பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!

|

கூகுள் பே (Google Pay) மற்றும் பேடிஎம் (Paytm) ஆப்களுக்கு இணையாக பயன்படுத்தப்படும் ஒரு பேமண்ட் ஆப் ஆன அமேசான் பே (Amazon Pay) ஆப்பில் பலருக்கும் தெரியாத ஒரு "சூப்பர் ஆப்ஷன்" உள்ளது. அது உங்கள் பணத்தை சேமிக்க உதவும் என்பது கூடுதல் சிறப்பு!

அதென்ன ஆப்ஷன்? அது எப்படி உங்கள் பணத்தை சேமிக்கும்? அந்த ஆப்ஷனை அணுகுவது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அதென்ன ஆப்ஷன்?

அதென்ன ஆப்ஷன்?

இந்தியாவின் மிகப்பெரிய இகாமர்ஸ் வலைத்தளமான அமேசானுக்கு சொந்தமான அமேசான் பே ஆப் (Amazon Pay App) பற்றி பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது!

அமேசான் பே என்பது அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்லைன் கட்டண செயலாக்க சேவை (online payments processing service) ஆகும். Google Pay, Paytm, PhonePe மற்றும் பிற ஆன்லைன் கட்டண தளங்களைப் போலவே அமேசான் பே ஆப்பிலும் பேலன்ஸ் (Balance) எனப்படும் இ-வாலட் சேவை (e-wallet service) உள்ளது.

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

அதில் தான் ஒரு சூப்பர் ஆப்ஷன் ஒளிந்துள்ளது!

அதில் தான் ஒரு சூப்பர் ஆப்ஷன் ஒளிந்துள்ளது!

அமேசான் பே ஆப்பை பயன்படுத்தும் பலருக்கும் தந்தம் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை Amazon Pay Balance-ல் சேர்ப்பது எப்படி என்பது பற்றி மட்டுமே தெரியும்.

ஆனால், Amazon Pay Balance-ல் உள்ள பணத்தை பேங்க் அக்கவுண்ட்டிற்கு மாற்றுவது எப்படி என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்!

அதை தெரிந்து கொண்டால்.. பணத்தை

அதை தெரிந்து கொண்டால்.. பணத்தை "தாறுமாறாக" சேமிக்கலாம்! அதெப்படி?

உங்கள் கையில் ரூ.100 இருந்தால்.. உங்கள் மனம் ரூ.90-ஐ மட்டுமே செலவு செய்ய விரும்பும். அதுவே ரூ.500 இருந்தால் ரூ.400 வரை செலவு செய்யலாம் என்று எண்ணும்!

ஆகமொத்தம் உங்கள் கையில் பணம் இருக்கும் வரையிலாக தான் அதை செலவு செய்ய வேண்டும் என்கிற எண்ணமே எழும். அதே பணம் வீட்டில் உள்ள பீரோவிலோ அல்லது பேங்க் அக்கவுண்டிலோ இருந்தால்.. அது தேவை இல்லாத செலவுகளில் இருந்து காப்பாற்றப்படும்; சேமிக்கப்படும்!

இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!

சில நூறு ரூபாய்களை..!

சில நூறு ரூபாய்களை..!

இந்த செயல்முறையை நாம் அமேசான் பே பேலன்ஸிலும் பின்பற்றும் பட்சத்தில்.. ஆயிரக்கணக்கில் இல்லை என்றாலும் கூட, சில நூறு ரூபாய்களையாவது சேமிக்கலாம்!

அதாவது அமேசான் பே பேலன்ஸில் உள்ள பணத்தை, செலவு செய்ய விரும்பாமல் சேமிக்க விரும்பினால், அதை உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் செய்து விடலாம்!

ஒருவேளை, அமேசான் பே பேலன்சில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றுவது எப்படி என்பது பற்றி உங்களுக்கு தெரியாது என்றால்.. கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்

முன் குறிப்பு:

முன் குறிப்பு:

கேஒய்சி (KYC) செயல்முறையை முழுமையாக முடித்த பயனர்களால் மட்டுமே தங்கள் Amazon Pay Balance-ஐ பேங்க் அக்கவுண்ட்டிற்க்கோ அல்லது வணிகருக்கோ டிரான்ஸ்பர் செய்ய முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரி வாருங்கள்.. அமேசான் பே பேலன்ஸில் இருந்து பேங்க் அக்கவுண்ட்டிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று பார்ப்போம்!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

அமேசான் பே பேலன்ஸ் டூ பேங்க் அக்கவுண்ட்!

அமேசான் பே பேலன்ஸ் டூ பேங்க் அக்கவுண்ட்!

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அமேசான் (Amazon) ஆப்பை திறக்கவும்.

- பின்னர் அமேசான் பே (Amazon Pay) செக்ஷனுக்கு செல்லவும்.

- அதனை தொடர்ந்து சென்ட் மணி (Send money) என்பதை கிளிக் செய்யவும்

- இப்போது டூ பேங்க் (To Bank) என்கிற ஐகானை கிளிக் செய்யவும்

கேட்கப்படும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்!

கேட்கப்படும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்!

- நீங்கள் உங்களுடைய அமேசான் பே பேலன்ஸை டிரான்ஸ்பர் செய்ய விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டின் விவரங்களை உள்ளிடவும்:

அதாவது ஐஎஃப்எஸ்சி கோட் (IFSC Code), அக்கவுண்ட் நம்பர் (Account Number) மற்றும் அக்கவுண்ட் ஹோல்டரின் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும்!

- மேற்குறிப்பிட்ட விவரங்களை உள்ளிட்ட பின்னர் பே நவ் (Pay Now) பட்டனை கிளிக் செய்யவும்.

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- அமேசான் பே பேலன்ஸில் இருந்து எவ்வளவு தொகையை டிரான்ஸ்பர் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உள்ளிட்டு கன்ட்டிநியூ (Continue) பட்டனை கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் கீழ் பகுதியில் ஒரு பாப்-மெனு தோன்றும். அதில் அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை கண்டால், அதை கிளிக் செய்யவும்.

ஒருவேளை மேற்குறிப்பிட்ட விருப்பம் காணப்படவில்லை என்றால், ஷோ மோர் (Show more) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, அதனுள் அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

- பிறகு கன்ட்டிநியூ (Continue) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான் உங்கள் அமேசான் பே பேலன்ஸில் இருக்கும் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்!

Best Mobiles in India

English summary
Many users do not know this option in Amazon Pay App which helps to transfer the money back to bank

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X