முடியும்!

எக்ஸ்ப்ரீமென்டல் ஃபீச்சர்ஸ் என்றால் என்ன?

எக்ஸ்ப்ரீமென்டல் ஃபீச்சர்ஸ் என்றால் என்ன?

எளிமையான சொற்களில் - ஒரு புதிய யூட்யூப் அம்சமானது பெரிய அளவிலான அறிமுகத்தை சந்திப்பதற்கு முன்னால், ஒரு சிறிய குழுவால் சோதனை செய்யப்படும்.

அதன் வழியாக, குறிப்பிட்ட அம்சம் எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கிறது? அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்? என்கிற தகவல்கள் சேகரிக்கப்படும்; அது தொடர்பான மேம்பாடுகளை சந்திக்கும். அதன் பின்னரே அனைவருக்குமான ஒரு அம்சமாக வெளியாகும்!

குறிப்பிட்ட காலத்திற்கு!

குறிப்பிட்ட காலத்திற்கு!

நீங்களொரு யூட்யூப் பிரீமியம் சந்தாதாரராக இருக்கும்பட்சத்தில், உங்களாலும் யூட்யூப்பின் புதிய அம்சங்களை சோதனை செய்ய முடியும். அதாவது பயன்படுத்தி பார்க்க முடியும்.

மேலும் ஒவ்வொரு புதிய அம்சமும் - சோதனை கட்டத்தின் கீழ் - ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யூட்யூப் ப்ரீமியம் சந்தாவின் விலை என்ன?

யூட்யூப் ப்ரீமியம் சந்தாவின் விலை என்ன?

தனிப்பட்ட பிளான் (Individual Plan) - மாதம் ரூ.129
ஃபேமிலி பிளான் (Family Plan) - மாதம் ரூ.189
ஸ்டூடெண்ட் பிளான் (Student Plan) - மாதம் ரூ.79

தனிப்பட்ட பிளானின் நன்மைகள்:

தனிப்பட்ட பிளானின் நன்மைகள்:

- விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள்
- டவுன்லோட்
- பேக்கிரவுண்ட் பிளே
- ம்யூசிக் பிரீமியமிற்கான (Music Premium) முழு அணுகல்

ஃபேமிலி பிளானின் நன்மைகள்:

ஃபேமிலி பிளானின் நன்மைகள்:

- ஆறு பேர் வரை மெம்பர்களாக இணையும் வசதி
- விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள்
- டவுன்லோட்
- பேக்கிரவுண்ட் பிளே
- ம்யூசிக் பிரீமியமிற்கான (Music Premium) முழு அணுகல்

ஸ்டூடெண்ட் பிளானின் நன்மைகள்:

ஸ்டூடெண்ட் பிளானின் நன்மைகள்:

- இது தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அணுக கிடைக்கும்
- விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள்
- பேக்கிரவுண்ட் பிளே
- ம்யூசிக் பிரீமியமிற்கான (Music Premium) முழு அணுகல்

Best Mobiles in India

English summary
No One Will Share This Youtube Secret With You About Access Use Experimental Features Before Others
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X