வங்கி கணக்கு இருக்கா? இந்த முக்கிய தகவல் உங்களுக்கு தான்.. பாதுகாப்பு அவசியம்!

|

டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாது பயன்பாடாக வளர்ந்து விட்டது. மக்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து பணத்தை செலுத்துவதை விட ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த விரும்புகிறார்கள்.

கடைக்கு சென்று பொருள் வாங்கிய உடன் பர்ஸ் எடுக்கும் காலம் மறைந்து கொண்டே வருகிறது. அண்ணா., Scan போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வியானது கடை, ஹோட்டல்களில் பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையின் வளர்ச்சி என்பது அளப்பரியதாக இருக்கிறது.

தினசரி ரூ.20,000 கோடி பரிவர்த்தனை..

தினசரி ரூ.20,000 கோடி பரிவர்த்தனை..

தினசரி ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன எனவும் இது சேவைகளை மேம்படுத்தும் வகையிலும் திறந்த சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் நாள்தோறும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்..

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்..

கையில் பணம் வைத்திருந்தால் செலவாகிவிடும் என்ற காலம் முடிந்து வங்கியில் பணம் வைத்தால் தான் செலவாகிவிடும் என்ற காலம் வந்துவிட்டது.

ஊதியப் பணம் முதல் சேமிப்பு பணம் வரை அனைத்தும் வங்கிக் கணக்கில் தான் இருக்கிறது. அதில் தான் பரிவர்த்தனையும் நடக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது.

எனவே பாதுகாப்பாக கையாளும் வழிமுறைகளை அறிந்து அதை பயன்படுத்துவது அவசியமாகும்.

முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்

முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்

மோசடியை தவிர்க்க பாதுகாப்பாக UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் சில முக்கிய குறிப்புகளை SBI பகிர்ந்துள்ளது.

அதுகுறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். எந்தவொரு UPI கட்டணத்தையும் பயன்படுத்தும் முன் இந்த தகவல்களை அறிந்துக் கொள்வது மிக அவசியம்.

இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள்..

இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள்..

UPI ஆனது எந்தவித காகித ஆவணமும் இன்றி பரிவர்த்தனை செய்யும் முறையாகும். எனவே இந்த டிஜிட்டல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான UPI பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் பகிரப்பட்டுள்ளது.

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் முக்கியமான ஒன்று. இதுதான் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்கிறது. ஒரே கிளிக்கில் உங்களுக்கு விருப்பப்பட்ட தொகையை பகிர முடியும்.

எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

எவ்வளவு வசதிகள் இருக்கிறதோ அதே அளவு பொறுப்புகளும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மிகவும் எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்கும் உதவும் UPI பரிவர்த்தனைகளில் சிறிய கவனக்குறைவு கூட பெரிய விளைவுகளை சந்திக்க வைக்கும்.

சைபர் கிரைம்கள், மோசடிகள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியம். பாதுகாப்பாக இருப்பதற்கான குறிப்புகளை விவரமாக பார்க்கலாம்.

பணத்தை பெறுவதற்கு UPI பின் தேவையில்லை

பணத்தை பெறுவதற்கு UPI பின் தேவையில்லை

UPI மூலம் யாரிடமாவது பணம் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு UPI பின் தேவையில்லை. பணம் அனுப்பும் ஒவ்வொரு நேரத்திலும் இந்த யுபிஐ பின்-ஐ உள்ளிடுவது அவசியம்.

எனவே பணத்தை செலுத்துவதற்கு யாராவது UPI பின் கேட்டால் எச்சரிக்கையா இருத்தல் அவசியம்.

QR ஸ்கேன் முறை

QR ஸ்கேன் முறை

QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது. கடைக்காரர்கள் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை அனைவரும் க்யூஆர் ஸ்கேன் போர்ட் வைத்திருக்கின்றனர்.

QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் போது அது அந்த நபருக்கு சொந்தமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதாவது க்யூஆர் கோட் ஸ்கேன் செய்ததும் அதன் சொந்தக்காரருக்கான பெயர் உங்கள் மொபைலில் காட்டப்படும். அதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

வெளிப்புறத்தில் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும்பட்சத்தில் UPI பின் பதிவிடுவதில் கவனம் தேவை.

அடிக்கடி மாற்றுவது நல்லது..

அடிக்கடி மாற்றுவது நல்லது..

அமேசான் உள்ளிட்ட தளத்தில் பொருட்கள் வாங்கும் போது க்யூஆர் கோட் காட்டப்படும் அதை ஸ்கேன் செய்தாலே எவ்வளவு தொகை என்ற விவரத்துடன் ஒப்புதல் கேட்கும். அதாவது தொகையை நீங்கள் பதிவிடத் தேவையில்லை. எனவே இப்படி ஸ்கேன் செய்யும் தொகை விவரத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களின் UPI பின் என்பது உங்களின் பாதுகாப்பு கோட் ஆகும். அதை ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம்.

ஏடிஎம் பின்னை அடிக்கடி மாற்றுவது போல் UPI பின்னையும் தொடர்ந்து மாற்றுவது நல்ல நடைமுறை ஆகும். தற்செயலாக உங்கள் பின்னை யாராவது நோட்டமிட்டாலும் இந்த நடைமுறை உங்களை பாதிப்பில் இருந்து காக்கும்.

Best Mobiles in India

English summary
Must things to know before doing UPI transaction: Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X