ஒரே சமயத்தில் மழைநீர் மற்றும் சூரிய மின்னாற்றலையும் உற்பத்தி செய்யலாம்: எப்படி?

  இந்தியாவில் அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் ஏராளம். ஆனால், இந்தியாவின் எதிர்காலம் சார்ந்த சிக்கல்களுள் முதன்மையானது நீர்ப் பற்றாக்குறை மற்றும் மின்சாரப் பற்றாக்குறை ஆகிய இரண்டும் ஆகும். இந்த இரண்டு சிக்கல்களையும் ஒரே சமயத்தில் தீர்க்கும் வகையில் யோசித்து ஒரு புதிய கண்டுபிடிப்புடன் வந்திருக்கின்றனர் ஷமித் சோக்சி மற்றும் பிரியா வகில் தம்பதியினர். இவர்கள் இருவரும், மும்பை நகரில் செயல்படும், திங்க் சஸ்டெய்னபில் லேப் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர்கள். சுருக்கமாக, இந்நிறுவனத்தை திங்க்ஃபி (ThinkPhi) என அழைக்கின்றனர். இந்நிறுவனத்தின் வழியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புதான் திங்க்ஃபி ஸ்மார்ட் இன்வெர்டட் அம்பரல்லா (ThinkPhi's smart inverted umbrella ). ஹிந்தியில் இதனை “உல்டா ஷாத்தா” - Ulta Chaata - எனவும் செல்லமாக அழைக்கின்றனர். அகன்ற நிழற்குடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் மழைநீரைச் சேமித்துத் தூய்மைப்படுத்தி பயன்படுத்தவும் முடியும். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும்.

  ஒரே சமயத்தில் மழைநீர் மற்றும் சூரிய மின்னாற்றலையும் உற்பத்தி செய்யலாம்


  இந்தியாவில் பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதி வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தியாவின் காலநிலை சூரிய சக்தியிலிருந்து அதிக அளவு மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் இந்த இரு வளங்களையும் இந்தியாவின் எதிர்கால நன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தினால் என்ன? என்று எழுந்த கேள்வியின் அடிப்படையில் பிறந்ததுதான் இப்புதிய கண்டுபிடிப்பு. “மழைநீர் மற்றும் சூரிய சக்தியின் ஆற்றலை நாம் பழங்காலந் தொட்டே உணர்ந்திருந்தாலும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வராமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது” என்கின்றனர், ஷமித் சோக்சி மற்றும் பிரியா வகில் தம்பதியினர். திங்க்ஃபி அம்பரல்லா அமைப்பின் மூலம், மழைக்காலத்தில் 85,000 லிட்டர் மழைநீரைச் சேமித்து வடிகட்டிப் பயன்படுத்த முடியும். வரட்சியான கால நிலை நிலவும் நாட்களில் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலமாக, 1.5 கிலோ வாட் சூரிய ஆற்றலை இதன் வழியே பெற இயலும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஒரே சமயத்தில் இரண்டு செயல்பாடுகள்

  ஃபி பாக்ஸ் (Phi - Box) என்னும் அமைப்பை மையமாகக் கொண்டு திங்க் ஃபி அம்பரல்லா செயல்படுகிறது. இதில் இருக்கும் சிறந்த வழிமுறை, சூரிய ஆற்றலையும், தூய்மையான குடிநீரையும் ஒரே சமயத்தில் வழங்குவதற்குத் துணை செய்கிறது. சேகரிக்கப்படும் மழை நீரின் அளவு, அதனுடைய தரம் ஆகியவற்றை இது அளவீடு செய்கிறது.

  இதனை நிறுவிப் பயன்படுத்தும் பொழுது வாடிக்கையாளருக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் ஒரு பயன்பாட்டுச் செயலியை உருவாக்கியுள்ளனர். ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், புகார் செய்வதற்கும், உடனடியாக உதவிகள் வழங்குவதற்கும் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

  வடிவமைப்பு

  மேற்கூரை போன்ற வடிவத்தில் உள்ள இந்த ஸ்மார்ட் இன்வெர்டட் அம்பரல்லா பளபளப்பான ஸடெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகளால் உருவாக்கப்படுகிறது. தேவைப்படும் அளவுக்கு ஏற்ப இதனுடைய எடையளவு அமையும். குறைந்தது 100 கிலோ வரை எடையிருக்கும். 4 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்ட மேற் கூரை போன்ற அமைப்பில் சோலார் அமைப்புகள் பொருத்தப் பட்டிருக்கும். இதனுடைய அளவும் தேவைப்படும் தயாரிப்புகளுக்கு ஏற்ப மாறுபடும். தேவைக்கு ஏற்ப உயரத்தை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் இந்த இன்வெர்டட் அம்பரல்லா தயாரிக்கப்படுகிறது.

  முன்னோடியான கண்டுபிடிப்பு

  இணைத்துப் பொருத்தியவுடன் இயங்குவதற்குத் தயார் நிலையில் (Plug and Play) உள்ள வகையில் இந்தத் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. தூய்மையான நீா் மற்றும் சூரிய மின் ஆற்றல் ஆகிய இரண்டையும் பெறும் வகையில், மிக எளிமையாக இயக்குவதற்கு ஏற்ற தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளில் இதுதான் உலகின் முதலாவதாக இருக்கும் என இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். தயாரிப்புச் செலவு அதிகம் தேவைப்படும் இந்நிறுவனத்திற்காக நிம்மகட்டா பிரசாத் போன்றோர் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

  15 ஆண்டுகளுக்கு வாரண்டி

  இந்த திங்க்ஃபி இன்வெர்ட்டர்டு அம்பரல்லாவை நிறுவுவதற்கு குறைந்தது ஒரு இலட்ச ரூபாய் செலவாகும். தேவைப்படும் இடம், அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப செலவு இன்னும் அதிகமாகும். "செலவு அதிகமாகத் தெரிந்தாலும் இதன் மூலமாகக் கிடைக்கும் தூய்மையான நீர் மற்றும் மின் ஆற்றலுடன் ஒப்பிடும் பொழுது இதற்காக நாம் செய்யும் முதலீடு மிகவும் இலாபகரமானது என்பதை உணர முடியும்" என்கின்றனர் இந்நிறுவனத்தினர். இந்நிறுவனம் தன்னுடைய தயாரிப்புக்கு பதினைந்து ஆண்டுகளுக்கான வராண்டியை வழங்குகிறது. மிகவும் தரமான பொருட்கள் மூலமாகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்துடனும் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த அளவுக்கு நீ்ண்ட கால உத்திரவாதத்தை தங்களால் தர முடிவதாக இந்நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

  பலவகையான பயன்பாடு

  இந்த திங்க்ஃபி இன்வெர்டட் அம்பரல்லா அல்லது உல்டா ஷாத்தா (Ulta Chaata) பல்வேறு வகையான பயன்பாடுகளை உள்ளடக்கியது. இதன் மூலம், மின்சார வாகனங்களை (EVs) இயக்கலாம், பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க இயலும், ரயில்வே பிளாட்பாரங்கள் மற்றும் வாகனச் சுங்கச் சாவடிகளில் குடிநீர் மற்றும் சூரிய ஆற்றலோடு சேர்ந்து நிழல் தரும் கூரைகளாகவும் இந்த அமைப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1.2 இலட்சம் ரூபாய் முதல் 80 இலட்சம் ரூபாய் வரை

  இந்த வகையில் அமைந்த இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான - model 1080XL - மிகவும் மேம்பட்ட வகையில் அமைந்துள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 40 கிலோ வாட் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இதன் மூலம், ஒரு மில்லியன் லிட்டர் மழைநீரைத் தூய்மைப்படுத்த இயலும். பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் பெருகிவரும் நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்தினால் பல வகையில் நன்மையடையலாம் என இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பை நிறுவுவதற்கு அளவு மற்றும் பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்ப 1.2 இலட்சம் ரூபாய் முதல் 80 இலட்ச ரூபாய் வரை செலவாகும்.

  புதுமை என்றும் வெற்றி பெறும்

  வீடு மற்றும் அலுவலகங்களில் சேரும் குப்பைகளை சேகரித்து மேலாண்மை செய்வதற்காக ஸ்மார்ட் கூடைகளைத் தயாரிக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது இந்த மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்திக்கான திங்க்ஃபி இன்வெர்ட்டட் அம்ப்ரல்லா தயாரிப்புகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். 2018 ஆம் ஆண்டில் இந்தத் தயாரிப்புகள் மூலம் குறிப்பிடத் தகுந்த இலாபம் ஈட்டுவதுதான் எங்களுடைய முதன்மையான இலக்கு. ஏற்கனவே சந்தையில் இருக்கும் உற்பத்திப் பொருட்களில் புதிய தொழில் நுட்பம், நல்ல வடிவமைப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இணையும் பொழுது அது வெற்றிகரமான விற்பனைப் பொருளாக மாறும் என்பதை எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளின் வழியாக நிரூபிக்க விரும்புகிறோம்" என்கின்றனர் ஷமித் சோக்சி மற்றும் பிரியா வகில் தம்பதியினர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Move over Elon Musk! This Indian couple is harvesting solar energy - using an umbrella ; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more