Home
How to

இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. WhatsApp-ல் Favorites என்கிற புதிய அம்சம் அறிமுகம்.. இதனால் என்ன பயன்?

வாரா வாரம் வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன மற்றும் பல புதிய அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் (Beta Version) சோதனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாமே வாட்ஸ்அப் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கமா என்று கேட்டால்.. இதற்கான பதில் ஒவ்வொருவரின் தேவைகளை பொறுத்தும்.. அவர்கள் வாட்ஸ்அப்பை எப்படி, எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்தும் வேறுபடும். இருப்பினும் சில அம்சங்கள் மிகவும் பொதுவானதாக இருக்கும். அனைத்து வகையான யூசர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படியான ஒரு அம்சம் தான் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் (WhatsApp Favorites)!

வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் என்றால் என்ன? இது பயனர்கள், தங்களுக்கு பிடித்த காண்டாக்ட்களை விரைவாக அணுக அனுமதிக்கும் ஒரு புதிய அம்சமாகும். இது மெசேஜ்களுக்கான ஃபில்டர் (Filter) ஆகவும் செயல்படும். வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த அம்சம் கால்ஸ் டேப்பிற்கு (Calls tab) மேலே அணுக கிடைக்கும்.

WhatsApp-ல் Favorites என்கிற புதிய அம்சம் அறிமுகம்!

இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் வந்து சேரும் என்றும்.. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய ஃபேவரைட்ஸ்-ஐ ஆப் செட்டிங்ஸ் (App Settings) வழியாக நிர்வகிக்கலாம் மற்றும் எந்த நேரத்திலும் அவற்றை ரீஆர்டர் (Reorder) செய்யலாம் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.

வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் அம்சமானது அனைத்து வகையான சாட்களிலும் வேலை செய்யும். அதாவது நீங்கள் தேர்வு செய்வது ஒரு க்ரூப் சாட் (Group Chat) ஆக இருந்தாலும் சரி அல்லது பெர்சனல் சாட் (Personal Chat) ஆக இருந்தாலும் சரி.. அதை வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ்-ன் கீழ் வரிசைப்படுத்த முடியும். அதே சமயம் அவைகளை எப்போது வேண்டுமானலும் உங்கள் விருப்பப்படி மறுவரிசைப்படுத்தவும் முடியும்.

வாட்ஸ்அப் ஃபேவரைட்ஸ் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது? உங்களுடைய ஃபேவரைட்ஸ் லிஸ்ட்டில் (Favorite List), ஒரு காண்டாக்ட் அல்லது ஒரு க்ரூப்பை சேர்க்க சாட் ஸ்க்ரீனில் உள்ள 'ஃபேவரைட்ஸ்' என்கிற ஃபில்டரை (Favorites Filter) தேர்ந்தெடுக்க வேண்டும். இதை செய்தவும் நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட் அல்லது க்ரூப் ஆனது உங்களுக்கான ஃபேவரைட்ஸ் லிஸ்ட்டில் சேர்க்கப்படும்.

இதுதவிர்த்து ஆட் ஃபேவரைட் (Add Favorite) என்கிற ஆப்ஷனை டேப் செய்து கால்ஸ் டேப்பில் இருந்து குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்பை உங்களுடைய ஃபேவரைட்ஸ் ஆக தேர்ந்தெடுக்கவும். கடந்த சில வாரங்களில் அறிமுகமான புதிய வாட்ஸ்அப் அம்சங்களில் இது மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. இது சாட்களை 'பின்' செய்து வைக்கும் வேலையை குறைக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனமானது கான்டெக்ஸ்ட் கார்டு (Context Card) என்கிற புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இந்த அம்சத்தின் முக்கிய நோக்கமே பயனர்கள் ஒரு க்ரூப்பை பற்றிய அனைத்து வகையான தகவல்களையும் உங்களுக்கு வழங்குவதே ஆகும். அதாவது நீங்கள் ஒரு வாட்ஸ்அப் க்ரூபில் சேர்க்கப்படும்போது உங்களுக்கு ஒரு "கான்டெக்ஸ்ட் கார்டு" தோன்றும்.

அதன் வழியாக, நீங்கள் சேர்க்கப்பட்ட க்ரூப்பை உருவாக்கியது யார், அது எந்த தேதியில் உருவாக்கப்பட்டது மற்றும் அந்த க்ரூப்பின் நோக்கம் என்ன போன்ற தேவையான தகவல்களை பெறுவீர்கள். இந்த தகவல்களின் வழியாக.. குறிப்பிட்ட க்ரூப் ஆனது உங்களுக்கு பொருத்தமான க்ரூப்பா? இதில் சேர வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா? என்பதை உங்களால் மேலோட்டமாகவே தீர்மானிக்க முடியும்.

வாட்ஸ்அப்பின் புதிய கான்டெக்ஸ்ட் கார்டு அம்சம், போலியான வாட்ஸ்அப் க்ரூப்களால் ஏற்படும் மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சமீப காலமாக வாட்ஸ்அப் பயனர்கள், பங்குச்சந்தை டிப்ஸ்களை வழங்கும் போலியான வாட்ஸ்அப் க்ரூப் தொடர்பான பல மோசடிகளுக்கு இலக்காகி உள்ளதாக கூறப்படுகிறது. அம்மாதிரியான க்ரூப்களுக்கு, இந்த கான்டெக்ஸ்ட் கார்டு - எண்டு கார்டு வைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Useful Feature Called Favorites Added in WhatsApp How to Use How it Works Where to get
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X