யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?

|

நீங்களொரு எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர் என்றால், அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் (State Bank Of India) ஒரு வாடிக்கையாளர் என்றால்.. அல்லது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரேனும் எஸ்பிஐ வங்கியை பயன்படுத்துகிறார்கள் என்றால்.. நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய "சீக்ரெட் சர்வீஸ்" ஒன்று உள்ளது!

அதென்ன சர்வீஸ்? அதனால் என்ன நன்மை? அந்த சேவையை பெற ரிஜிஸ்டர் செய்வது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரிஜிஸ்டர் செய்ய தெரியாமல் திணறும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்!

ரிஜிஸ்டர் செய்ய தெரியாமல் திணறும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்!

ஜியோமார்ட் (JioMart), ஐஆர்சிடிசி (IRCTC), உபெர் (Uber) போன்ற "நிறுவனங்களை" தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் தனது சேவைகளை வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக அணுகும் வசதியை அறிமுகம் செய்தது.

எஸ்பிஐ அறிவித்துள்ள இந்த சேவையை பெற விரும்புவோர்கள், அதற்காக ரிஜிஸ்டர் செய்ய வேண்டி உள்ளது. பெரும்பாலான பயனர்களுக்கு இந்த சேவைக்காக ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்று தெரியாத காரணத்தால், இந்த சேவையை பலரும் பயன்படுத்தாமலே உள்ளனர்!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

கவலையை விடுங்க!

கவலையை விடுங்க!

ஒருவேளை, எஸ்பிஐ வழங்கும் இந்த வாட்ஸ்அப் சேவைக்காக ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்று உங்களுக்கும் தெரியாதென்றால்... கவலையை விடுங்கள்!

இந்த சேவைக்காக ரிஜிஸ்டர் செய்வது எப்படி? என்பதை பற்றிய படிப்படியான வழிமுறைகள் கீழே உள்ளது. அதற்கு முன் எஸ்பிஐ-யின் இந்த வாட்ஸ்அப் சர்வீஸ் வழியாக என்னென்ன சேவைகள்? என்னென்ன நன்மைகள்? அணுக கிடைக்கும் என்பதை பற்றி பார்த்து விடலாம்!

அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் பென்ஷன் ஸ்லிப் வரை!

அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் பென்ஷன் ஸ்லிப் வரை!

எஸ்பிஐ வழங்கும் இந்த வாட்ஸ்அப் சேவை வழியாக, எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மென்ட்டை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும்.

வாட்ஸ்அப் வழியாக கிடைக்கும் மினி ஸ்டேட்மென்ட்டின் கீழ், கடைசியாக நடந்த ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான தகவல்கள் அணுக கிடைக்கும்.

மேலும் பென்ஷன் வாங்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், இதே சேவையின் கீழ் தங்களின் பென்ஷன் ஸ்லிப்களையும் பெற முடியும்.

அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?

இனி க்யூவில் நிற்க வேண்டாம்!

இனி க்யூவில் நிற்க வேண்டாம்!

அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை செக் செய்ய.. என்னென்ன டிரான்ஸ்சாக்ஷன் நடந்துள்ளது என்பதை பார்க்க உதவும் மினி ஸ்டேட்மென்ட்டை பெற.. பென்ஷன் ஸ்லிப்பை வாங்க..

இப்படி எஸ்பிஐ வங்கி தொடர்பான சிறிய-சிறிய வேலைகளுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால்.. அதை இன்றோடு மறந்து விடுங்கள்; சூட்டோடு சூடாக எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவைக்காக ரிஜிஸ்டர் செய்தும் விடுங்கள்!

ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

ரொம்ப ஈஸி! எஸ்பிஐ வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து +917208933148 என்கிற எண்ணுக்கு WAREG என்று டைப் செய்து உங்கள் அக்கவுண்ட் நம்பரை சேர்த்து, எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதை செய்யவும் உங்கள் ரிஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்தும் SMS ஒன்றை பெறுவீர்கள்; அவ்வளவு தான் ரிஜிஸ்ட்ரேஷன் வேலை முடிந்தது!

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

ரிஜிஸ்டர் செய்த பின்னர், வாட்ஸ்அப் வழியாக எஸ்பிஐ வங்கி வழங்கும் சேவைகளை பயன்படுத்த தொடங்குங்கள்.

முதலில் +919022690226 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக "ஹலோ" அல்லது "ஹாய்" என டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும் (அல்லது) இந்த சேவைக்காக பதிவு செய்த பின்னர், வாட்ஸ்அப் வழியாக வந்து சேர்ந்த மெசேஜிற்கு ரிப்ளை செய்யவும்!

பல விருப்பங்கள் அணுக கிடைக்கும்!

பல விருப்பங்கள் அணுக கிடைக்கும்!

இப்போது உங்களுக்கு அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட், பென்ஷன் ஸ்லிப், வாட்ஸ்அப் பேங்கிங்கில் இருந்து வெளியேறுவது உட்பட பல வகையான விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

அதில் நீங்கள் பெற விரும்பும் ஒரு சேவையை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, உங்களுக்கு பென்ஷன் ஸ்லிப் வேண்டும் என்றால், அதை தேர்வு செய்யவும். பின்னர் எந்த மாதத்திற்கான ஸ்லிப் வேண்டும் என்பதையும் தேர்வு செய்யவும்.

அவ்வளவு தான்! உங்களின் பென்ஷன் ஸ்லிப் ஆனது வாட்ஸ்அப் சாட்பாக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும்!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்!

எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்!

பாதுகாப்பு காரணமாக அல்லது அக்கவுண்ட் தொடர்பான விவரங்கள் வாட்ஸ்அப்பில் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எஸ்பிஐ வங்கியின் இந்த வாட்ஸ்அப் சேவையில் இருந்து விலகி கொள்ளலாம்!

Best Mobiles in India

English summary
Many SBI users do not know about this official service which access via WhatsApp

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X