போடு தகிட தகிட.. இனிமேல் கண்டுபிடிக்கவே முடியாது.. WhatsApp-க்கு வந்த புது சீக்ரெட்!

|

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஒரு புதிய "சீக்ரெட் அம்சம்" சேர்ந்துள்ளது.

அதென்ன அம்சம்? சீக்ரெட் என்று குறிப்பிடும் அளவிற்கு அதில் என்ன உள்ளது? இனிமேல் கண்டுபிடிக்க முடியாது என்றால்.. எதை கண்டுபிடிக்க முடியாது? யாரால் கண்டுபிடிக்க முடியாது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எப்போவோ கேட்டது!

எப்போவோ கேட்டது!

"மிகவும் எதிர்பார்க்கப்படும் வாட்ஸ்அப் அம்சங்கள்" என்கிற பட்டியலில் கடந்த பல ஆண்டுகளாக "காத்திருக்கும்" ஒரு அம்சம் என்றால் அது - ஹைட் ஆன்லைனாகத்தான் (Hide Online) இருக்க முடியும்!

அதாவது வாட்ஸ்அப்பை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் அம்சத்தை மறைக்க உதவும் ஒரு அம்சம் தான் - ஹைட் ஆன்லைன்!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

இப்போதான் வந்து இருக்கு!

இப்போதான் வந்து இருக்கு!

மிக நீண்ட காலமாக கோரப்படும் 'ஹைட் ஆன்லைன்' அம்சமானது ஒருவழியாக வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இனிமேல் உங்களால், வாட்ஸ்அப்பில் உள்ள ஆன்லைன் ஸ்டேடஸை மறைக்க முடியும். அதன் மூலம் மற்றவர்களுக்கு தெரியாதபடி "ரகசியமாக" அல்லது "சுதந்திரமாக" சாட் செய்ய முடியும்.

இனிமேல் கண்டுபிடிக்கவே முடியாது!

இனிமேல் கண்டுபிடிக்கவே முடியாது!

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைட் ஆன்லைன் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி செய்யலாம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட நபர் உங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை பார்க்க கூடாது என்று நீங்கள் நினைத்தால்.. அவரிடம் இருந்து மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்க முடியும்!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

அதெப்படி?

அதெப்படி?

முன்னதாக, 'லாஸ்ட் சீன்' அம்சத்தை முடக்கும் ஒரு விருப்பம் அறிமுகம் செய்யப்பட்டது அல்லவா? அதே போலத்தான் இந்த 'ஹைட் ஆன்லைன்' அம்சமும் வேலை செய்யும்.

ஒருவேளை, ஹைட் ஆன்லைன் அம்சத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்க விரும்பினால் கீழ்வரும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக செய்யவும்.

வாட்ஸ்அப்பில் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைப்பது எப்படி?

- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும்.

- பின்னர் ஸ்க்ரீனில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை (three dots) க்ளிக் செய்யவும்.

- இப்போது செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்து, அதை தொடர்ந்து அக்கவுண்ட் (Account) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- பின்னர் ப்ரைவஸி (Privacy) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- ப்ரைவஸிக்குள் சென்றதும் லாஸ்ட் சீன் அன்ட் ஆன்லைன் (Last Seen and Online) என்கிற அம்சம் அணுக கிடைக்கும். அதை கிளிக் செய்யவும்.

- இப்போது "யாரெல்லாம் உங்களின் லாஸ்ட் சீன்-ஐ பார்க்கலாம்" (Who can see my last seen) என்பதன் கீழ் 4 விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

01. Everyone (எல்லோரும்)
02. My contacts (என் காண்டாக்ட்ஸில் இருப்பவர்கள்)
03. My contacts except.. (என் காண்டாக்ட்ஸில் இருந்து சிலர் மட்டும் பார்க்க கூடாது..)
04. Nobody (யாருமே பார்க்க கூடாது)

மேற்கண்ட 4 விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்!

கடைசியாக..

கடைசியாக..

- Who can see my last seen என்கிற விருப்பங்களின் கீழ் "நான் ஆன்லைனில் இருக்கும்போது யார் எல்லாம் பார்க்கலாம்" (Who can see when I'm online) என்கிற விருப்பம் அணுக கிடைக்கும்.

- அதன் கீழ் உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும்

01. Same as last seen (லாஸ்ட் சீன் விருப்பத்தில் தேர்வு செய்ததை போலவே)
02. Everyone (அனைவருக்கும்)

மேற்கண்ட இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும். அவ்வளவு தான் - வேலை முடிந்தது. இனிமேல் எல்லோராலும் உங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை பார்க்க முடியாது!

Best Mobiles in India

English summary
New top-level privacy feature now available in WhatsApp, hide your online status just like last seen

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X