நேற்று முதல்.. WhatsApp-ல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் 1:1 அம்சம்! எந்த Setting-ல் தேடினால் கிடைக்கும்?

|

தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், அதன் ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குமான ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது - அது 1:1 என்கிற ஒரு அம்சம் ஆகும்!

அப்படி என்றால் என்ன? இந்த அம்சம் எதற்காக பயன்படும்? இதை எப்படி பயன்படுத்துவது? எங்கே சென்று தேடினால் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பாராக்கலாம்!

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

மெட்டாவுக்கு (Meta) சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப் - நேற்று, அதாவது நவம்பர் 28 ஆம் தேதியன்று - அதன் ஒட்டுமொத்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது

அதுவொரு 1:1 சாட் அம்சம் (1:1 Chat Feature) ஆகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் அது மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) என்கிற அம்சம் ஆகும்!

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

இது எதற்கு பயன்படும்?

இது எதற்கு பயன்படும்?

இரத்தினச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் - மெசேஜ் யுவர்செல்ஃப் என்றால்.. வாட்ஸ்அப் வழியாக உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ள உதவும் ஒரு அம்சம் ஆகும்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - உங்களுக்கு நீங்களே சில குறிப்புகளை (Notes), நினைவூட்டல்களை (Reminders), என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் ஷாப்பிங் பட்டியல்களை (Shopping List) அல்லது மற்ற விவரங்களை டெக்ஸ்ட் மெசேஜ் வடிவில் (Text Message Format) அனுப்பி கொள்ள விரும்பினால், இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்!

இதன் கீழ் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டும் தான் அனுப்ப முடியுமா?

இதன் கீழ் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டும் தான் அனுப்ப முடியுமா?

இல்லவே இல்லை! மெசேஜ் யுவர்செல்ஃப் என்கிற அம்சத்தின் கீழ் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமின்றி - உங்களுக்கு நீங்களே - புகைப்படங்கள் (Photos), வீடியோக்கள் (Videos) மற்றும் ஆடியோவை (Audio) கூட ஷேர் செய்து கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த புதிய அம்சமானது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. வாட்ஸ்அப் வழியாக மற்றவர்களுடன் சாட் செய்வது எவ்வளவு எளிதான காரியாமோ.. அதே போல தான் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் வழியாக உங்களுடன் நீங்களே சாட் செய்வதும் மிகவும் எளிது!

சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!

அதை செய்வது எப்படி?

அதை செய்வது எப்படி?

WhatsApp-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Message Yourself என்கிற அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

- முதலில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக.. உங்களுக்கு வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் வந்து இருக்கிறதா என்று சரிபார்க்கவும்!

ஒருவேளை வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட் (WhatsApp Latest Update) உங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றால் அதிகபட்சம் ஒருவாரம் காத்திருங்கள். அதற்குள் வந்துவிடும்!

ஒருவேளை லேட்டஸ்ட் அப்டேட் வந்து இருந்தால்?

ஒருவேளை லேட்டஸ்ட் அப்டேட் வந்து இருந்தால்?

- உங்களுக்கு வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட் அணுக கிடைத்தால், அதை உடனே இன்ஸ்டால் (Install) செய்யவும்.

- பின்னர் வாட்ஸ்அப்பை திறந்து, காண்டாக்ட்ஸ்-க்கு (Contacts) சென்றால் அங்கே உங்களின் சொந்த வாட்ஸ்அப் நம்பர் (Own WhatsApp Number) இருப்பதை காண்பீர்கள். அதன் கீழ் "Message Yourself" என்கிற டேக்லைனையும் காண்பீர்கள்!

- அதை கிளிக் செய்யவும்; பின்னர் ஒரு புத்தம் புதிய சாட் விண்டோ (Chat Window) ஓப்பன் ஆகும்.

- அதன் வழியாக உங்களுடன் நீங்களே சாட் செய்துகொள்ள முடியும் (Chat Yourself). அதாவது நீங்கள் எதை அனுப்பினாலும் அது உங்களுக்கான ஒரு உடனடி மெசேஜ் ஆக வந்து சேரும் மற்றும் அதற்கு உடனடி ப்ளூ டிக்ஸ்களும் (Blue Ticks) கிடைக்கும்!

அவ்வளவு தான்! இப்போதே முயற்சி செய்து பார்க்கவும்!

Best Mobiles in India

English summary
WhatsApp added New 1:1 Chat Feature called Message Yourself Which Helps You to send Text Messages, Photos, Videos and Even audios. Here is hoe to use this New feature.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X