100-க்கு 95 பேருக்கு தெரியாது.. மெசேஜ் அனுப்புவது தொடர்பாக இப்படி ஒரு சீக்ரெட் Setting இருக்குன்னு!

|

நம் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆனது, நம்மில் பலருக்கும் தெரியாத பல வகையான சீக்ரெட் ஆன செட்டிங்ஸ்களை (Setting) தன்வசம் கொண்டுள்ளன.

அப்படியாக, நம்மில் பலருக்கும் தெரியாத.. அதே சமயம் மிகவும் பயனுள்ள ஒரு மொபைல் செட்டிங்-ஐ பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

மெசேஜ் அனுப்ப தெரிந்த எல்லோருமே.. இதையும் தெரிந்துகொள்ள வேண்டும்!

மெசேஜ் அனுப்ப தெரிந்த எல்லோருமே.. இதையும் தெரிந்துகொள்ள வேண்டும்!

நீங்கள் வாட்ஸ்அப் வழியாக மெசேஜ்களை பகிர்பவராக இருந்தாலும் சரி.. அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள மெசேஜிங் ஆப் வழியாக எஸ்எம்எஸ்-களை அனுப்புபவராக இருந்தாலும் சரி.. கட்டாயம் இந்த செட்டிங்-ஐ தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால்.. இப்படி ஒரு செட்டிங் (Setting) இருக்கிறது என்பது பற்றி தெரிந்த பிறகு உங்களின் மெசேஜிங் எக்ஸ்பீரியன்ஸ் (அதாவது ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் உங்களின் அனுபவம்) முற்றிலும் மாறுபடும்!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

அதென்ன செட்டிங்?

அதென்ன செட்டிங்?

நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு மெசேஜை டைப் செய்யும் போது.. அதில் ஏதேனும் ஒரு தவறு இருந்தால் அல்லது பிழை இருந்தால்.. அது தானாகவே சரியான / பிழை இல்லாத வார்த்தையாக மாறி விடும்!

அதை ஆட்டோகரெக்ட் (Autocorrect ) அம்சம் என்பார்கள். அதாவது மெசேஜை டைப் செய்யும் போது நீங்கள் செய்யும் பிழைகளை தானாகவே சரி செய்யும் ஒரு அம்சம் தான் - ஆட்டோ-கரெக்ட்!

ஆபத்தில் உதவும்.. அதே சமயம் எரிச்சலையும் கிளப்பும்!

ஆபத்தில் உதவும்.. அதே சமயம் எரிச்சலையும் கிளப்பும்!

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால். ஆட்டோகரெக்ட் என்கிற அம்சமானது.. அவசர நேரங்களில் டைப் செய்யும் போது உதவும் ஒரு அற்புதமான அம்சம் ஆகும்.

அதே சமயம் "நான் ஒன்னு டைப் பண்ணா.. நீ வேறா ஒன்னா மாத்திடுறீயே!" என்று நம்மை எரிச்சல் அடைய வைக்கும் ஒரு அம்சமமும் கூட!

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால்?

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால்?

ஆட்டோகரெக்ட் என்கிற பெயரின் கீழ்.. நம் மெசேஜிங் எக்ஸ்பீரியன்ஸை பாதிக்கும் இந்த அம்சத்தை பொறுத்துக்கொள்ளும் ஆயிரக்கணக்கான ஆண்ட்ராய்டு வாசிகளில் நீங்களும் ஒருவரா?

ஆம் என்றால்.. உங்களுக்கு விடுதலை அளிக்கும் ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால் - ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஒரு மொபைல் செட்டிங் வழியாக ஆட்டோ-கரெக்ட் அம்சத்தை முடக்க முடியும்!

அதெப்படி?

அதெப்படி?

- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) ஆப்பிற்கு செல்லவும்.

- அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து சிஸ்டம் (System) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

- அதன் பின்னர் லேங்குவேஜ் அன்ட் இன்புட் (language and input) என்பதை கிளிக் செய்யுவும் (இல்லையேல் செட்டிங்ஸ் சேர்ச் பாரில் நேரடியாக language and input என்று டைப் செய்யவும்)

- இப்போது மெனுவிலிருந்து விர்ச்சுவல் கீபோர்ட் (Virtual keyboard) என்பதை தேர்வு செய்யவும்.

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- பின்னர் கீபோர்ட் என்பதை தேர்ந்தெடுக்கவும் (பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் Gboard தான் டீஃபால்ட் ஆன கீபோர்ட் என்பதால் நீங்கள் அதையே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்)

- இப்போது டிராப்-டவுன் மெனு விருப்பங்களிலிருந்து டெக்ஸ்ட் கரெக்ஷன் (Text correction) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- கடைசியாக, கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்து, ஆட்டோ-கரெக்ஷன் என்கிற விருப்பத்தை ஆப் / டிசேபிள் செய்யவும்; அவ்வளவு தான்.. வேலை முடிந்தது!

Best Mobiles in India

English summary
Many android users do not know these secret setting in their phones which related to message typing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X