48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிகிராம் ஆப் (Telegram App) இருக்கிறது என்றால், அதை நீங்கள் "மேலோட்டமாக" பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால்.. உங்களில் பலருக்கும் "அந்த 48 மணி நேர சமாச்சாரம்" பற்றி தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை!

அதென்ன சமாச்சாரம்? அதென்ன 48 மணி நேரம்? அதன் பிறகு என்ன ஆகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி.. ஆப்பிள் ஆக இருந்தாலும் சரி!

ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி.. ஆப்பிள் ஆக இருந்தாலும் சரி!

டெலிகிராம் ஆப்பில் உள்ள "48 மணி நேர சமாச்சாரத்தை" பற்றி அறிந்துகொள்ளும் முன் கடந்த மாதம் வெளியான iOS 16 அப்டேட்டை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நீங்களொரு ஆண்ட்ராய்டு யூசராக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த அப்பேட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால்.. ஐஓஎஸ் 16 அப்டேட் ஆனது இதுவரையிலாக ஆண்ட்ராய்டில் கிடைக்காத ஒரு அற்புதமான அம்சத்தை தன்வசம் கொண்டுள்ளது. அதுதான் - ஏற்கனவே அனுப்பப்பட்ட ஒரு மெசேஜை எடிட் செய்யும் அம்சம் (Edit Sent Message)!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

15 நிமிடங்கள் VS 48 மணி நேரம்!

15 நிமிடங்கள் VS 48 மணி நேரம்!

ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, தற்போது iPhone மற்றும் iPad பயனர்களுக்கு அணுக கிடைக்கும் 'எடிட் சென்ட் மெசேஜ் (Edit Sent Message) அம்சமானது, ஒரு மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யும் திறனை பயனர்களுக்கு வழங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி,. இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கு இன்னும் வரவில்லை. உடனே "அடச்சே! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் என்ன பாவம் செய்தது?" என்று புலம்ப வேண்டாம்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

ஆப்பிள் ஐஓஎஸ் 16-இல் உள்ள அதே அம்சம், அதாவது 'எடிட் சென்ட் மெசேஜ்' என்கிற அம்சமானது, பிரபல மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன டெலிகிராம் ஆப்பிலும் அணுக கிடைக்கிறது.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது 48 மணி நேரம் என்கிற அவகாசத்தை வழங்குகிறது. அதாவது ஒரு மெசேஜை அனுப்பிய 48 மணி நேரத்திற்குள் அதை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்று அர்த்தம்!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

வாட்ஸ்அப்பிற்கு கூட வராத இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பிற்கு கூட வராத இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

ஆம்! ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்யும் அம்சம் வாட்ஸ்அப்பில் கூட இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் வாட்ஸ்அப்பின் மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படும் டெலிகிராம் ஆப்பில் அது உள்ளது.

ஒருவேளை, டெலிகிராம் ஆப்பில் உள்ள 'எடிட் சென்ட் மெசேஜ்' அம்சத்தை எப்படி அணுகுவது, எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி உங்களுக்கு தெரியாதென்றால்.. கவலையை விடுங்கள், அதை சொல்லி கொடுக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். வாருங்கள்!

மொபைல் ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

மொபைல் ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android smartphone) அல்லது ஆப்பிள் ஐபோனில் (Apple iPhone) உள்ள டெலிகிராம் ஆப்பை திறக்கவும்.

- ஏதேனும் ஒரு சாட்-ஐ திறந்து, அதில் தவறாக அனுப்பப்பட்ட ஏதேனும் ஒரு மெசேஜை கண்டுபிடிக்கவும்.

- இப்போது நீங்கள் எடிட் செய்ய விரும்பும் மெசேஜை லாங் பிரஸ் செய்யவும் (அதாவது நீண்ட நேரம் அழுத்தவும்)!

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் பின் மெசேஜ் என்கிற விருப்பத்தின் கீழ் தோன்றும் எடிட் (Edit) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- பின்னர் குறிப்பிட்ட மெசேஜில், நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.

- கடைசியாக, சென்ட் பட்டனை கிளிக் செய்யவும். ; அவ்வளவு தான், வேலை முடிந்தது!

டெஸ்க்டாப் ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

டெஸ்க்டாப் ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

- உங்கள் விண்டோஸ் பிசி அல்லது மேக்கில் டெலிகிராம்-ஐ திறக்கவும்.

- இப்போது ஏதேனும் ஒரு சாட்-ஐ திறந்து, அதில் தவறாக அனுப்பப்பட்ட ஏதேனும் ஒரு மெசேஜை கண்டுபிடிக்கவும்

- பின்னர் அந்த மெசேஜை ரைட் கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும் டயலாக் பாக்சில் ரிப்ளை பட்டனுக்கு கீழே உள்ள எடிட் பட்டனை கிளிக் செய்யவும்.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

அப்புறம் என்ன.. எடிட் பண்ண வேண்டியது தான்!

அப்புறம் என்ன.. எடிட் பண்ண வேண்டியது தான்!

- பிறகு குறிப்பிட்ட மெசேஜில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களை செய்து, அதை மீண்டும் சென்ட் செய்யவும். அவ்வளவு தான்!

ஒருவேளை நீங்கள் ஒரு ஐபோன் யூசர் என்றால், உங்கள் ஐபோனில் உள்ள iMessage-ஐப் பயன்படுத்தி, ஏற்கனவே அனுப்பட்ட ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாது என்றால்.. அதையும் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆப்பிளின் iMessage ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

ஆப்பிளின் iMessage ஆப் வழியாக, ஏற்கனவே அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்வது எப்படி?

- உங்கள் iPhone-இல் உள்ள iMessages ஆப்பை திறக்கவும்.

- இப்போது ஏதேனும் ஒரு சாட்-ஐ திறந்து, அதில் தவறாக அனுப்பப்பட்ட ஏதேனும் ஒரு மெசேஜை கண்டுபிடிக்கவும்.

- இப்போது ஒரு மெசேஜ் பபிளை (Message Bubble) டச் அன்ட் ஹோல்ட் (Touch and Hold) செய்யவும்!

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

அக்செப்ட் சேஞ்சஸ்!

அக்செப்ட் சேஞ்சஸ்!

- பிறகு எடிட் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், அதை தொடர்ந்து குறிப்பிட்ட மெசேஜில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்யவும்.

- கடைசியாக அக்செப்ட் சேஞ்சஸ் (Accept Changes) என்கிற பட்டனை கிளிக் செய்து ரீசென்ட் (Resend) செய்யவும். அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Many telegram app users do not know about this edit feature which comes with 48 hours time limit

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X