வெளிய சொன்னா அசிங்கம்.. iPhone வச்சி இருக்குற பலருக்கும் "இது" தெரியாது!

|

புது பணக்காரனுக்கும், முதல் முறையாக ஐபோன் வாங்கிய ஆண்ட்ராய்டு யூசருக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது - கொஞ்சம் பந்தா காட்டுவார்கள்!

ஆனால் மறுகையில் உள்ள பலரும், எந்த பந்தாவும் காட்டாமல் சர்வ சாதாரணமாக ஐஓஎஸ் உடன் இரண்டற கலந்து, iPhone-இன் எல்லா "சமாச்சாரங்களையும்" விரல் நுனியில் வைத்து இருப்பார்கள்.

ஒருவேளை நீங்களொரு ஆல்-நியூ  ஐபோன் யூசர் என்றால்?

ஒருவேளை நீங்களொரு ஆல்-நியூ ஐபோன் யூசர் என்றால்?

அதாவது கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்திய நீங்கள், லேட்டஸ்ட் ஆக தான் ஐபோன் யூசராக அவதாரம் எடுத்துள்ளீர்கள் என்றால்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல வகையான ஆப்பிள், ஐபோன் & ஐஓஎஸ் ட்ரிக்ஸ் இங்கே உள்ளன!

அதில் மிகவும் முக்கியமான மற்றும் எளிமையான ஒரு ஐபோன் ட்ரிக்-ஐ பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காண உள்ளோம்.

SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!SharkBot அலெர்ட்! சிக்கிடீங்கனா.. வங்கிகளால் கூட ஒன்னும் செய்ய முடியாது!

இது தெரியலனு வெளிய சொன்னா அசிங்கமா போயிடும்!

இது தெரியலனு வெளிய சொன்னா அசிங்கமா போயிடும்!

"ஆயிரம் தான் இருந்தாலும் ஐபோன் போல வருமா?" என்று வாய் பேசுவதற்கு முன், சில ஐபோன் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்-களையாவது நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால்.. "இதுகூட தெரியல ஐபோன் வாங்கி என்ன புண்ணியம்" என்று 'இன்சல்ட்' பண்ணிடுவாங்க!

அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, முதல்படியாக, உங்கள் ஐபோனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி என்கிற சிம்பிள் ஆன ட்ரிக்-ஐ கற்றுக்கொள்ளலாம் வாருங்கள்!

புது யூசர்களுக்கு, பழைய யூசர்களுக்கு கூட இது தெரியாது!

புது யூசர்களுக்கு, பழைய யூசர்களுக்கு கூட இது தெரியாது!

ஆம்! புதிய ஐபோன் யூசரக்ளுக்கு மட்டும் அல்ல, சில பழைய ஐஓஎஸ் யூசர்களுக்கும் கூட தத்தம் ஐபோனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? சரிபார்ப்பது எப்படி? என்று தெரியாது.

IMEI நம்பர் எனபது உங்கள் மொபைலுக்கான தனித்துவமான அடையாளங்காட்டியாகும், மேலும் இது பல சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

குறிப்பாக..!

குறிப்பாக..!

உங்கள் ஐபோன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, உங்கள் டிவைஸ்-ஐ கண்காணிக்க அதன் IMEI நம்பர் மிகவும் முக்கியமான ஒரு தேவை ஆகும்.

உங்கள் அடையாளத்தை (Identity) சரிபார்க்கவும், உங்களுக்கான சேவையை செயல்படுத்தவும் கூட மொபைல் நெட்வொர்க்குகளால் IMEI நம்பர் பயன்படுத்தப்படுகிறது.

ஆகமொத்தம் மொபைல் நம்பருக்கு இணையாக IMEI நம்பரும் முக்கியம்!

ஆகமொத்தம் மொபைல் நம்பருக்கு இணையாக IMEI நம்பரும் முக்கியம்!

உண்மைதான்! ஏனெனில் உங்கள் ஐபோன் ஒரு குறிப்பிட்ட கேரியரின் பிளாக்லிஸ்டில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் கூட இதை பயன்படுத்தலாம்.

ஒருவேளை உங்கள் ஐபோனின் IMEI நம்பரை எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களுக்கு தெரியாதென்றால்.. அதை அறிந்துகொள்ள உதவும் 3 எளிய வழிகள் உள்ளன.

முதல் வழி - செட்டிங்ஸ் வழியாக IMEI நம்பரை செக் செய்யலாம்; அதெப்படி?

முதல் வழி - செட்டிங்ஸ் வழியாக IMEI நம்பரை செக் செய்யலாம்; அதெப்படி?

- உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்.

- பிறகு General என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து, அதை தொடர்ந்து About என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது Serial number-ஐ தேடவும். அதாவது IMEI நம்பரை தேடவும் (நன்றாக கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்ய அது காணக்கிடைக்கும்)

- உங்களின் IMEI நமபர் தொடர்பான தகவலை Apple registration அல்லது Support forms-இல் பேஸ்ட் செய்ய, குறிப்பிட்ட IMEI நம்பரை 'காப்பி' செய்ய அதை 'டேப்' செய்து 'ஹோல்ட்' செய்யவும்; அவ்வளவு தான்!

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

Settings-இல் கிடைக்கவில்லை என்றால்?

Settings-இல் கிடைக்கவில்லை என்றால்?

செட்டிங்ஸ் ஆப் வழியாக உங்கள் ஐபோனின் IMEI நம்பரை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், உங்கள் ஐபோனின் பின்புறத்தை பார்க்கலாம். ஏனெனில் பழைய மாடல்களில், அந்தந்த போனின் IMEI நம்பர் அந்த பேக்கேஸில் பொறிக்கப்பட்டுருக்கும்.

அப்படியும் இல்லை என்றால், *#06# என்று டயல் செய்வதன் மூலமும் உங்கள் ஐபோனின் IMEI நம்பரை அறிந்துகொள்ளலாம்!

Best Mobiles in India

English summary
New iPhone User Must Need To Know This Basic iOS Trick How to Check IMEI Number or Serial Number

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X