பொதுவான மொபைல் போன் சிக்கல்களும்... அதற்கான "வீட்டு வைத்தியங்களும்"!

|

மொபைல் போன்கள் தொடர்பான ஒரு சமீபத்திய ஆய்விற்காக, ஸ்மார்ட்போன்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளை பற்றி கணக்கெடுப்பு ஒன்று எடுக்கப்பட்டது.

அதாவது, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் (புதியது அல்லது பழையது என்று பாராமல்) மிகவும் பொதுவாக காணப்படும் குறைபாடுகள் / பிரச்சனைகள் என்னென்ன? என்கிற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிகம் பேர் சந்திக்கும்

அதிகம் பேர் சந்திக்கும் "அந்த" 4 பிரச்சனைகள்!

மேற்கூறிய கணக்கெடுப்பின் வழியாக, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் காணப்படும் டாப் 4 பிரச்சனைகள் என்னென்ன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

சுவாரசியமான விஷயம் என்னவன்றால், அந்த 4 பிரச்சனைகளுக்கும் மிகவும் எளிமையான தீர்வுகள் உள்ளன.

ஒருவேளை அந்த 4 பிரச்சனைகளில் ஒன்று அல்லது இரண்டு, உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கிறது என்றால்.. உங்கள் ஸ்மார்ட்போன் "நலமாக" இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்; உடனே அதை சரி செய்யுங்கள்!

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

04. போன் ஃப்ரீஸிங் (5%)

04. போன் ஃப்ரீஸிங் (5%)

இந்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 5% பேர், தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஃப்ரீஸிங் பிரச்சனையை சந்தித்து உள்ளதாக கூறி உள்ளனர்.

ஒவ்வொருமுறையும், தங்கள் போன் ஃப்ரீஸ் ஆகும் போது, ரீஸ்டார்ட் செய்வது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி என்றும் கூறி உள்ளனர்.

இந்த பிரச்சனை உங்கள் போனிலும் உள்ளதா?

இந்த பிரச்சனை உங்கள் போனிலும் உள்ளதா?

ஆம் என்றால்.. நீங்கள் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்த விரும்பாத ஆப்கள், தேவை இல்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து விடவும்.

இதன் மூலம் உங்கள் மொபைல் ஸ்டோரேஜின் மீதான சுமையை குறைக்கலாம். இல்லையென்றால்.. ஸ்டோரேஜை விரிவுபடுத்த மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தவும்.

அதுவும் செய்ய முடியாது என்றால்.. கடைசி முயற்சியாக - உங்கள் மொபைலை ஃபேக்டரி ரீசெட் (Factory Reset) செய்து விடவும்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

03. போன் க்ராஷ் (6%)

03. போன் க்ராஷ் (6%)

அதாவது ஒரு ஸ்மார்ட்போன் திடீரென்று செயலிழந்து போவது.. உதாரணமாக ஒரு போன் தானாகவே 'ஆஃப்' ஆவது அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஒரு ஆப், எதிர்பாராத விதமாக 'க்ளோஸ்' ஆவது.. போன்றவைகளை போன் க்ராஷ் எனலாம்!

நிகழ்த்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 6% ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

இதை சமாளிப்பது எப்படி?

இதை சமாளிப்பது எப்படி?

உங்கள் போன் ப்ரீஸ் ஆகும் போது, நீங்கள் என்ன செய்வீர்களோ, அதையே தான் இதற்கும் செய்ய வேண்டும். அதாவது ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

மேலும் தேவையில்லாத ஆப்களை அன்இன்ஸ்டால் செய்வது மற்றும் ஆப்களை அடிக்கடி அப்டேட் செய்வதையும் பழக்கப்படுத்தலாம்.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

02. மெதுவான அல்லது மந்தமான போன் (9%)

02. மெதுவான அல்லது மந்தமான போன் (9%)

இந்த கணக்கெடுப்பில் பங்குகொண்ட 9% பேர் சந்திக்கும் இரண்டாவது மிக முக்கியமான பிரச்சனை - ஸ்லோ பெர்ஃபார்மென்ஸ்!

பெரும்பாலான பெண்கள் காலப்போக்கில் மெதுவாகும் அல்லது மந்தமாகும். அதை தடுக்க முடியாது என்றாலும் கூட, தள்ளிப்போடலாம்.

அதெப்படி?

அதெப்படி?

- வழக்கம் போல மொபைல் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்கவும்

- உடன் பேக்கிரவுண்டில் எந்தவொரு ஆப்பும் இயங்கவில்லை என்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ளவும்.

- ஒவ்வொரு சில நாட்களுக்கும் உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்யவும்

- தேவைக்கு மீறி, ஏராளமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

- உங்களுக்கு கிடைக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களை தவறாமல் இன்ஸ்டால் செய்யவும்.

01. பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் (35%)

01. பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் (35%)

சந்தேகத்திற்கு இடமின்றி, பெரும்பாலான மொபைல் போன் பயனர்களும், அவர்களின் போன்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் - அது பேட்டரி தொடர்பான பிரச்சனைகளே ஆகும்.

பேட்டரிகள் வீக்கம் அல்லது பேட்டரி செயலிழப்பு போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதான நிகழ்வுகள் ஆகும். ஆனால் மிகவும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், அது - விரைவாக தீரும் பேட்டரி லைஃப் தான்!

இந்த சிக்கலை திறம்பட கையாள்வது எப்படி?

இந்த சிக்கலை திறம்பட கையாள்வது எப்படி?

- இன்டர்நெட்டை பயன்படுத்தாதபோது, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கவும்

- தேவை இல்லாத நேரங்களில் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை குறைக்கவும்

- உங்கள் பேட்டரியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், புது ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு பதிலாக "மாற்று பேட்டரியை" வாங்கவும்.

Best Mobiles in India

English summary
Most Of The Mobile Phone Users Facing These 4 Common Problems Which have Simple Solutions

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X