மோட்டோ ஜி4 வச்சிருக்கீங்களா, இதெல்லாம் தெரியுமா.??

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி4 கருவியின் அம்சங்களை இயக்க புதிய வழிமுறைகளை இங்கு வழங்கியுள்ளோம்.

By Meganathan
|

மோட்டோ ஜி நான்காம் தலைமுறை கருவிகளின் விற்பனை வழக்கமான மோட்டோ ஜி போன்றே அமோக நடைபெற்று வருகிறது எனலாம். இத்தகைய வரவேற்பிற்குச் சரியான விலை, சக்திவாய்ந்த அம்சங்கள் மோட்டோ ஜி பிரான்டு எனப் பல்வேறு காரணங்களைக் கூறலாம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ ஜி போன் வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இது உங்களுக்கான தொகுப்பு தான். நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் மோட்டோ ஜி4 கருவியின் அம்சங்களை இப்படியெல்லாம் இயக்க முடியுமென உங்களுக்குத் தெரியுமா.??

ஃபிளாஷ்லைட்

ஃபிளாஷ்லைட்

மோட்டோ ஜி4 கருவியை வைத்திருக்கும் போது இருட்டைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை. இருளில் சிக்கிக் கொள்ளும் போது கருவியை அசைத்தால் ஃபிளாஷ்லைட் ஆன் ஆகி விடும்.

இந்த ஆப்ஷனை செயல்படுத்த மோட்டோ ஆப் சென்று Actions > Double karate chop for torch ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனினை நோட்டிபிகேஷன் பேனலிலும் பார்க்க முடியும்.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

மோட்டோ ஜி4 கருவியில் நோட்டிபிகேஷன்களுக்குத் தனி எல்இடி கிடையாது. இதனால் நோட்டிபிகேஷன் கருவியின் திரையை முழுமையாக எரியச் செய்யும். இரவு நேரங்களில் தேவையில்லா ஆப்களினால் தொல்லை செய்யப்படாமல் இருக்கச் செய்ய முடியும்.

இதைச் செயல்படுத்த மோட்டோ ஆப் சென்று Display > block apps ஆப்ஷனினை கிளிக் செய்து detail level > schedule time செட் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் நௌ

கூகுள் நௌ

உங்களுக்குச் செய்ய வேண்டிய சிறிய பணிகளைக் கூகுள் நௌ மூலம் இயக்கிக் கொள்ளும் வசதி மோட்டோ ஜி4 கருவியில் வழங்கப்படுகிறது. இதைச் செயல்படுத்த திரையின் வலது அல்லது இடது புறம் ஸ்வைப் செய்தாலே போதுமானது.

மேலும் கருவியின் Settings > Google > Search & Now > Voice > "Ok Google" ஆப்ஷனை செயல்படுத்தினால் எந்தத் திரையில் இருந்தும் கூகுள் நௌ ஆப்ஷனை இயக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா

கேமரா

மோட்டோ ஜி4 கருவியின் கேமராவை இயக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்த மோட்டோ ஆப் சென்று Actions > Twist for Quick Capture ஆப்ஷனை கிளிக் செய்து ஆன் செய்ய வேண்டும். இனி கருவியை இரு முறை சுற்றினால் கேமரா ஆப் திறக்கும்.

இத்துடன் கருவியின் Settings > Display > Press power button twice for camera ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் கருவியின் கேமராவினை பவர் பட்டனை இரு முறை வேகமாகக் கிளிக் செய்து இயக்க முடியும். இந்த ஆப்ஷன் கருவி லாக் செய்யப்பட்டிருந்தாலும் வேலை செய்யும்.

யூஸர் இன்டர்ஃபேஸ்

யூஸர் இன்டர்ஃபேஸ்

கருவியின் குவிக் செட்டிங்ஸ் பகுதியில் தெரிய வேண்டிய ஆப்ஷன்களை நீங்களாகவே மாற்றியமைக்க முடியும். இதைச் செயல்படுத்த நோட்டிபிகேஷன் திரையில் இருக்கும் கியர் பட்டனை அழுத்திப் பிடிக்க வேண்டும். சில விநாடிகளில் UI Tuner ஆப்ஷன் தெரியும். இதனைச் செட்டிங்ஸ் மெனுவில் காண முடியும். இங்கு நீங்கள் செயல்படுத்தும் ஆப்ஷன்கள் எந்நேரத்திலும் மறைந்து போகும் என்ற தகவலும் இங்கு வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புகைப்படம்: digitaltrends

Best Mobiles in India

English summary
Moto G4 tips to help you get more options

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X