Facebook, WhatsApp-ஐ தொடர்ந்து.. மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா!

|

பழைய நோக்கியா மொபைல் போன்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றிய காலத்திலேயே.. ப்ராக்கெட் (Bracket), ஹைஃபன் (Hyphen) போன்ற சிம்பிள்களை (Symbol) வைத்து சிரிக்கும் முகம், முறைக்கும் முகம், கண்ணடிக்கும் முகம் போன்ற உருவங்களை உருவாக்கி.. எஸ்எம்எஸ் அனுப்பி மகிழ்ந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

ஆம் எனில், தற்கால Emoji-களுக்கு (ஈமோஜிகளுக்கு) அடித்தளம் போட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

டைப்பிங்கிற்கு வேலையே இல்லை.. எங்கும் எதிலும் ஈமோஜிக்கள்!

டைப்பிங்கிற்கு வேலையே இல்லை.. எங்கும் எதிலும் ஈமோஜிக்கள்!

வாட்ஸ்அப் அறிமுமான ஆரம்ப காலத்தில் மட்டுமே, மணிக்கணக்கில் டைப் செய்து மெசேஜ் அனுப்பினோம். காலம் போக போக நம்முடைய உரையாடல்களில் ஈமோஜிக்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது!

இப்போது Hi தொடங்கி Bye வரை, எல்லாமே ஈமோஜிக்கள் தான்! அப்படியான ஈமோஜிக்கள் இப்போது எங்கு வரை வந்துள்ளது என்று தெரியுமா?

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

Google Docs வரை வந்துள்ளது!

Google Docs வரை வந்துள்ளது!

அட ஆமாங்க! Google நிறுவனம் இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதன் Google Docs-இல் (கூகுள் டாக்ஸில்) ஈமோஜி ரியாக்ஷனை அறிமுகம் செய்தது.

அதனை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் ஈமோஜிக்கள் தொடர்பான ஒரு புதிய ஷார்ட்-கட்டை (குறுக்குவழியை) அறிமுகம் செய்துள்ளது.

இனிமேல் காப்பி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

இனிமேல் காப்பி செய்ய வேண்டிய அவசியம் இல்லை!

Google Docs-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஈமோஜி ஷார்ட்-கட் ஆனது, நீங்கள் ஒரு டாக்கில் எழுதிக் கொண்டு இருக்கும் போது, மிகவும் சுலபமாக ஒரு ஈமோஜியை சேர்க்க உதவும்.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இந்த புதிய அம்சத்தின் மூலம், நீங்கள் ஒரு டாக்கின் மற்ற இடங்களிலிருந்து ஐகான்களை காப்பி செய்து (நகலெடுத்து) பேஸ்ட் செய்ய (ஒட்ட) வேண்டிய அவசியம் இல்லை!

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

Text-க்கு ஏற்ற Emoji!

Text-க்கு ஏற்ற Emoji!

கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய வலைப்பதிவு ஒரு வழியாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஈமோஜி ரியாக்ஷனை தொடர்ந்து, கூகுள் டாக்ஸில், நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ற ஈமோஜிகளை சேர்க்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் வழியாக நீங்கள் உங்களின் உணர்ச்சிகளை இன்னும் எளிமையாக வெளிப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

மிகவும் எளிது! Google Docs-இல் நீங்கள் டைப் செய்யும் ஒரு வார்த்தைக்கு ஏற்ற ஒரு ஈமோஜியை (எதில் இருந்தும் காப்பி செய்யாமல்) நேரடியாக சேர்க்க விரும்பினால்..வெறுமனே '@' என்று டைப் செய்யவும். அதை தொடர்ந்து '@smile' என்று டைப் செய்யவும். அவ்வளவு தான்.. ஸ்மைலிங் பேஸ் ஈமோஜி ரெடி!

இந்த புதிய அம்சத்தின் கீழ் நீங்கள் ஈமோஜிகளின் டிராப்-டவுன் லிஸ்டையும் அணுகலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் '@:' அல்லது ':' என்று டைப் செய்ய வேண்டும். அதை தொடர்ந்து ஈமோஜிகளின் முழு பட்டியலையும் அணுகும் விருப்பம் உங்களுக்கு கிடைக்கும்.

அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!அடச்சே! Gmail-ல இப்படி ஒரு 'சீக்ரெட்' இருக்குனு.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

அடுத்த 15 நாட்களில்?

அடுத்த 15 நாட்களில்?

கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, Google Docs-இல் சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய ஈமோஜி ஷார்ட்-கட் ஆனது படிப்படியாகவே வெளியிடப்படும். அதாவது இந்த அம்சம் ஒரே நாளில் அனைவருக்கும் அணுக கிடைக்காது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இது அடுத்த 15 நாட்களில் அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்குமா? அல்லது தேவை இல்லாத ஒரு அம்சமாக இருக்குமா? என்கிற உங்களின் கருத்துக்களை கமெண்ட் செக்ஷன் வழியாக தெரிவிக்கவும்.

மேலும் இதுபோன்ற லேட்டஸ்ட் டெக் நியூஸ்களுக்கு கிஸ்பர்ட் தமிழ் வலைத்தளத்தை ஃபாலோ செய்யவும்!

Best Mobiles in India

English summary
New Shortcut Feature in Google Docs Now You Can Easily Add Emoji with Text Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X