சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!

|

வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்தும் சில அதிர்ஷ்டசாலி பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு சமீபத்திய அம்சத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால், உடனே தெரிந்து கொள்ளவும்!

அதென்ன அம்சம்? அதனால் என்ன பயன்? உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் குறிப்பிட்ட அம்சம் அணுக கிடைக்கிறதா என்பதை செக் செய்வது எப்படி?

சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே!

சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே!

தன் பயனர்கள் வேறு எந்தவொரு மெசேஜிங் சேவைக்கும் சென்று விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக பணியாற்றும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் என்றால் - அது வாட்ஸ்அப் தான்!

சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில், 'கிரியேட் போல்ஸ்' (Create polls) என்கிற ஒரு அம்சம் அறிமுகமானது. இது ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி கருத்துக்கணிப்புகளை நிகழ்த்தி, அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர உதவும் ஒரு அம்சம் ஆகும்.

அதனை தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மேலுமொரு புதிய அம்சம் (New Feature) அறிமுகமாகி உள்ளது. இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், அந்த அம்சம் - தற்போது வரையிலாக - சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது!

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

நாம் இங்கே பேசும் புதிய வாட்ஸ்அப் அம்சத்தின் பெயர் - வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு (WhatsApp Ccontact Card) என்பதே ஆகும். நீங்கள் விண்டோஸ் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு இந்நேரம் இந்த அம்சம் அணுக கிடைக்கலாம்

வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WabetaInfo) வழியாக வெளியான ஸ்க்ரீன்ஷாட்டின் படி, இந்த புதிய அம்சத்தின் கீழ் - ஒரே சாட் ஷேர் ஷீட்டில் (Chat Share sheet) காண்டாக்ட் கார்டுகளை (Contact Card) பகிர முடியும். அதாவது - இந்த புதிய அம்சத்தின் வருகையால் - உங்கள் அட்ரெஸ் புக்கில் (Address Book) காண்டாக்ட்களை மிகவும் எளிதாக சேர்க்க முடியும்!

இது உங்களுக்கு கிடைக்கிறதா.. செக் செய்வது எப்படி?

இது உங்களுக்கு கிடைக்கிறதா.. செக் செய்வது எப்படி?

சுவாரசியமான விடயம் என்னவென்றால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் இந்த புதிய வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு அம்சத்தை - கைமுறையாக - இயக்க வேண்டிய அவசியமே இல்லை!

நீங்கள் வாட்ஸ்அப்பின் விண்டோஸ் வெர்ஷனுக்குள் நுழைந்ததுமே.. ஸ்க்ரீனில் இடது பக்கத்தின் கீழே உள்ள என்ட்ரி பாயிண்ட்டில் "காண்டாக்ட்ஸ்" (Contacts) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதாவது ஃபைல் (File), ட்ராயிங் (Drawing) மற்றும் Poll (போல்) ஆப்ஷன்களுக்கு இடையே காண்டாக்ட்ஸ் என்கிற ஆப்ஷன் அணுக கிடைக்கும்!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

அதை கிளிக் செய்தால்..?

அதை கிளிக் செய்தால்..?

காண்டாக்ட்ஸ் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், ஷேர் காண்டாக்ட் (Search Contact) என்கிற விண்டோ தோன்றும், அதனுள் சேர்ச் செய்வதற்கான சேர்ச் பாக்ஸும் (Search Box) இருக்கும்.

அதில் விருப்பப்படும் காண்டாக்ட் பெயரை டைப் செய்ய தொடங்கியதுமே, அது தொடர்பான விவரங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கும். அவ்வளவு தான் - அதை கிளிக் செய்து, ஷேர் செய்துவிட வேண்டியது மட்டுமே மிச்சம்!

மேலும், நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை போலவே, இந்த அம்சமும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் (End-to-end encrypted) செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ஷேர் செய்யப்படும் மொபைல் நம்பர்களின் பாதுகாப்பிற்கு எந்த குறையும் இருக்காது.

பின்குறிப்பு:

பின்குறிப்பு:

முன்னரே குறிப்பிட்டபடி, காண்டாக்ட் கார்டுகளை பகிரும் திறன் தற்போது ஒரு சில பீட்டா பயனர்களுக்கு (Beta Users) மட்டுமே அணுக கிடைக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் வழியாக அணுக கிடைக்கும் விண்டோஸ் 2.2247.2.0 அப்டேட்டிற்கான (Windows 2.2247.2.0 update) வாட்ஸ்அப் பீட்டா வழியாகவே இது கிடைக்கிறது.

வரும் நாட்களில், இந்த அம்சம் மேலும் பல பீட்டா டெஸ்ட்டர்களுக்கு (Bete Testers) விரிவுபடுத்தப்படலாம். பின்னர் அனைத்து விண்டோஸ் பயனர்களுக்கும் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

Best Mobiles in India

English summary
New Helpful Feature Added in WhatsApp Called Contact Cards How it will be Useful

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X