மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசரில் உள்ள பத்து அற்புதமான அம்சங்கள்

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒஎஸ்-க்கு பதிலாக அறிமுகமாகியுள்ள இந்த எட்ஜ் பிரெளசர் பயன்படுத்துபவர்களுக்கு பலவிதமான புதிய அனுபவத்தை தந்து கொண்டிருக்கின்றது

By Rajivganth Gurusany
|

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகம் செய்தபோதே மைக்ரோசாட்ப் எட்ஜ் பிரெளசரையும் அறிமுகம் செய்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒஎஸ்-க்கு பதிலாக அறிமுகமாகியுள்ள இந்த எட்ஜ் பிரெளசர் பயன்படுத்துபவர்களுக்கு பலவிதமான புதிய அனுபவத்தை தந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசரில் உள்ள பத்து அற்புதமான அம்சங்கள்

எட்ஜ் பிரெளசர் என்பது புதிய வித்தியாசமான பிரெளசர். மேலும் இதில் டச் வசதியும் உண்டு. இந்த நிலையில் எட்ஜ் பிரெளசரில் உள்ள சில முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

கோர்ட்டானா (Cortana)

கோர்ட்டானா (Cortana)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் தான் கோர்ட்டானா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசதி எட்ஜ் பிரெளசரில் உள்ளது.

ஒருமுறை நீங்கள் கோர்ட்டானாவை எனேபிள் செய்துவிட்டு பின்னர் கோர்ட்டானாவை சியர்ச் பாரில் கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதியை எட்ஜ் விண்டோவில் உள்ள லொகேஷன் பாரில் உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்தும் பெற்று கொள்ளலாம்

பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

இந்த எட்ஜ் பிரெளசர் அற்புதமான ஷேரிங் ஆப்சனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூல்பாரில் உள்ள ஷேரிங் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் இதனை பயனப்டுத்தி கொள்ளலாம். ஷேர் பட்டனை டேப் எய்தால் உங்களுக்கு ஒரு சிறிய பேனல் ஓப்பன் ஆகும்.

இதன் சப்போர்ட்டை அதிகப்படுத்தி கொள்ள உங்களுக்கு தேவையான செயலிகளையும் நீங்கள் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஒரே ஒரு ஸ்க்ரீன்ஷாட் மட்டுமே எடுத்து உங்களுக்கு தேவையானவற்றை ஷேர் செய்து கொள்ளலாம்

படிக்கும் பார்வை (Reading View)

படிக்கும் பார்வை (Reading View)

மேக் ஓஎஸ்-இல் உள்ள சபாரி பிரெளசரில் இருப்பது போலவே மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசரிலும் ரீடிங் வியூ வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் எதை படிக்க விரும்புகிறீர்களோ அதை தவிர மற்றவற்றை மறைக்கும் வசதி இதில் உண்டு. இதை நீங்கள் ஆக்டிவேட் செய்ய அட்ரஸ் பாரில் உள்ள ரீடிங் வியூ ஐகானை க்ளிக் செய்தாலே போதும்

தனித்திறன் கொண்ட டேப் (Customize Tab)

தனித்திறன் கொண்ட டேப் (Customize Tab)

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசர் ஓப்பன் ஆகும்போது உங்களுக்கு எந்தவிதமான டேப்புகள் ஓப்பன் ஆக வேண்டும் என்பதை நீங்கள் செட்டிங் செய்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு Main Menu -> Settings -> Select Open new tabs with and select your option என்பதை தேர்வு செய்ய வேண்டும்

புக்மார்க்கை இறக்குமதி செய்யலாம் (Import Bookmarks)

புக்மார்க்கை இறக்குமதி செய்யலாம் (Import Bookmarks)

நீங்கள் கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது முக்கிய இணையதள பக்கத்தை புக்மார்க் செய்து வைத்திருந்தால் அந்த பிரெளசரில் இருந்து மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசருக்கு இறக்குமதி செய்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெறுவதற்கு வலது ஓரத்தில் உள்ள ஹப் பட்டனை டேப் செய்து அதில் தோன்றும் இம்போர்ட் புக்மார்க்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

படிக்கும் பட்டியல் (Reading List)

படிக்கும் பட்டியல் (Reading List)

புக்மார்க் செய்வதற்கு பதிலாக உங்களுக்கு தேவையான வெப் பக்கத்தை ரீடிங் லிஸ்ட்டில் சேமித்து வைத்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் அவற்றை படித்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் பெற மேலே உள்ள ஸ்டார் பட்டனை அழுத்தி அதில் தோன்றும் ரீடிங் லிஸ்ட் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்

தீம் மாற்ற வேண்டுமா? (Change Theme)

தீம் மாற்ற வேண்டுமா? (Change Theme)

மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரெளசர் லைட் மற்றும் டார்க் என இரண்டுவிதமான தீம்களை கொண்டே இருக்கும். இவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: main menu -> Settings -> Theme -> Choose a theme

பிளாஷ் (Flash)

பிளாஷ் (Flash)

கூகுள் குரோம் பிரெளசரில் இருப்பது போன்றே ஒருசில பிளாஷ் வீடியோக்களை கண்டு ரசிக்க பிளாஷ் பிளேயர் இதில் அமைந்துள்ளது. மெயின் மெனுவில் உள்ள செட்டிங் சென்று அட்வான்ஸ் செட்டிங் என்ற ஆப்சனை க்ளிக் செய்து Use Adobe Flash Player என்பதை க்ளிக் செய்து ஆன் செய்தால் போதும்

ஹோம் பட்டன் (Home Button)

ஹோம் பட்டன் (Home Button)

இந்த எட்ஜ் பிரெளசரில் டீபால்ட்டாக ஹோம் பட்டன் டிசேபிள் செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையென்றால் அதை நீங்கள் எனேபிள் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Settings -> Advanced Settings -> Enable/disable Home button

பிரைவசி செட்டிங்:

பிரைவசி செட்டிங்:

பிரைவசி செட்டிங்கை நீங்கள் பெற வேண்டுமானால், Settings -> Advanced Settings -> Privacy and Services ஆகியவற்றை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு பாஸ்வேர்டை சேவ் செய்வது, எண்ட்ரீஸ், குக்கீச், ஆகியவற்றை சேவ் செய்வது உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும்

Best Mobiles in India

English summary
While introducing Windows 10 OS, the Redmond giant Microsoft also introduced Microsoft Edge browser replacing the Internet Explorer. In an attempt to enhance the experience, the interface of the browser has been rewritten from the scratch.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X