ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

|

நீங்கள் வீடு அல்லது கார் வாங்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் கடன் கேட்டு ஒரு வங்கிக்கு செல்வதற்கு முன் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான மேட்டர் - சிபில் ஸ்கோர் (CIBIL Score). ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும், சிபில் என்றால் ஒரு நிறுவனம் என்று?

"அட.. போங்கப்பா! சிபில் ஸ்கோர் என்றாலே என்னவென்று தெரியாது? இதுல அது ஒரு கம்பெனினு எனக்கு எப்படி தெரியும்?" என்று கேட்பவரா நீங்கள், இல்லை சிபில் பற்றி எல்லாமே தெரியும்; ஆனால் சிபில் ஸ்கோரை செக் செய்ய தெரியாதா?

இதில் நீங்கள் எந்த வகையாக இருந்தாலும் சரி, கீழே வரும் 'மேட்டர்' உங்களுக்கு நிச்சயம் 'ஹெல்ப்ஃபுல்' ஆக இருக்கும். அதென்ன மேட்டர்?

சிபில் கம்பெனியோட வேலை என்ன?

சிபில் கம்பெனியோட வேலை என்ன?

முன்னரே குறிப்பிட்டபடி சிபில் ​என்பது ஒரு நிறுவனம் ஆகும். அதன் விரிவாக்கம் - கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (Credit Information Bureau India Ltd) என்பதே ஆகும்.

இது இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India - RBI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும் மற்றும் இதன் பிரதான வேலை தனிநபர்கள் மற்றும் பிஸ்னஸிற்கான கிரெடிட் ரிப்போர்ட்கள் மற்றும் ஸ்கோர்களை வழங்குவதே ஆகும்.

சிபில் ஸ்கோர் எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகிறது?

சிபில் ஸ்கோர் எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகிறது?

ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது அவரின் முந்தைய கடன்கள் மற்றும் அதை அவர் திருப்பி செலுத்திய "முறை" மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையிலேயே சிபில் ஸ்கோர் உருவாக்கப்படுகிறது.

WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!

300 என்றால் கம்மி... 900 என்றால் தாறுமாறு!

300 என்றால் கம்மி... 900 என்றால் தாறுமாறு!

மேற்குறிப்பிட்ட தகவல்களானது "ஒருவர் தான் வாங்கிய கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி தருவதற்கான சத்தியம் எவ்வளவு?" என்பதை வங்கியிடம் "கூறும்".

பொதுவாக சிபில் ஸ்கோர் ஆனது 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது, 300 என்பது குறைவான ஸ்கோர் என்றும், 900 என்பது அதிக ஸ்கோர் என்றும் எடுத்துக்கொள்ளப்படும்.

இப்படியாகத்தான் ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் ஆனது அவர் வங்கியில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கிறது.

உங்கள் CIBIL Score-ஐ கண்டுபிடிப்பது எப்படி? அதுவும் FREE-ஆ!

உங்கள் CIBIL Score-ஐ கண்டுபிடிப்பது எப்படி? அதுவும் FREE-ஆ!

- முதலில் அதிகாரப்பூர்வ CIBIL இணையதளத்திற்கு செல்லவும், அதாவது https://www.cibil.com/ க்கு செல்லவும்.

- அங்கே Get your CIBIL Score என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- FAQ செக்ஷனை நோக்கி, அதாவது கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யவும். அங்கே How much do I need to pay to get a CIBIL Credit Report? என்கிற கடைசி கேள்வியை கிளிக் செய்யவும்.

- பின்னர் Free CIBIL Credit Report என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- திறக்கும் பக்கத்தில், Get Your Free CIBIL Score விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அக்கவுண்ட் இல்லை என்றால் புதிதாக உருவாக்க வேண்டும்!

அக்கவுண்ட் இல்லை என்றால் புதிதாக உருவாக்க வேண்டும்!

- இப்போது நீங்கள் ஒரு பக்கத்திற்குள் நுழைவீர்கள், ஒருவேளை உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் இல்லை என்றால், முதலில் ஒரு புதிய அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும்.

உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் அடையாள அட்டை (ஐடி) மற்றும் உங்கள் மொபைல் நம்பர் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

நீங்கள் பான் நம்பர், பாஸ்போர்ட் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ் நம்பர் ரேஷன் கார்டு நம்பர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட "இதை" செஞ்சிடாதீங்க.. SBI எச்சரிக்கை!

ஆல் செட்.. இப்போ செக் பண்ண வேண்டியது தான்!

ஆல் செட்.. இப்போ செக் பண்ண வேண்டியது தான்!

- மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, Accept and Continue என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இப்போது, ​​நீங்கள் கொடுத்த விவரங்களைச் சரிபார்க்க, உங்கள் மொபைல் நம்பருக்கு OTP ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதை உள்ளிட்ட பிறகு Continue என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

- பிறகு ​​Go to dashboard என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும்.

- இப்போது, ​​நீங்கள் myscore.cibil.com என்கிற இணையதளத்திற்கு 'ரீடைரக்ட்' செய்யப்படுவீர்கள்.

- அங்கே Member Login விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- பின்னர் உங்கள் லாக்-இன் விவரங்களை உள்ளிடவும், அதை தொடர்ந்து காணப்படும் டாஷ்போர்டில் உங்கள் உங்கள் CIBIL ஸ்கோர் இருக்கும்; அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Need Bank Loan Urgently Want To Check Your CIBIL Score for Free Online Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X