Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே "VIP அந்தஸ்து" தான்!

|

ட்ரூகாலர் ஆப்பில் (Truecaller App) ஒரு சிலருக்கு மட்டும் "விஐபி அந்தஸ்து" கிடைப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதென்னது? அதனால் என்ன பயன்?

அந்த "விஐபி அந்தஸ்து" உங்களுக்கும் வேண்டும் என்றால்.. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அனைவருக்கும் கிடைக்கும்!

அனைவருக்கும் கிடைக்கும்!

ஒருகாலத்தில் வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்த ட்ரூகாலர் ஆப் (TrueCaller App) ஆனது, இப்போது பரவலாக.. ஒவ்வொரு ஸ்மார்ட்போனில் கட்டாயம் காணப்படும் ஒரு ஆப் ஆக உருமாறி உள்ளது!

தெரியாத மொபைல் நம்பர்களிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக நாம் பயன்படுத்தும் ட்ரூகாலர் ஆப்பில் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு "விஐபி அந்தஸ்து" இருக்கிறது என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா?

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

அதென்ன அந்தஸ்து?

அதென்ன அந்தஸ்து?

ட்ரூகாலர் ஆப்பில் கிடைக்கும் "அந்த" அந்தஸ்தை, சிலர் வெரிஃபைடு பேட்ஜ் (Verified Badge) என்பார்கள், சிலர் ப்ளூ பேட்ஜ் (Blue Badge) என்பார்கள் - இரண்டும் ஒன்று தான்!

போலியான நபர்களையும், அவர்களின் முகமூடிகளையும் கிழிக்கும் அதே ட்ரூகாலர் ஆப் தான் ஒரு அழைப்பாளரின் உண்மையான பெயர் - விவரங்கள் மற்றும் அவரின் நேர்மையான பக்கத்தையும் அடையாளம் காட்டுகிறது; அதை ஒருவருக்கான "விஐபி அந்தஸ்து" என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது!?

ட்ரூகாலரில் 'ப்ளூ பேட்ஜ்' வாங்குவது எப்படி?

ட்ரூகாலரில் 'ப்ளூ பேட்ஜ்' வாங்குவது எப்படி?

ட்ரூ காலரில் உங்களுக்கான ப்ளூ பேட்ஜ் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களில் பலரும் நினைக்கும்படி, ப்ளூ பேட்ஜ் (Blue Badge) வாங்குவதொன்றும் மிகவும் கடினமான செயல்முறை அல்ல. ட்ரூகாலர் ஆப்பில் முகமூடி அணிய விரும்பாத எவருமே, இதை மிகவும் எளிமையாக பெறலாம்!

ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்!

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்!

- உங்கள் சொந்த பெயரை பயன்படுத்தி உங்களுக்கான ட்ரூகாலர் ப்ரொஃபைலை (Truecaller Profile) உருவாக்கவும் (இது ரிஜிஸ்டர் செய்ததற்கு சமம்)

- பின்னர் ட்ரூகாலர் கம்யூனிட்டி (Truecaller community), நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இணைந்து, உங்கள் பெயர் / அக்கவுண்ட் ஆனது ப்ளூ பேட்ஜிற்கு தகுதியானதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும்!

போலியான பெயரில் அக்கவுண்ட் வைத்து இருந்தால்..?

போலியான பெயரில் அக்கவுண்ட் வைத்து இருந்தால்..?

ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே ஒரு ட்ரூகாலர் அக்கவுண்ட் இருக்கிறது. ஆனால் அதில் உங்களின் நிஜப்பெயர் இல்லை என்றால்.. கவலைப்பட வேண்டாம்!

அதை உங்களின் சொந்த பெயருக்கு மாற்றுவதன் மூலம் கூட, நீங்கள் ப்ளூ பேட்ஜை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்!

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

வேறு என்னென்ன செய்ய வேண்டும்?

வேறு என்னென்ன செய்ய வேண்டும்?

ட்ரூகாலர் ப்ரொஃபைலை உங்களின் நிஜ பெயருக்கு மாற்றியதும், அதை உங்களின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்களுடனும் இணைக்கவும்.

இப்படி செய்வதன் மூலம், ட்ரூகாலர் நிறுவனம் உங்களுக்கு வெரிஃபைடு ப்ளூ பேட்ஜை வழங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்க முடியும்.

எத்தனை நாட்களில் ப்ளூ பேட்ஜ் கிடைக்கும்?

எத்தனை நாட்களில் ப்ளூ பேட்ஜ் கிடைக்கும்?

ட்ரூகாலரின் கூற்றுப்படி, ஒருவருக்கு ப்ளூ பேட்ஜ் கொடுக்கலாமா என்பதை சரிபார்க்க நிறுவனம் அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

ஏனென்றால், ட்ரூகாலர் சிஸ்டம் ஆனது ட்ரூகாலர் கம்யூனிட்டி உடன் நடத்தும் மும்முறை சரிபார்ப்பிற்கு பின்னரே ஒருவருக்கு ப்ளூ பேட்ஜ் வழங்கப்படும்!

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

ப்ளூ பேட்ஜ் வேண்டாம்.. ஆனால் VIP அந்தஸ்து வேண்டுமா?

ப்ளூ பேட்ஜ் வேண்டாம்.. ஆனால் VIP அந்தஸ்து வேண்டுமா?

உங்கள் உண்மையான பெயரை உங்கள் ட்ரூகாலர் ப்ரொஃபைலில் வைத்திருப்பதன் வழியாகவே நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையை பெறலாம்.

நிஜப்பெயர் வழியாக, உங்களின் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை "நல்ல முறையில்" அடையாளம் காண்பர். எனவே நீங்கள் பிளாக் (Block) செய்யப்படுவதில் இருந்தும், உங்கள் அழைப்பு ஏற்கப்படாமல் இருப்பதில் இருந்தும் விலகியே இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
Need Verified Blue Badge on Truecaller App Follow these steps to verify your Account

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X