உஷார்! Online-ல் வந்து குவிந்த Fake iPhone மாடல்கள்! கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் கையில் ஒரு Fake iPhone-ஐ தள்ளி விட, அதாவது ஒரு போலியான ஐபோனை தள்ளிவிட, ஆன்லைனில் ஒரு பெரிய கும்பலே உள்ளது.
ரக்ஷா பந்தன் சிறப்பு ஆபர், ஆகஸ்ட் 15 அதிரடி சலுகை, அது, இது என்று கூறி.. நம்பவே முடியாத விலைக்கு ஐபோன்களை விற்பனை செய்வார்கள்; ஏமாந்து விடாதீர்கள்!

கற்பனை செய்தாலே கடுப்பாகுது!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. ஆயிரக்கணக்கில் செலவு செய்து நீங்கள் வாங்கும் ஒரு ஐபோன் மாடல், ஒரிஜினல் ஆக இல்லாமல் போலியாக இருந்தால்.. எப்படி இருக்கும்?
முடிந்த வரை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் வழியாக ஐபோன்களை வாங்கவும். அமேசான் பிளிப்கார்ட் வழியாக வாங்கினாலும் கூட அது நம்பகமான 'செல்லர்' (Seller) வழியாக டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளவும்.
இல்லையேல் கீழவரும் 4 செக்கப்-களை செய்வதன் வழியாக உங்கள் கையில் இருப்பது ஒரிஜினல் ஐபோனா அல்லது Fake iPhone-ஆ என்பதை கண்டுபிடித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்!

04. IMEI நம்பரை சரிபார்க்கவும்
நீங்கள் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்த ஐபோன் உங்கள் கைக்கு வந்ததும்.. முதலில் நீங்கள் செய்ய வேண்டியது. அதன் ஐஎம்இஐ நம்பரை செக் செய்வது தான்!
ஒரிஜினல் ஐபோன் மாடல்களிலும் கண்டிப்பாக IMEI நம்பர் இருக்கும். எனவே, உங்கள் ஐபோன் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய மிகவும் எளிதான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஐபோனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் வாங்கிய புதிய ஐபோன் மாடலின் IMEI நம்பரை கண்டுபிடிக்க, முதலில் நீங்கள் ஐபோனின் செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்ல வேண்டும். பின்னர் ஜெனரல் (General) என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு அபௌட் (About) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, ஸ்க்ரோல் டவுன் செய்ய அங்கே உங்களால் IMEI நம்பரை பார்க்க முடியும்.
ஒருவேளை நீங்கள் IMEI அல்லது சீரியல் நம்பர் என எதையுமே காண முடியவில்லை என்றால், உங்கள் கையில் இருப்பது ஒரு போலியான ஐபோன் மாடலாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

03. ஆப்ரேட்டிங் சிஸ்டமை சரிபார்க்கவும்!
உங்களுக்கே தெரியும் ஐபோன்கள் iOS மூலம் இயங்குகின்றன, இது வெளிப்படையாக ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ விட முற்றிலும் வேறுபட்டது. ஒட்டுமொத்த தோற்றம், யூசர் இன்டர்பேஸ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் iOS ஆனது Android ஓஎஸ்-ஐ விட மிகவும் வேறுபட்டது.
எனவே உங்கள் கையில் ஒரு புதிய ஐபோன் மாடல் வந்ததும், அது ஐஓஎஸ் கொண்டு இயங்குவதை உறுதி செய்துகொள்ளவும்.

ஐபோனின் OS-ஐ செக் செய்வது எப்படி?
ஒரு ஐபோனில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டமை சரிபார்க்க, முதலில் நீங்கள் செட்டிங்ஸ் மெனுவிற்கு (Settings) செல்ல வேண்டும். பின்னர் சாப்ஃட்வேர் (Software) டேப்பிற்கு செல்லவும். அங்கே ஐஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டமை நீங்கள் காணவில்லை என்றால், உஷார் ஆகி கொள்ளவும்.
மேலும் iOS-கொண்டு இயங்கும் ஐபோன்கள் ஆனது Safari, Health, iMovie போன்ற பல சொந்த ஆப்களையும் கொண்டு வரும். அது போன்ற ஆப்களை நீங்கள் காணவில்லை என்றாலும் கூட உங்கள் கையில் இருப்பது ஒரு போலியான ஐபோனாக இருக்கலாம்.

02. 'பிஸிக்கல் அப்பியரின்ஸை' (தோற்றத்தை) சரிபார்க்கவும்!
பெரும்பாலும், போலி ஐபோன்கள் ஒரிஜினல் மாடல்களை விட மிகவும் மட்டமான அல்லது மலிவான உருவாக்கத்தையே பெறும். கொஞ்சம் உற்று நோக்கினால் சற்று வித்தியாசமான வடிவமைப்பை கொண்டிருப்பதையும் நம்மால் காண முடியும்.
எனவே, ஆன்லைன் வழியாக நீங்கள் ஒரு புதிய ஐபோனை வாங்கும் போதெல்லாம், அதன் தோற்றத்தை கவனமாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக நாட்ச், பிரேம்கள் மற்றும் கேமரா மாட்யூல் ஆகியவற்றை மிகவும் கவனமாக சரிபார்க்கவும்.

எதெல்லாம் Fake iPhone ஆக இருக்கலாம்!
சமீபத்திய ஐபோன் மாடல்களில் பெரும்பாலானவை மெட்டல் மற்றும் கிளாஸால் செய்யப்பட்டவை, இந்த இரண்டும் சேர்ந்துதான் ஐபோன்களுக்கு பிரீமியம் லுக்கை தருகின்றன.
மேலும், பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களைப் போல, ஐபோன்கள் USB Type-C போர்ட்டுடன் வருவதில்லை, எனவே ஐபோன்களை வாங்கும் போதெல்லாம் அதில் லைட்னிங் கனெக்டர் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மேற்கண்ட எதுவுமே இல்லை என்றால், அது நிச்சயம் ஒரு போலியான ஐபோனாகத்தான் இருக்கும்!

01. செட்டிங்ஸ்-இல் செக் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான மேட்டர்!
உங்கள் ஐபோன் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிய, IMEI நம்பர் உடன் சேர்த்து செட்டிங்ஸ்-இல் நீங்கள் சரிபார்க்க வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது.
சாப்ஃட்வேர் விவரங்கள், IMEI நம்பருடன் சேர்த்து, குறிப்பிட்ட ஐபோனின் ஸ்டோரேஜையும் சரி பார்க்கவும். நீங்கள் ஆர்டர் செய்த ஸ்டோரேஜ் விருப்பம் தான் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். போலியான ஐபோன்கள் 256ஜிபி போன்ற ஸ்டோரேஜ்களை வழங்குவது சந்தேகமே!

மேற்கண்ட எல்லாவற்றை விடவும் ஈஸியான ஒரு வழி உள்ளது!
உங்களால் எதையுமே சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய, உங்கள் ஐபோன் மாடலை அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்து சென்று, பரிசோதனை செய்யும்படி கேட்கலாம்.
எப்போதும் அலெர்ட் ஆக இருக்கவும். மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது என்று நம்பி போலியான ஐபோன் மாடல்களை வாங்கி விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications