Home
How to

ஒரு ஹோட்டல் ரூமில் எங்கெல்லாம் ரகசிய கேமராவை மறைத்து வைக்க முடியும்? சில நொடிகளில் அதை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரு முறையும் ஒரு ஹோட்டல் அறைக்குள் (Hotel Room) நுழையும் போது, இங்கே ரகசிய கேமராக்கள் (Hidden Camera) பொருத்தப்பட்டு இருக்குமோ? நம்முடைய நடவடிக்கைகள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்படுகிறதோ? என்கிற சந்தேகம் அல்லது அச்சம் உங்களுக்கு எழுந்தால்.. நீங்கள் மட்டுமே அப்படி நினைக்கவில்லை!

பலருக்கும் இதே சந்தேகம், பயம் இருக்கத்தான் இருக்கிறது. பலரும் இந்த விஷயத்தில், தங்களுடைய குருட்டுத்தனமான நம்பிக்கையை பயன்படுத்துவார்கள். அதாவது "இங்கே ரகசிய கேமராக்கள் எல்லாம் இருக்காது" என்று தங்களை தாங்களே தேற்றிக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, தாங்கள் தாங்கும் ஹோட்டல் அறைகளில் ஏதேனும் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை கைமுறையாக சோதித்து பார்ப்பார்கள்.

ஒரு ஹோட்டல் ரூமில் எங்கெல்லாம் ரகசிய கேமராவை மறைத்து வைக்க முடியும்?

ஒருவேளை நீங்களும் இதை செய்ய விரும்பினால்.. அதாவது சீக்ரெட் கேமராக்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க விரும்பினால்.. ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததுமே நீங்கள் சோதித்து பார்க்க வேண்டிய 7 இடங்களை பற்றி நீங்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஹிட்டன் கேமராக்களை கண்டறிய உதவும் "ஆஃப் லைட் டெக்னீக்"கையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

01. வினோதமான பொருட்கள்: ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததுமே, வழக்கமான ஹோட்டல் அறைக்குள் இடம்பெறாத அல்லது சம்பந்தமே இல்லாத அல்லது மிகவும் வினோதமான பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்று செக் செய்யவும். குறிப்பாக தேவை இல்லாத இடத்தில் இருக்கும் கண்ணாடிகள் அல்லது அலங்கார பொருட்களை செக் செய்யவும். அவைகளுக்குள் சீக்ரெட் ஹிட்டன் கேமராக்கள் இருக்கலாம்!

02. சீலிங் ஃபேன்: நீங்கள் தங்கும் ஓட்டல் அறையில் உள்ள மின்விசிறியின் மையத்தில், மொபைலின் ஃப்ளாஷ் லைட்டையோ அல்லது டார்ச் லைட்டையோ ஒளிர செய்யவும். அங்கே ஏதேனும் சிவப்பு நிற ஒளி தென்படுகிறதா என்று பார்க்கவும். இல்லையென்றால் அதனுள் சீக்ரெட் கேமரா எதுவும் இல்லை என்று அர்த்தம்.

03. மற்ற எலெக்ட்ரிக்கல் டிவைஸ்கள்: பெரும்பாலான ஹிட்டன் கேமராக்களுக்கு பவர் சோர்ஸ் (Power Source) தேவைப்படுகிறது. எனவே உங்கள் அறையில் உள்ள மற்ற எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களையும் செக் செய்யவும். அவைகளில் கூடுதல் வயர்கள் உள்ளதா அல்லது ஒளிரும் விளக்குகள் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

04. டிவி, ஸ்பீக்கர் மற்றும் மியூசிக் சிஸ்டம்: நம்பினால் நம்புங்கள்! ஒரு ஸ்பீக்கர் அல்லது ஒரு மியூசிக் சிஸ்டமின் ஸ்பீக்கர் மெஷ் அல்லது டிவிகளுக்குள் மிகவும் எளிதாக ஒரு சீக்ரெட் கேமராவை வைக்க முடியும். வழக்கம் போல ஃபிளாஷ் லைட் அல்லது டார்ச் மூலம் அவைகளை கண்டறிய முயற்சிக்கவும்; முடியவில்லை என்றால் குறிப்பிட்ட டிவைஸின் ஒட்டுமொத்த கனெக்ஷனையும் துண்டித்து விடவும்.

05. கொக்கிகள் அல்லது டவல் ஹோல்டர்கள்: நீங்கள் தங்கும் ஹோட்டல் அறைகளில் உள்ள குளியலறையை மறக்காமல் சோதிக்கவும். முக்கியமான கொக்கிகள் (Hooks) அல்லது டவல் மற்றும் ஹேர் ட்ரையர் ஹோல்டர்களை சரிபார்க்கவும். இவைகளுக்கு பின்னல் பின்ஹோல் கேமராக்கள் (Pinhole Camera) மறைக்கப்பட்டு இருக்கலாம்.

06. ஃபயர் அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர்: ஓட்டல் அறைகளில் உள்ள எல்லா ஃபயர் அலாரம் (Fire Alarm) மற்றும் ஸ்மோக் டிடெக்டர்களுமே (Smoke Detectors) உங்கள் பாதுகாப்பானதாக வைக்கப்படுவதில்லை. அதனுள் கூட ஹிட்டன் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கலாம். எனவே அவைகள் மீதும் ஒரு கண் வைக்கவும்.

07. கதவுகள் மற்றும் டிராயர்களில் உள்ள கைப்பிடிகள்: கடைசியாக நீங்கள் செக் செய்ய வேண்டிய இடங்கள்: ஒரு ஹோட்டல் அறையில் உள்ள கதவுகள், அலமாரிகள், டிராயர்களில் உள்ள கைபிடிகளைத்தான். இவைகள் கூட ஹிட்டன் கேமராக்களை வைப்பதறகான பொதுவான இடங்களாக கருதப்படுகின்றன. கூடவே உங்கள் படுக்கை அருகே இருக்கும் திரைச்சீலைகளுக்கு பின்னால் என்ன உள்ளது என்பதையும் ஒருமுறை பார்த்துவிடவும்.

ஆஃப் லைட் டெக்னீக் என்றால் என்ன? ஒருவேளை மேற்கண்ட எல்லா சோதனைகளையுமே செய்ய விருப்பம் இல்லாதவர்கள்; நேரம் இல்லவதவர்கள், மிகவும் எளிமையான ஆஃப் லைட் டெக்னீக்கை முயற்சி செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் தங்கும் ஓட்டல் அறையில் உள்ள எல்லா விளக்குகளையும் அணைத்து விடவும்.

பின்னர் அந்த அறைக்குள் உள்ள மூலைமுடுக்கெல்லாம் நன்றாக உற்றுப்பார்த்து, ஏதேனும் சிவப்பு நிற ஒளி மினுமினுக்கிறதா அல்லது வெளிப்படுகிறதா என்று பார்க்கவும். ஒருவேளை தென்பட்டால், அதுவொரு சீக்ரெட் கேமராவில் உள்ள லென்ஸின் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். இப்படியாக நீங்கள் தங்கும் ஓட்டல் அறையில் எந்தவிதமான ஹிட்டன் சீக்ரெட் கேமராவும் இல்லை என்பதை உங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Never Forget to Check These 7 Places in Your Hotel Room Where Hidden Camera Secretly Placed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X