இனி ஆன்லைன் ஆர்டரில் நீங்க கிங்.. பொருட்களை சோதித்து பார்த்து வாங்குவது எப்படி?

|

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் எதையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது. காலத்தோடு ஒன்றி ஓடுவது அவசியமாக இருக்கிறது. இதில் ஆன்லைன் ஆர்டர்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

ஒரு பொருளை நேரில் சென்று வாங்குவதை விட ஆன்லைன் மூலம் வாங்கினால் பெரும் தள்ளுபடிகளும் சலுகைகளும் கிடைக்கிறது. எனவே வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

ரிட்டர்ன் செய்யும் வழிமுறைகள்..

ரிட்டர்ன் செய்யும் வழிமுறைகள்..

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்பட்சத்தில் அது டெலிவரி செய்த பிறகு அந்த பொருள் பிடிக்கவில்லை என்றாலோ வேலை செய்யவில்லை என்றாலோ ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.

டெலிவரி எக்ஸ்சிக்யூட்டிவ் வீட்டுக்கே வந்து ரிட்டர்ன் பொருட்களை வாங்கிச் செல்வார். செலுத்திய பணம் மீண்டும் வரவு வைக்கப்படும்.

எதுக்கு இந்த தொந்தரவு. நேரில் சென்று பொருட்கள் வாங்கும்பட்சத்தில் செக் செய்து பொருளின் தரத்தை அறிந்துவிடலாமே என்று தோன்றலாம். ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கும் இதற்கான வழிகள் இருக்கிறது.

Flipkart மற்றும் Amazon இல் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி?

Flipkart மற்றும் Amazon இல் பாதுகாப்பாக பொருட்களை வாங்குவது எப்படி?

இந்த காலக்கட்டத்தில் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்பட்சத்தில் அதை பாதுகாப்பாக கையாளுவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக Flipkart மற்றும் Amazon இருக்கிறது. பெரும்பாலும் பொருட்களை இந்த இரண்டு தளங்களில் தான் ஆர்டர் செய்கிறோம்.

இந்த இரண்டு தளங்களிலும் பொருட்களை தரத்துடன் கண்டறிந்து வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

இருதரப்பும் பின்பற்ற வேண்டியி விஷயங்கள்..

இருதரப்பும் பின்பற்ற வேண்டியி விஷயங்கள்..

இந்த விஷயங்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் ஆகிய இரண்டு தரப்பு மீதும் தவறுகள் இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மீது என்ன தவறு என்ற கேள்வி வரலாம். ஆம், பொருட்களை செக் செய்து வாங்கலாம் என்ற வழிமுறை இருக்கிறது என்பது தெரியாமல் இருப்பதே தவறு தானே.

அதேபோல் ஆன்லைன் நிறுவனமும் பொருட்களின் தரத்தை அறிந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும் எனவும் வாடிக்கையாளர் ஆதரவு சேவை மையங்கள் உடனடி தீர்வை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கைகளாக இருக்கிறது.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே "ஓபன் பாக்ஸ்" சிஸ்டம் கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. இது நிறைய வாடிக்கையாளர்கள் தெரிந்திருப்பது இல்லை.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம் என்பது டெலிவரி செய்யும் நேரத்திலேயே பொருட்கள் சரியாக உள்ளதா என்பதையும் அதன் செயல்பாடுகளையும் செக் செய்து கொள்ள வழிவகை செய்கிறது.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம் என்றால் என்ன?

ஓபன் பாக்ஸ் சிஸ்டம் என்றால் என்ன?

அதாவது ஓபன் பாக்ஸ் சிஸ்டம் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனுள்ள ஒரு திட்டமாகும். பயனர்கள் ஒரு பொருளை ஆர்டர் செய்து டெலிவரிக்கு வரும் பட்சத்தில், டெலிவரி பாய் முன்பாக அவரையே அதை பிரித்து செக் செய்யச் சொல்லலாம்.

பொருட்கள் சரியாகவும் தரம் நியாயமாகவும் இருக்கும்பட்சத்தில் உங்களுடைய ஓடிபி-யை அவரிடம் பகிரலாம் அல்லது பணத்தை செலுத்தலாம்.

அமேசான் ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

அமேசான் ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

பெரும்பாலான ஆர்டர்களுக்கும் ஓபன் பாக்ஸ் இன்ஸ்பெக்ஷன் கிடைக்கிறது. இதன்மூலம் டெலிவரியை பெறுவதற்கு முன் பொருட்கள் சரியாக இருக்கிறதா, சேதம் அடைந்து இருக்கிறதா என்பதை அமேசான் டெலிவரியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.

சமீப காலமாக ஓபன் பாக்ஸ் சிஸ்டம் வலியுறுத்தல் அதிகரித்து வரும் காரணத்தால் விரைவில் அனைத்து நிறுவனங்களும் அனைத்து பொருளுக்கும் இதை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் ஓபன் பாக்ஸ் சிஸ்டம்..

பிளிப்கார்ட் ஓபன் பாக்ஸ் சிஸ்டம்..

பிளிப்கார்ட் இதுகுறித்து கூறுகையில், Flipkart இன் ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டம் என்பது வாடிக்கையாளரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

ஓபன் பாக்ஸ் டெலிவரி சிஸ்டத்தில் டெலிவரி பார்ட்னர்கள் டெலிவரி நேரத்தில், வாடிக்கையாளரின் முன் ஆர்டர் பொருளை திறந்து காண்பிப்பார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் டெலிவரியை ஏற்றுக்கொண்டு OTPயைப் பகிருவார்கள்.

ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், சிறந்த விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் Flipkart பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என பிளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது.

சரியாக பொருட்களை பெற வழிமுறைகள்..

சரியாக பொருட்களை பெற வழிமுறைகள்..

விற்பனையாளர் தரம் வாய்ந்த தயாரிப்பை வழங்குகிறாரா என்பதை அறிய, நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களின் கீழ் ஸ்டார்கள் வழங்கப்பட்டிருக்கும். அதன் மதிப்பீடுகளை சரிபார்ப்பது அவசியம்.

Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டு தளங்களும் விற்பனை செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு கூட்டாளி விற்பனையாளர்களை நியமித்து இருக்கிறது. எனவே பொருட்களின் தரத்தை நீங்கள் தான் நன்கு சோதிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல் பயனர்கள் ஓபன் பாக்ஸ் சிஸ்டம் வழிமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Misdelivered Items in Online Orders: What is Open Box System, How to Avoid Suffering?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X