31-ஆம் தேதிக்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

|

ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருப்போருக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய கெடு நாளை (Last Date) அறிவித்துள்ளது.

அதென்ன கெடு? குறிப்பிட்ட தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்? அதை செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:

கடைசி வாய்ப்பு!

கடைசி வாய்ப்பு!

உங்களிடம் ஆதார் கார்டு மட்டுமல்ல, பான் கார்டு (PAN Card) இருந்தாலும் கூட, அரசாங்கம் அறிவித்துள்ள இந்த கெடு உங்களுக்கு பொருந்தும். ஏனென்றால், இந்த கெடு - ஆதார் அட்டையுடன் உங்கள் பான் கார்டை இணைப்பதுடன் (Aadhaar PAN Link) தொடர்புடையது ஆகும்!

ஆம் நீங்கள் இன்னுமும் உங்கள் பான் கார்டை ஆதார் கார்டு உடன் இணைக்கவில்லை என்றால், அதை செய்வதற்கான கடைசி வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கம் அதற்கான கடைசி தேதியை தான், தற்போது அறிவித்துள்ளது!

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

எந்த தேதிக்குள் இணைக்க வேண்டும்?

எந்த தேதிக்குள் இணைக்க வேண்டும்?

பான் கார்டு வைத்திருக்கும் அனைவருமே தங்களது பான் எண்ணை (PAN Number) உடனடியாக ஆதார் கார்டுடன் இணைக்குமாறு இந்திய வருமான வரித்துறை (Income Tax Department) கேட்டு கொண்டுள்ளது.

மேலும், அதை செய்வதற்கான கடைசி தேதியையும் அறிவித்துள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி ஆக மார்ச் 31, 2023 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பாக உங்கள் ஆதார் கார்டு மற்றும் பாண் கார்ட்டை இணைத்து இருக்க வேண்டும்!

இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

மேற்குறிப்பிட்ட தேதிக்குள் இரண்டு ஆவணங்களையும் இணைக்க தவறினால் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி தேதியை பற்றி தெரிவிக்க வருமான வரித் துறை ஆனது ட்விட்டர் (Twitter) தளத்தை பயன்படுத்திக்கொண்டது.

அதாவது "வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் (Exempt category) கீழ் வராத பான் கார்டு பயனர்கள் அனைவருமே 31.03.2023 ஆம் தேதிக்கு முன்னதாக தங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 01.04.2023 முதல், இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழந்துவிடும். இது கட்டாயமாகும், அவசியமும் ஆகும். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!" என்று வருமான வரித்துறை ட்வீட் செய்துள்ளது!

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

வீட்டில் இருந்தபடியே ஆதார்-பான் கார்ட்-ஐ இணைப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே ஆதார்-பான் கார்ட்-ஐ இணைப்பது எப்படி?

உங்களில் சிலருக்கு வீட்டில் இருந்தபடியே பான் கார்டையும் ஆதாருரையும் இணைக்கும் செயல்முறை பற்றி தெரியாமல் இருக்கலாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை ஒவ்வொன்றாக பின்பற்றவும்:

- முதலில், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) செல்லவும் அல்லது பின்வரும் இணைப்பிற்குள் செல்லவும் - www.incometax.gov.in/iec/foportal/

- இ-ஃபைலிங் போர்ட்டலுக்குள் நுழைந்ததும் க்விக் லிங்க்ஸ் (Quick Links) செக்ஷனுக்கு சென்று லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- அதனை தொடர்ந்து உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களை உள்ளிட்டு வேலிடேட் (Validate) என்பதை கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை ஏற்கனவே உங்கள் பான் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தால், இ-ஃபைலிங் போர்ட்டல் ஸ்க்ரீனில் "உங்கள் பான் கார்டு ஆனது ஏற்கனவே உங்கள் ஆதாருடன் அல்லது வேறு சில ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது" என்கிற செய்தியை காண்பீர்கள்.

- மாறாக உங்கள் பான் நம்பர் ஆனது உங்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால்.. நீங்கள் என்எஸ்டிஎல் போர்ட்டலில் (NSDL Portal) ஒரு சலான்-ஐ (challan) செலுத்த வேண்டி இருக்கும். பின்னர் தகவல் மின்னணு தாக்கல் (Electronic filing) மூலம் உங்களுடைய கட்டண தகவல் (Payment information) சரிபார்க்கப்படும்.

- அதனை தொடர்ந்து, உங்கள் பான் மற்றும் ஆதார் உறுதிசெய்யப்படும். பிறகு, 'உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன' என்கிற பாப்-அப் அறிவிப்பை பெறுவீர்கள்.

தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

இப்போது ஒடிபி ஒன்று வரும்.. ரெடியா இருங்க!

இப்போது ஒடிபி ஒன்று வரும்.. ரெடியா இருங்க!

- கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், நீங்கள் தேவையான (அதாவது கோரப்படும்) விவரங்களை உள்ளிட வேண்டிய இருக்கும். பின்னர் லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது பதிவு செய்யப்பட்ட (ரிஜிஸ்டர் செய்யப்பட்ட) மொபைல் எண்ணிற்கு 6 இலக்க ஒடிபி (OTP) ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

- கேட்கப்படும் இடத்தில் அந்த ஓடிபி-ஐ உள்ளிட்ட பின்னர், ஆதார் - பான் இணைப்புக்கான உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்க (Submit) வேண்டும். அவ்வளவு தான் வேலை முடிந்தது!

நீங்கள் இந்த கோரிக்கையை விடுத்த 4 முதல் 5 வேலை நாட்களுக்குள், உங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Best Mobiles in India

English summary
New Warning For Aadhaar and PAN Card Holders, Income Tax Department Said Do Not Delay to Link!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X