பலருக்கும் தெரியாத கம்பெனி ரகசியம்.. அடிச்சு கேட்டா கூட iPhone ஓனர்கள் இதை வெளியே சொல்ல மாட்டாங்க!
ஆப்பிள் (Apple) பற்றிய ஒரு "கம்பெனி ரகசியத்தை" சொன்னால்.. இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க!" என்கிற 'மைண்ட் வாய்ஸ்' ஆனது 'மெயின் வாய்ஸ்' ஆக மாறினால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
அதென்ன கம்பெனி ரகசியம்? ஆப்பிள் யூசர்கள் அதை ஏன் வெளியே சொல்ல மாட்டார்கள்? என்பதை நாங்கள் சொல்ல வேண்டாம்; படிக்கப்படிக்க நீங்களே புரிந்து கொள்வீர்கள்!

இதுகூட தெரியாத பச்சை மண்ணா இருக்கீங்களே!
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ் இருக்கிறது அல்லவா? அது ஐபோன்களுடன் மட்டுமே கனெக்ட் ஆகும் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தால்.. நீங்கள், என்ன சொன்னாலும் நம்பும் ஒரு பச்சை மண் என்று அர்த்தம். ஏனென்றால், ஆப்பிள் ஏர்போட்ஸ்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடனும் இணைக்க முடியும்.
உடனே இது குறுக்குவழிகளால் மட்டுமே சாத்தியமாகும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உண்மை என்னவென்றால், ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity) உள்ள எந்த ஒரு டிவைஸிலும் வேலை செய்யும் வகையில் தான், ஆப்பிள் தனது ஆடியோ தயாரிப்புகளை (Audio Products) வடிவமைத்துள்ளது. அதே சமயம் இது அதிகாரப்பூர்வமான ஒரு ஆதரவு அல்ல; தேவைக்கான ஒரு ஆதரவு தான்!

எந்தெந்த ஏர்போட்ஸ் மாடல்களை ஆண்ட்ராய்டு உடன் கனெக்ட் செய்ய முடியும்?
- ஏர்போட்ஸ் (அனைத்து ஜெனரேஷன்களும்)
- ஏர்போட்ஸ் ப்ரோ (அனைத்து ஜெனரேஷன்களும்)
- ஏர்போட்ஸ் மேக்ஸ் போன்ற மாடல்கள் ஆனது ஆண்ட்ராய்டு போன்களுடனான இணக்கத்தன்மையை (Android Compatibility) ஆதரிக்கும் ஆப்பிள் இயர்பட்ஸ்கள் ஆகும்!
AirPods மற்றும் AirPods Pro ஆகியவைகள் ப்ளூடூத்-எனேபிள்டு இயர்பட்ஸ் என்பதால், அவற்றை எந்த ஒரு ஆண்ட்ராய்டு போனுடனும் இணைத்து (கனெக்ட் செய்து) பயன்படுத்த முடியும். இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவைகளை ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுடன் கூட இணைக்கலாம்!

ஆப்பிள் ஏர்போட்ஸ்-ஐ ஒரு ஆண்ட்ராய்டு போன் உடன் கனெக்ட் செய்வது எப்படி?
- உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் உள்ள ப்ளூடூத் செட்டிங்ஸ்-க்கு (Bluetooth Settings) செல்லவும்.
- பின்னர் ப்ளூடூத்தை ஆன் (ON) செய்து, பேர் ஏ நியூ டிவைஸ் (Pair a New Device) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
- உங்கள் ஏர்போட்ஸ் சார்ஜிங் கேஸில் இருக்கும்போது, ஏர்போட்ஸ் கேஸின் பின்புறத்தில் உள்ள செட்டப் (Setup) பட்டனை சுமார் ஐந்து வினாடிகள் அல்லது ஸ்டேட்டஸ் லைட் (Status Light) ஆனது பிளாஷ் ஆகும் வரை அழுத்தி பிடிக்கவும்.

பாதி வேலை முடிந்தது!
- இப்போது, உங்கள் ஏர்போட்ஸ் ஆனது, உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் கிடைக்கும் 'அவைலபிள் டிவைஸஸ்' (Available Devices) பிரிவில் தோன்றும். அதன் பெயரை கிளிக் செய்யவும். பின்னர் காட்டப்படும் மெனுவிலிருந்து பேர் (Pair) என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவ்வளவு தான்; வேலை முடிந்தது. ஒருமுறை உங்கள் ஏர்போட்ஸ்-ஐ உங்கள் ஆண்ட்ராய்டு போனுடன் கனெக்ட் செய்த பிறகு, அதை பயன்படுத்த தொடங்கலாம்!
ஆக இனிமேல்.. "ஹே மேன்.. இது ஆப்பிள் ஏர்போட்ஸ்.. ஆண்ட்ராய்டு கூடலாம் கனெக்ட் பண்ண முடியாது!" என்று சொல்லி யாராவது ஓவர் சீன் போட்டால்... அவர்களுக்கு புரியும்படி எடுத்து கூறவும்!

இங்கே கவனிக்கப்பட வேண்டிய சில வரம்புகளும் உள்ளன!
முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிளின் இயர்பட்ஸ்கள் ஆனது "அதிகாரப்பூர்வமாக" ஆண்ட்ராய்டுக்கு இணக்கமானதாக இல்லை. ஆனாலும் அவைகளை ஆண்ட்ராய்டு உடன் கனெக்ட் செய்ய முடியும். அப்படி செய்யும் போது சில பிரத்யேக அம்சங்களை நீங்கள் இழக்க நேரிடும்.
அதாவது ஏஎன்சி (ANC) மற்றும் டிரான்ஸ்ப்ரென்ஸி மோட் (Transparency Mode) போன்ற மேம்பட்ட அம்சங்களை கட்டுப்படுத்த முடியாது; மேலும் ஏர்பாட்ஸின் பேட்டரி அளவை சரிபார்க்கவும் முடியாதது.
அதுமட்டுமல்ல, நீங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் சிரியை (Siri) இயக்க முடியாது; அதே சமயம் உங்களால் கூகுள் அசிஸ்டண்ட்டிற்கு (Google Assistant) மாறவும் முடியாது.


Click it and Unblock the Notifications