TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

|

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம்.

ஆனால் உங்களுக்கு தெரியுமா? ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது, நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்கள் டிவி ஸ்க்ரீனை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்று?

இன்னும் மோசமான விடயம் என்னவென்றால்?

இன்னும் மோசமான விடயம் என்னவென்றால்?

ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் தவறு, சில நேரங்களில் உங்கள் டிவியின் உத்தரவாதத்தை கூட ரத்தாகும் சூழ்நிலையை உருவாக்கலாம்

நாம் அனைவருமே தூசி, அழுக்கு மற்றும் கசடுகள் இல்லாத டிவி ஸ்க்ரீனை விரும்புகிறோம். ஆனால் அதை சரியாக (சுத்தம்) செய்வது தான் இங்கே முக்கியம்.

அப்படியாக, உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, தெரியாமல் கூட நீங்கள் செய்ய கூடாத 8 விஷயங்கள் இதோ!

Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

01. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?

01. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?

கூடாது! ஏனெனில் பெரும்பாலான டிவி ஸ்க்ரீன்கள் (எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி ஸ்க்ரீன்கள்) ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும் (அதாவது அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும்) மற்றும் அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே டிஷூ மற்றும் டவல்களில் உள்ள "இழைகள் கூட" உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தலாம். எனவே முடிந்த வரை, அது LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்ப்ளேவாக இருந்தாலும் கூட அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தவும்.

உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தாமல், அதில் உள்ள கைரேகைகள் மற்றும் கறைகளை அகற்ற இந்த வகை துணி மிகவும் பொருத்தமானது.

02. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?

02. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் - டிவி ஸ்க்ரீன்கள் உடையக்கூடியவை ஆகும். மிகவும் கடினமாக அழுத்தப்பட்டால் அல்லது தேய்க்கப்பட்டால் அது சேதமடையலாம். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்தவரை மெதுவாக துடைப்பதை உறுதி செய்யவும்.

இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!இங்கிலிஷ் தெரியாத எல்லோருமே இந்த மொபைல் செட்டிங்-ஐ கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

03. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?

03. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?

கூடவே கூடாது! எந்தவொரு க்ளீனிங் சொல்யூஷனையும் நேரடியாக உங்கள் டிவி ஸ்க்ரீனில் தெளிக்காதீர்கள்.

எப்பொழுதும் பஞ்சு இல்லாத துணி அல்லது மைக்ரோஃபைபர் மீது க்ளீனிங் சொல்யூஷனை வைத்து, பின்னர் அதை ஸ்க்ரீனில் வைத்து மெதுவாக துடைக்கவும். க்ளீனிங் சொல்யூஷனை நேரடியாக தெளிப்பதன் மூலம் ஸ்க்ரீனில் நிரந்தர அடையாளங்கள் அல்லது கறைகள் ஏற்படலாம்.

04. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?

04. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?

தண்ணீர் மட்டும் அல்ல, முடிந்தவரை எல்லா திரவங்களையுமே டிவி ஸ்க்ரீனில் இருந்து விலக்கி வைக்கவும். திரவங்களை பயன்படுத்தி உங்கள் டிவியை சுத்தம் செய்தால் அது டிவியின் உள் பகுதிகளை சேதப்படுத்தலாம்.

குறிப்பாக அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தவே கூடாது, ஏனெனில் அவைகள் டிவி ஸ்க்ரீனில் உள்ள ஆன்டி-க்ளேர் கோட்டிங்கை (Anti-glare coating) சேதப்படுத்தலாம்.

WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!

05. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?

05. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?

வேண்டாம்! சுத்தம் செய்யும் போது உங்கள் டிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

அதுமட்டும் இல்லாமல், ஸ்க்ரீன் "கருப்பாக" இருக்கும் போது தான், அதில் உள்ள அழுக்குகளை மற்றும் கோடுகளை கண்டறிய முடியும்; அதை அகற்ற முடியும். மேலும் இருண்ட ஸ்க்ரீனில் தான் தூசிகளும் நன்றாக தெரியும்.

06. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?

06. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?

முடிந்தவரை உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரு திசையில் இருந்து (செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக) துடைக்க வேண்டும், பின்னர் அதை எதிர் திசையில் இருந்து செய்ய வேண்டும்.

இது வழிமுறை, ஸ்க்ரீனில் எந்த இடமும் பாக்கி இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் சுத்தம் செய்யும் போது ஸ்க்ரீனில் ஏற்படும் கோடுகளை தவிர்க்கவும் உதவுகிறது.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

07. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?

07. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?

சிலமுறை பயன்பாட்டிற்கு பிறகு, டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் துணியை மாற்றுவது நல்லது. ஏனெனில் அதில் தூசிகள் தங்கி விடலாம், அது ஸ்க்ரீன்களில் கோடுகளை, கீறல்களை ஏற்படுத்தலாம்.

மேலும் நன்றாக சுத்தம் செய்யும் "திறனையும்" இழக்கலாம். எனவே அவ்வப்போது டிவி ஸ்க்ரீனை துடைக்கும் துணியை மாற்றவும்.

08. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?

08. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?

முடிந்தவரை, இப்படி செய்வதை தவிர்க்கவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்து முடித்ததும், டிவியை மீண்டும் கனெக்ட் செய்யும் முன், அதன் ஸ்க்ரீன் முழுமையாக உலர வைக்கப்பட வேண்டும்.

ஈரமான புள்ளிகள் ஸ்க்ரீனில் அப்பட்டமாக தெரியும், பின்னர் அதுவே கூட ஓரு கறையாக மாறிவிடலாம். பிறகு டிவி ஸ்க்ரீனை துடைத்ததிற்கு புண்ணியமே இல்லாமல் போய் விடும்.

Best Mobiles in India

English summary
Mistakes You Should Avoid While Cleaning TV Screen Here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X