ஏமாந்துடாதீங்க.. புது AC வாங்கும் போது இந்த 6 விஷயத்தை பத்தியும் மறக்காம கேளுங்க!
ஸ்ஸப்பா.. இப்போவே வெயிலு இந்த கொளுத்து கொளுத்துதே.. போகப்போக இன்னும் உக்கிரமா இருக்குமே.. பேசாம ஒரு ஏசி (AC) வாங்கி வீட்டுல மாட்டிடலாமா என்கிற யோசனை உங்களுக்குள் ஓடிக்கொண்டு இருந்தால்.. கவலையை விடுங்கள் - நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
ஏனென்றால், நீங்கள் வாங்கும் ஏசியின் கம்பெனி மற்றும் அதன் விலையை பொருட்படுத்தாமல்.. எந்தவொரு ஏசியை வாங்கினாலும் சரி அதைப்பற்றி கட்டாயம் கேட்டு விசாரிக்க வேண்டிய 6 முக்கியமான விஷயங்களை பற்றிய தொகுப்பே இது. அதென்ன விஷயங்கள்? வாருங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

01. ஸ்டார் ரேட்டிங் (Star Rating): நீங்கள் வாங்கும் ஏசியின் ஸ்டார் ரேட்டிங் என்னவென்பதை கட்டாயம் பார்த்தோ அல்லது கேட்டோ தெரிந்துகொள்ளவும். குறைந்தபட்சம் 3-ஸ்டார் ரேட்டிங் (3-Star Rating) இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாக இருந்தால் 5-ஸ்டார் ரேட்டிங் (5-Star Rating) உள்ள ஏசியை வாங்கவும்.
ஏனென்றால் அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியானது அதிக ஆற்றல் திறன் (Energy Efficient) கொண்ட ஏசியாக இருக்கும். அதாவது 3-ஸ்டார் ரேட்டிங் ஏசியை விட 5-ஸ்டார் ஏசியின் செயல்திறன் சிறப்பானதாக இருக்கும். மேலும் அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசிகள் நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை (Electricity Bill) சேமிக்கவும் உதவும்.
02. காப்பர் கம்ப்ரஸர் (Copper compressor): புதிய ஏசி வாங்கும் போது அதில் சரியான கம்ப்ரஸர் (Compressor) இருப்பதை உறுதி செய்யவும். அதில் காப்பர் கம்ப்ரஸர் இருந்தால் மிகச்சிறப்பு! ஏனென்றால் காப்பர் கம்ப்ரஸர் மிகவும் நம்பகமான கம்ப்ரஸராகும், மேலும் அவைகள் நீடித்தும் உழைக்கும்.
கண்டிப்பாக, காப்பர் கம்ப்ரஸர் உடன் வரும் ஏசியின் விலையானது சாதாரண கம்ப்ரஸர் உடன் ஏசியை விட சற்று அதிகமாக இருக்கும் தான். ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் திறமையாக செயல்படும் மற்றும் ஏசியில் ஏற்படும் சேதத்தை எதிர்ப்பதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் ஏசி ரிப்பர் (AC Repiar) தொடர்பான செலவுகளை தடுக்கும் அல்லது குறைக்கும்.
03. இன்வெர்ட்டர் டெக்னாலஜி (Inverter Technology): நீங்கள் வாங்கும் புதிய ஏசியில் இன்வெர்ட்டர் டெக்னாலஜி உள்ளதா? இல்லையா? என்பதை மறக்காமல் கேட்டு தெரிந்து கொள்ளவும். ஏனென்றால் ஒரு ஏசியில் கட்டாயம் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சங்களில் இன்வெர்ட்டர் டெக்னாலஜியும் ஒன்றாகும்!
இன்வெர்ட்டர் டெக்னாலஜியானது முழு கம்ப்ரஸரையும் ஆன் (ON) மற்றும் ஆஃப் (OFF) செய்வதற்கு பதிலாக, ஏசியின் கேப்பாசிட்டியை (Capacity) மேனுவல் ஆக அட்ஜெஸ்ட் (Manual Adjustment) செய்வதன் மூலம் அந்த ஏசியின் செயல்திறனை அதிகரிக்க உதவும். அதிக அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஒரு அறையில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்க வேண்டுமென்றால் இன்வெர்ட்டர் ஏசிகள் தான் பெஸ்ட்!
04. ஈகோ ஃப்ரெண்ட்லி ஆர்-32 கேஸ் (Eco-friendly R-32 Gas): புதிய ஏசி வாங்கும் போது, அது ஆர்-32 கேஸை பயன்படுத்துகிறதா என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவும். ஏனென்றால் ஆர்-32 கேஸ் ஆனது சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைவான அளவிலேயே தீங்கு விளைவிக்கும்.
05. வாரண்டி (Warranty): பெரும்பாலான ஏசிகள் 1 ஆண்டுக்கான என்டையர் ப்ராடெக்ட் வாரண்டி (Entire Product Warranty) உடன் வருகின்றன. இருப்பினும் சில பிராண்டுகள் ஏசிக்குள் இருக்கும் கம்ப்ரஸர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான உத்தரவாதத்தை வழங்குகின்றன. எனவே நீங்கள் வாங்கும் ஏசியின் கம்ப்ரஸருக்கு எத்தனை ஆண்டுகள் வாரண்டி என்பதை கேட்டு தெரிந்துகொள்ளவும்.
06. இன்ஸ்ட்டாலேஷன் கட்டணங்கள் (Installation Charges): உங்களுக்கு பிடித்த ஏசியை தேர்வு செய்ததுமே, அந்த ஏசியின் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணங்கள் பற்றி மறக்காமல் விசாரிக்கவும். அதாவது அந்த ஏசியின் இன்ஸ்ட்டாலேஷன் இலவசமாக செய்து தரப்படுமா அல்லது அதற்கென தனி கட்டணங்கள் உள்ளதா என்பதை முன்னரே விசாரித்து கொள்ளவும். இல்லையென்றால் இன்ஸ்ட்டாலேஷனுக்காக வீணாக செலவு செய்ய வேண்டியிருக்கும்!


Click it and Unblock the Notifications








