Home
How to

GAS புக்கிங் செய்ய படாதபாடு.. ஜூன் 30 கதை முடிந்தது.. இதை மட்டும் பண்ணிடுங்க.. PNG இணைப்பை பெறுவது எப்படி?

இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை (LPG Gas Cylinder) பெரும்பாலான வீடுகள் நம்பி இருப்பதால், தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனாலேயே பிஎன்ஜி (PNG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் குழாய் வழி கேஸ் (Piped Natural Gas) இணைப்பை விரிவுப்படுத்துவதில் இந்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை ஆன்லைனில் எளிதாக பெற்று கொள்ளலாம்.

பிஎன்ஜி இணைப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
படி 1: இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited) அல்லது மஹாநகர் கேஸ் லிமிடெட் (Mahanagar Gas Limited) ஆகிய கேஸ் சப்ளையரின் இணைப்பு உங்களது பகுதிக்கு கிடைக்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
படி 2: கிடைக்கும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லுங்கள். புதிய பிஎன்ஜி இணைப்பு விருப்பத்துக்கு செல்லுங்கள்.
படி 3: இப்போது, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி குறித்த விவரங்கள் கேட்கப்படும். இதில் ஆதார் மற்றும் முகவரிக்கான சான்று உள்ளிட்டவை ஆவணங்களை பதிவேற்ற வேண்டி இருக்கும்.
படி 4: இணைப்புக்கான கட்டணம், பதிவுக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான பேமெண்ட் பேஜ் தோன்றும். இதில் செலுத்தி கொள்ளலாம்.
படி 5: விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அதற்கான குறிப்பு எண்ணை (Reference Number) எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

GAS புக்கிங் செய்ய படாதபாடு.. ஜூன் 30 கதை முடிந்தது.. இதை பண்ணுங்க!

இந்த விவரங்களின் அடிப்படையில் கேஸ் சப்ளையரின் சரிபார்ப்பு செயல்முறை தொடங்கும். பிறகு நுகர்வோரை தொடர்புகொண்ட இணைப்புக்கான பணி தொடங்கப்படும். போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.

முகவரி சான்றுக்கு மின்சாரக் கட்டண ரசீது, பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டண ரசீது, வாடகை ஒப்பந்தம், ரேஷன் அட்டை அல்லது சொத்து வரி ரசீது உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம். உரிமை சான்றாக பத்திரம், பங்கு சான்றிதழ் அல்லது சொத்து வரி ரசீது கொடுக்கலாம். வாடகை வீடாக இருந்தால் தடையில்லாச் சான்றிதழ் (NOC) கொடுக்கலாம்.

இதை வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பெறலாம். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும். இதை எல்லாம் தயார் செய்து வைத்து கொண்டு பிஎன்ஜி இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். பிஎன்ஜி கேஸ் இணைப்பை பெற்ற பிறகும் எல்பிஜி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்து பயன்படுத்த முடியாது.

புதிய விதிகளின்படி ஒரே முகவரியில் எல்பிஜி சிலிண்டர் மற்றும் குழாய் வழி கேஸ் (PNG) ஆகிய இரண்டு இணைப்பு கட்டாயம் இருக்கக் கூடியாது. ஏற்கனவே பிஎன்ஜி இணைப்பை பெற்றிருக்கும் நுகர்வோர்கள் எல்பிஜி கேஸ் பெற்றுவந்தால், அந்த இணைப்பை வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், ரத்து செய்யப்பட்டுவிடும்.

பிஎன்ஜி இணைப்பை பெற்றுவந்து, அந்த இணைப்பு இல்லாத பகுதிக்கு செல்லும்போது மட்டும் மீண்டும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை பெற்று கொள்ளலாம். இதற்காக டிராஸ்பர் வவுச்சரை நுகர்வோர்கள் பெற்று கொள்ளலாம். இது புதிய முகவரிக்கு குடியேறுதல், வாடகை வீட்டை மாற்றுதல் உள்ளிட்டவைக்கு பொருந்தும். ஆகவே, டிராஸ்பர் வவுச்சரை பெறலாம்.

சிலிண்டர் புக்கிங் இன்டர்வெல் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இனிமேல் நகரப் புறங்களில் இருப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப் புறங்களில் இருப்பவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே அடுத்த சிலிண்டரை புக் செய்து கொள்ள முடியும். இந்த இடைவெளி 21 நாட்களாக இருந்துவந்தது. இப்போது, மாற்றப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
New Gas Cylinder Rules June 2026 For LPG PNG How to get PNG Gas Connection Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X