Home
How to

வீட்டு கேஸ் சிலிண்டருக்கு புது ரூல்ஸ்.. 30 நாட்களில் LPG சிலிண்டரை சரண்டர் பண்ணுங்க.. இல்லனா என்ன நடக்கும்?

பிஎன்ஜி (PNG) இணைப்பை பெற்ற 30 நாட்களில் எல்ஜிபி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்பை ஒப்படைக்குமாறு புதிய விதிகளை இந்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால், ஏற்கனவே பிஎன்ஜி இணைப்பை வைத்து இருப்பவர்கள், எல்ஜிபி கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் புதிதாக பிஎன்ஜி இணைப்பை பெற விரும்புபவர்கள் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அதன் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இதனால், பிஎன்ஜி இணைப்புக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், பிஎன்ஜி இணைப்பை பெற்ற 30 நாட்களில் ஏற்கனவே இருக்கும், எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பை சம்பந்தப்பட்ட இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas), ஹெச்பி கேஸ் (HP Gas) ஆகிய நிறுவனங்களிடம் சரண்டர் செய்ய வேண்டும்.

வீட்டு கேஸ் சிலிண்டருக்கு புது ரூல்ஸ்.. 30 நாட்களில் LPG சிலிண்டர்?

இப்படி செய்யாமல் போனால், ஒரு வீட்டுக்கு இரண்டு கேஸ் இணைப்பை வைத்திருப்பது கண்டறிந்து, ஒரு இணைப்பை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ரத்து செய்துவிடும். இதனால், டிரான்ஸ்பர் வவுச்சர் கிடைக்காமல் போகலாம். அதாவது, எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு அல்லது பிஎன்ஜி இணைப்பு இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும். இப்போது, எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளது.

இதனால், குழாய் வழியாக கேஸ் கொடுக்கும் பிஎன்ஜி இணைப்புக்கு கஸ்டமர்கள் மாறி வருகின்றனர். இப்படி மாறும்போது, ஏற்கனவே வைத்திருக்கும் எல்பிஜி இணைப்பை அப்படியே பயன்படுத்தும்போது, ஒரே வீட்டுக்கு தேவைக்கு அதிகமான கேஸ் கிடைக்கும். இதனால், தேவைப்படுபவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனாலேயே புதிதாக பிஎன்ஜி இணைப்பை பெற்றவுடன் எல்பிஜி இணைப்பை சரண்டர் செய்ய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஜூன் 30 கடைசி தேதி என்று நினைக்க வேண்டாம். பிஎன்ஜி இணைப்பை பெற்ற அடுத்த 30 நாட்களுக்குள் எல்பிஜி சிலிண்டரை இண்டேன் கேஸ், பாரத் கேஸ் அல்லது ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்களிடம் சரண்டர் செய்ய வேண்டும். ஏற்கனவே, பிஎன்ஜி இணைப்பை வைத்திருப்பவர்களுக்கு ஜூன் 30ஆம் தேதி கடைசி தேதியாக இருக்கலாம்.

பிஎன்ஜி இணைப்பை பெற்ற பிறகு எல்பிஜி சிலிண்டருக்கு டிரான்ஸ்பர் வவுச்சர் கொடுக்கப்படுகிறது. அதாவது, பிஎன்ஜி இணைப்பு நாடு முழுவதும் கிடைக்காது. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, பிஎன்ஜி இணைப்பை பெற்ற பிறகு வேறு இடத்துக்கு வீட்டை மாற்றினால், அங்கும் பிஎன்ஜி இருக்குமா என்பதை சொல்ல முடியாது. ஆகவே, டிரான்ஸ்பர் வவுச்சர் பெற்று கொள்ளலாம்.

இந்த வவுச்சரை வைத்து உடனடியே எல்பிஜி சிலிண்டர் இணைப்பு மீண்டும் பெற்று கொள்ளலாம். நகர்ப்புற கஸ்டமர்கள் எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் ரீபில் செய்யவதற்கு கால இடைவெளி 25 நாட்களாக இருக்கிறது. கிராமப்புற கஸ்மர்களுக்கு 45 நாட்களாக இருக்கிறது. முன்னதாக, இந்த இடைவெளி 21 நாட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்பிஜி சிலிண்டர் இணைப்பை சரண்டர் செய்ய என்ன செய்ய வேண்டும்: எல்ஜிபி கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் கஸ்டமர்கள் தங்களது இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் வழியாக சரண்டர் செய்யலாம். லாகின் செய்து, சரண்டர் இணைப்பு (Surrender Connection) விருப்பத்துக்கு சென்று அதை செய்யலாம்.

இதற்கு கேஸ் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், எல்பிஜி ஐடி (LPG ID) மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட கேஒய்சி விவரங்கள் கேட்கப்படும். ஓடிபி சரிபார்ப்பு செய்யப்படும். இது ஆன்லைனில் சரண்டர் செய்வதற்கான வழிமுறைகளாக இருக்கிறது. ஆஃப்லைனில் வழக்கம்போல கேஸ் நிறுவனத்துக்கு நேரடியாக சென்று இணைப்பை ஒப்படைக்கலாம்.

Best Mobiles in India

English summary
LPG PNG Rules For Consumers 30 Day Deadline To Surrender LPG Gas Cylinder How To Surrender
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X