Home
How to

பலருக்கும் தெரியாத Low Data Mode.. சும்மா ON பண்ணா போதும்.. மொபைல் டேட்டாவை சூப்பரா சேமிக்கலாம்!

ஜியோ (Jio) முதல் பிஎஸ்என்எல் (BSNL) வரையிலாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களுமே தத்தம் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களின் வழியாக டெய்லி டேட்டா வரம்புகளை வழங்குவதால், ஒரு நாள் முழுவதுமாக மொபைல் டேட்டாவை (Mobile Data) வீணாக்காமல் பாதுகாப்பது அன்றாட வேலையாகி விட்டது.

அப்படி செய்தால் மட்டுமே ஒரு நாளின் முடிவில் - இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இரவு நேரங்களில் - மொபைல் டேட்டா தீர்ந்துபோகும் சிக்கலை நாம் எதிர்கொள்ளாமல் இருப்போம் மற்றும் கூடுதல் டேட்டா தேவைக்காக டேட்டா ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களுக்காக செலவு செய்யாமல் இருப்போம்.

பலருக்கும் தெரியாத Low Data Mode.. சும்மா ON பண்ணா போதும்!

ஒருவேளை, எவ்வளவு முயற்சித்தாலும் கூட விரைவாக தீர்ந்து போகும் மொபைல் டேட்டாவை உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் இருக்கவே இருக்கிறது - லோ டேட்டா மோட் (Low Data Mode) என்கிற சீக்ரெட் அம்சம். இப்படி ஒரு அம்சம் இருப்பது பெரும்பாலான ஐபோன் (iPhone) யூசர்களுக்கு தெரியவே தெரியாது!

ஒருவேளை நீங்களும் ஒரு ஐபோன் பயனர் தான், இருந்தாலும் கூட லோ டேட்டா மோட் பற்றி உங்களுக்கு யாருமே எதுவுமே சொல்லி கொடுக்கவில்லை என்றால்.. லோ டேட்டா மோட் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்யும்? இது எந்தெந்த ஐபோன்களில் அணுக கிடைக்கும்? இதை பயன்படுத்துவது எப்படி? போன்ற விவரங்கள் இதோ:

லோ டேட்டா மோட் என்றால் என்ன, இது எப்படி வேலை செய்யும்? இது உங்கள் டிவைஸின் மொபைல் டேட்டா நுகர்வை குறைக்க உதவும் ஒரு அம்சமாகும். இது உங்கள் ஐபோனில் உள்ள ஆப்களின் நடத்தையை (App Behaviour) மேம்படுத்துவதன் மூலமும், பேக்கிரவுண்ட் டேட்டாவை வரம்பிடுவதன் (Limiting Background Data) மூலமும் டேட்டா நுகர்வை குறைக்கிறது.

எந்தெந்த ஐபோன்களின் லோ டேட்டா மோட் அணுக கிடைக்கும்? இந்த அம்சம் ஐஓஎஸ் 13 (iOS 13) அல்லது அதற்கு பிறகு வந்த வெர்ஷனில் இயங்கும் எந்தவொரு ஐபோனிலும் அணுக கிடைக்கும். இல்லையென்றால் செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் சென்ற, உங்கள் ஐபோனுக்கான லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

லோ டேட்டா மோட்-ஐ எனேபிள் / ஆன் செய்வது எப்படி? முதலில் உங்கள் ஐபோனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பை திறக்கவும். பின்னர் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யும் பட்சத்தில் செல்லுலார் (Cellular) அல்லது மொபைல் டேட்டா என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் "செல்லுலார் டேட்டா" என்கிற பிரிவின் கீழ் "செல்லுலார் டேட்டா ஆப்ஷன்ஸ்" என்கிற விருப்பத்தை காண்பீர்கள்; அதை கிளிக் செய்யவும். அடுத்ததாக தோன்றும் ஸ்க்ரீனில், "லோட் டேட்டா மோட்" விருப்பத்தை காண்பீர்கள். அதை எனேபிள் / ஆன் செய்யவும்; அவவ்ளவு தான்!

ஐபோன்களில் அணுக கிடைக்கும் லோ டேட்டா மோட் ஆனது டேட்டா உபயோகத்தைக் குறைக்க உதவும் மறுகையில், சில ஆப்களின் செயல்பாடு அல்லது செயல்திறனை பாதிக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஹைகுவாலிட்டி மீடியா ஸ்ட்ரீமிங் போன்ற சில அம்சங்கள் சமரசம் செய்யப்படலாம்.

அதுமட்டுமின்றி லோ டேட்டா மோட் அம்சமானது 'ஆன்' செய்யப்பட்டு இருக்கும் போது சில ஆப்களின் ரெஸ்பான்ஸ் வேகம் குறையலாம். மேலும் இந்த லோ டேட்டா மோட் ஆனது மீண்டும் மேனுவல் ஆக டிஸேபிள் / ஆஃப் செய்யும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Many Users Do Not Know this iPhone Setting Called Low Data Mode Which reduce Mobile data consumption
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X