அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

|

கோடிகோடியாக பணத்தை கொட்டி.. நாடு முழுவதும் 5ஜி சேவைகளை கொண்டு வருவதற்கான முயற்சியில் "தீயாக வேலை" செய்து வரும் முகேஷ் அம்பானியே கூட வந்து சொன்னாலும் கூட.. நீங்கள் நம்பி விடக்கூடாத 4 பொய்கள் உள்ளன!

அதென்ன பொய்கள்? அவைகளை ஏன் நம்ப கூடாது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

கம்பி கட்டுற கதைகள்!

கம்பி கட்டுற கதைகள்!

யார், என்ன சொன்னாலும் அதை அப்படியே உண்மை என்று நம்புபவர்களும், வாட்ஸ்அப் ஃபார்வேட் மெசேஜ்களின் வழியாக பகிரப்படும் அனைத்து தகவல்களுமே 100% நிஜம் என்று ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கும் வரையிலாக.. தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, அடிப்படையான விஷயங்களில் கூட நம்மால் முன்னேற முடியாது என்பதே நிதர்சனம்!

அப்படியாக கடந்த சில வாரங்களாக.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் - இந்தியாவில் 5ஜி சேவைகள் மெல்ல மெல்ல விரிவடைய தொடங்கியதில் இருந்து.. 5ஜி தொடர்பான பலவகையான பொய்களும், கட்டுக்கதைகளும் கிளிப்பி விடப்பட்டு, மக்களை குழப்பம் அடைய செய்துள்ளன!

அந்த 4 பொய்களும்.. அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இதோ:

பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!பங்கம் செய்த சிங்கத்தின் பிள்ளை.. Airtel யூசர்களே மனச கல் ஆக்கிக்கோங்க.. இல்ல Jio-க்கு மாறிடுங்க!

01. 5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்!

01. 5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்!

ஞாபகம் இருக்கிறதா? 4ஜி சேவைகள் அறிமுகமான போதும் கூட இதே பீதியை தான் கிளப்பினார்கள். அதே பீதி தற்போதும் கிளம்பி உள்ளது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது.

இது ஒரு கட்டுக்கதை என்று நாங்கள் சொல்லவில்லை, நார்வே மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல சுகாதார அதிகாரிகளே கூறுகிறார்கள்.

5ஜி - எந்த உயிரையும் பாதிக்கப் போவதில்லை

5ஜி - எந்த உயிரையும் பாதிக்கப் போவதில்லை

5ஜி-யின் எக்ஸ்போஷர் வரம்பானது (Exposure threshold) ஆண்டெனா இன்ஸ்டாலேஷனின் (Antenna installation) தேவையான தரத்திற்கு கீழே தான் உள்ளது, எனவே, 5ஜி சிக்னல்களின் ரேடியோ அலைகள் (Radio waves of 5G signals) எந்த உயிரையும் பாதிக்கப் போவதில்லை.

அதுமட்டுமின்றி ரேடியோ அலைகள் மின்காந்த நிறமாலையின் அயனியாக்கம் அல்லாத மண்டலத்தில் (Non-ionizing zone of the electromagnetic spectrum) உள்ளன, ஆகையால் எந்தவொரு சேதத்தையும் செய்ய போதுமான ஆற்றலும் அவைகளிடம் இருக்காது!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

02. 4ஜி-க்கும் 5ஜி-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

02. 4ஜி-க்கும் 5ஜி-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது! 4G-க்கும் 5G-க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. லேடன்சி (Latency), பதிவிறக்க வேகம் (Download Speed), பேஸ் ஸ்டேஷன்ஸ் (Base Stations) மற்றும் செல் டென்சிட்டி (Cell Density) போன்றவைகளில் 5ஜி - ஒரு படி அல்ல பல படிகள் முன்னோக்கி இருக்கும்.

5ஜி-யின் கீழ் வினாடிக்கு 20 ஜிபி வரையிலான ஸ்பீட்-ஐ கூட அணுகலாம்; ஹை ரெசல்யூஷன் ஸ்ட்ரீமிங் மற்றும் எச்டி வீடியோக்களை பார்க்கும் அனுபவம் புதியதொரு உச்சத்தை எட்டும். இப்படியாக 5G-யின் கீழ் வரம்பற்ற சாத்தியக்கூறுகளுடன் நீங்கள் பலவற்றையும் செய்ய முடியும்!

03.மொபைல் போன்களுக்கு மட்டுமே 5ஜி!

03.மொபைல் போன்களுக்கு மட்டுமே 5ஜி!

பெரும்பாலான மக்கள், 5G என்பது மொபைல் போன்களுக்கு மட்டுமான ஒரு தொழில்நுட்பம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. 5ஜி என்பது இன்டர்நெட் செயல்படும் விதத்தை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

இது மொபைல் போன்களில் மட்டுமின்றி கேமிங்கில் இருந்து வணிகங்கள் வரை அனைத்திலுமே ஒரு கடுமையான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. எனவே 5ஜி-யின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

04. 5ஜி வந்ததும் Wi-Fi காணாமல் போய் விடும்!

04. 5ஜி வந்ததும் Wi-Fi காணாமல் போய் விடும்!

சிலர் 5ஜி நெட்வொர்க் ஆனது வைஃபை-க்கான மாற்று என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் - இந்த இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பங்கள் ஆகும் மற்றும் வெவ்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

5G ஆனது செல்லுலார் கனெக்டிவிட்டியை வழங்குகிறது, அதேசமயம் Wi-Fi ஆனது வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருக்கும் டிவைஸ்களுக்கான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. ஆக 5ஜி தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் Wi-Fi தொழில்நுட்பத்தை மாற்ற போவதில்லை!

அம்பானியே வந்து சொன்னாலும் நம்பாதீங்க!

அம்பானியே வந்து சொன்னாலும் நம்பாதீங்க!

5ஜி என்பது வெறுமனே ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு முன்னேற்றம் ஆகும், அது ஒரு மைல்கல் ஆகும். இது நம்முடைய இண்டர்நெட் மற்றும் மொபைல் நெட்வொர்க்கை மட்டுமின்றி நம்மையும் மேம்படுத்தப்போகும் ஒரு தொழில்நுட்ப வரம் ஆகும்!

எனவே நாம் மேற்கண்ட 4 பொய்களையும் முகேஷ் அம்பானியே வந்து சொன்னாலும் நம்பிடாதீங்க!

Best Mobiles in India

English summary
Never believe this 4 Lies about 5G Technology especially health risks from 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X