இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

|

மொபைல் பேட்டரி தொடர்பான 'டெக் டிப்ஸ்'களை வாரி வழங்கும் பலரும், குறிப்பிட்ட பிரச்சனையின் அடிப்படை மற்றும் அடித்தள காரணங்களை பற்றி அதிகம் பேசுவதில்லை!

அதனால் தான் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மேலோங்கும் இந்த புதிய யுகத்திலும் கூட "மொபைல் பேட்டரி சீக்கிரமாக தீர்ந்து போகும்" அதே பழைய பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை!

தெரிந்தோ.. தெரியாமலோ!

தெரிந்தோ.. தெரியாமலோ!

ஒரு மொபைல் போனின் பேட்டரி ஆனது சீக்கிரமாக காலி ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான மற்றும் பிரதானமாக கவனிக்கப்பட வேண்டிய 7 காரணங்கள் உள்ளன!

அதென்ன காரணங்கள்? அதற்கு ஏதுவாக.. தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் செய்யும் தவறுகள் என்னென்ன? அதை சரி செய்வது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

01. டிஸ்பிளேவில் செய்ய கூடாதது!

01. டிஸ்பிளேவில் செய்ய கூடாதது!

ஒரு மொபைல் போனின் போன் பேட்டரி வேகமாக 'ட்ரை' ஆவதற்கு.. மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று - அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்!

ப்ரைட்னஸை அதிகபட்சமாக வைத்திருப்பது வசதியாக தோன்றலாம்; குறிப்பாக நீங்கள் சூரிய வெளிச்சத்தின் கீழ் இருக்கும்போது, ​​ஆனால் இது உங்கள் பேட்டரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் மறக்க வேண்டாம்!

ஆட்டோ ப்ரைட்னஸ் - புத்திசாலித்தனமான வழி!

ஆட்டோ ப்ரைட்னஸ் - புத்திசாலித்தனமான வழி!

24 மணி நேரமும் டிஸ்பிளேவை ஹை-ப்ரைட்னஸில் வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ளவும்.

முடிந்தால், ஆட்டோ ப்ரைட்னஸ் விருப்பத்தை எனேபிள் செய்யவும். மொபைல் செட்டிங்ஸ் வழியாக அணுக கிடைக்கும் இந்த அம்சம், உங்கள் உட்புற மற்றும் வெளிப்புற ஒளி வேறுபாடுகளை தானாகவே சரி செய்து, முடிந்த வரை உங்கள் பேட்டரியை சேமிக்கும்!

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

02. பேக் கிரவுண்டில் நடக்கும் கூத்து!

02. பேக் கிரவுண்டில் நடக்கும் கூத்து!

உங்களில் பலருக்கும் தெரியும்! நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்!

எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர் தொடர்பான ஆப்கள் எப்போதுமே ஆக்டிவ் ஆகவே இருக்கும்!

கண்ட்ரோல்-க்கு கொண்டு வாங்க!

கண்ட்ரோல்-க்கு கொண்டு வாங்க!

பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்கள் ஆனது, உங்களின் தலையீடு இல்லாமலேயே உங்களுக்கான வேலைகளை செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதே போல உங்கள் போனின் பேட்டரியை தாறுமாறாக "குடிக்கும்" என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

ஆக முடிந்த எண்ணிக்கையில், பேக்கிரவுண்டில் செயல்படும் ஆப்களை - மொபைல் செட்டிங்ஸ் வழியாக - முடக்கலாம். முடிந்தால் தேவை இல்லாத ஆப்களை அன்இன்ஸ்டால் கூட செய்யலாம்.

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

3. பிக்சர்-இன்-பிக்சர் மோடில் மறைந்து இருக்கும் சிக்கல்!

3. பிக்சர்-இன்-பிக்சர் மோடில் மறைந்து இருக்கும் சிக்கல்!

உங்களில் பலருக்கும் பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்றால் என்ன என்கிற விளக்கம் தேவைப்படாது என்று நம்புகிறோம்.

ஒருவேளை அறியாதோர்களுக்கு - வேறொரு ஆப்பில் இருந்து, எடுத்துக்காட்டிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறாமலேயே யூட்யூப் வீடியோவை பார்ப்பீர்கள் அல்லவா? அதுதான் பிஐபி (பிக்சர்-இன்-பிக்சர்) மோட் ஆகும்.

இதன் பின்னணியில் உள்ள ஒரு சிக்கல்!

இதன் பின்னணியில் உள்ள ஒரு சிக்கல்!

மிகவும் சுவாரசியமான இந்த அம்சத்தின் பின்னணியில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால்.. இது உங்கள் போன் பேட்டரியை வேகமாக காலி செய்யும்!

உங்கள் மொபைல் செட்டிங்ஸ் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்களில் இருந்து பிக்சர்-இன்-பிக்ச்சர் மோட்-ஐ முடக்க முடியும் என்பதால்.. பெரிய அளவில் PIP mode-இன் தேவை இல்லாதவர்கள் அதை டிஸேபிள் செய்யலாம்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

4. 24 மணிநேரமும்

4. 24 மணிநேரமும் "கனெக்டெட்"!

நம்மில் பலரும்.. இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம்.

அவசியம் இல்லாத நேரங்களை தவிர்த்து, இது மிகவும் மோசமான ஒரு பழக்கம் என்று கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை!

நீங்க ரெஸ்ட் எடுப்பீங்க.. ஆனா!

நீங்க ரெஸ்ட் எடுப்பீங்க.. ஆனா!

உங்கள் போன் 24 மணி நேரமும் வைஃபை அல்லது மொபைல் டேட்டாவுடன் கனெக்ட் ஆகி இருக்கும் பட்சத்தில், அது உங்கள் மொபைலின் பேட்டரியை கணிசமாக குறைக்கும்.

ஏனென்றால், நீங்கள் தூங்கிவிட்டாலும் கூட, உங்கள் மொபைலால் ஒய்வுஎடுக்க முடியாது. தொடர்ச்சியான நோட்டிபிக்கேஷன்ஸ், அலெர்ட்ஸ், பேக்கிரவுண்ட் அப்டேட்ஸ் மற்றும் பலவற்றை அது சந்திக்க நேரிடும்!

எனவே அவ்வப்போது.. உங்கள் போனை 'டிஸ்கனெக்ட்' செய்யுங்கள்!

5. பேட்டரியும் முக்கியம் பிகிலு!

5. பேட்டரியும் முக்கியம் பிகிலு!

சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த போனின் பேட்டரியே முக்கிய காரணமாக இருக்கலாம்!

அதாவது உங்கள் மொபைலின் பேட்டரி பழையதாகி இருக்கலாம். வருடங்கள் செல்லச் செல்ல, உங்கள் பேட்டரி பலவீனம் அடையலாம்; முன்பு இருந்ததை போல நன்றாக செயல்படாமல் போகலாம்!

இதற்கு என்ன தீர்வு?

இதற்கு என்ன தீர்வு?

தோராயமாக சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு (ஸ்மார்ட்போன் மாடலைப் பொறுத்து), உங்கள் பேட்டரி அதன் ஒரிஜினல் திறனை இழக்கலாம்; விரைவாக காலி ஆகலாம்!

இதிலிருந்து தப்பிக்க, நமக்கிருக்கும் மிகவும் வெளிப்படையான விருப்பம் - பேட்டரியை மாற்றுவதே ஆகும். ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதை விட இது மிகவும் மலிவான விருப்பமே ஆகும்.

6. அடிச்சு கூட கேப்பாங்க.. லொக்கேஷனை சொல்லிடாதீங்க!

6. அடிச்சு கூட கேப்பாங்க.. லொக்கேஷனை சொல்லிடாதீங்க!

கூகுள் மேப்ஸ் உட்பட உங்கள் லொக்கேஷனை (Location) கண்காணிக்கக்கூடிய ஏராளமான ஆப்கள் உள்ளன.

அதுபோன்ற ஆப்களை நேரடியாக பயன்படுத்தும் போது மட்டுமே, அது உங்களின் இருப்பிட தகவல்களை கண்காணிக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் எப்போதும் அப்படி இருக்காது!

ஃபாலோ பண்ண முடியாதபடி முடிச்சு விட்டுடுங்க!

ஃபாலோ பண்ண முடியாதபடி முடிச்சு விட்டுடுங்க!

இருப்பிடம் தொடர்பான பெரும்பாலான ஆப்கள், பேக்கிரவுண்டில்.. நிலையான முறையில் கண்காணிப்புகளை நிகழ்த்தும் அல்லது தொடர்ச்சியாக செய்லபடும் திறன் கொண்டவைகளாக உள்ளன

அது உங்கள் மொபைலின் பேட்டரி லைஃப்-ஐ கண்டிப்பாக பாதிக்கும். ஆகவே, அவசியமற்ற நேரங்களில், மொபைல் செட்டிங்ஸ் வழியாக லொக்கேஷன் ட்ராக்கிங்-ஐ டிஸேபிள் செய்து விடவும்!

7. அடிச்சு நொறுக்கும் அறிவிப்புகள்!

7. அடிச்சு நொறுக்கும் அறிவிப்புகள்!

ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்; உங்கள் மொபைலில் ஒரு புதிய ஆப்பை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது, ​​அதன் நோட்டிபிக்கேஷன் செட்டிங்ஸ் தானாகவே ஆக்டிவேட் ஆகும்.

அப்படியாக, அவசியமே இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும் நோட்டிபிக்கேஷன் ஆனது பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, தன்னால் முடிந்த அளவிலான பேட்டரி "தின்னும்"!

என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள்!

என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள்!

எதுக்கு வருது..? ஏன் வருதுனு தெரியாத நோட்டிபிக்கேஷன்கள் வழியாக ஏற்படும் பேட்டரி இழப்பை தடுக்க தேவை இல்லாத ஆப்களுக்கான நோட்டிபிக்கேஷன்களை டிஸேபிள் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Major Reasons Behind Why Your Mobile Phone Battery Draining Very Fast And How to Stop it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X