பான் கார்ட் தொலைந்துவிட்டதா?- ஐந்து நிமிடத்தில் ஆன்லைன் மூலம் இ-பான் பெறலாம்!

|

இந்தியாவில் முக்கியமான நிதி சார்ந்த ஆவணங்களில் ஒன்று பான் கார்ட். வருமான வரி அறிக்கை தாக்கலில் இருந்து பல்வேரு பயன்பாடுகளுக்கும் பான் கார்ட் கட்டாயமாக இருக்கிறது. வங்கி கணக்கில் இருந்து பணியில் சேருவது என்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பான் கார்ட் அதன் நம்பர் கட்டாயமாக இருக்கிறது. பல இடங்களிலும் 10 இலக்கு பான் எண் என்பது அவசியம்.

பிரதான பயன்பாடாக பான் கார்ட்

பிரதான பயன்பாடாக பான் கார்ட்

கேஒய்சி தேவைகளுக்கு பான் கார்ட் என்பது பிரதானமானதாகும். பெரிய அளவு பண பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கும் பான் கார்ட் பிரதானமாகும். பலரும் முக்கிய ஆவணங்களை புகைப்படமாக செல்போனிலோ அல்லது தங்களுடனோ வைத்திருப்பது வழக்கம். மேலும் பான் போன்ற பல அடையாள ஆவணங்கள் புகைப்படமாக ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதன் காரணமாக ஒரிஜினல் ஆவணத்தின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. அப்படி சில சமயங்களில் நம்மையும் அறியாமல் ஆவணங்கள் தொலைந்துவிடுவது வழக்கம்.

பான் கார்ட் பெற வழிமுறைகள்

பான் கார்ட் பெற வழிமுறைகள்

பான் கார்ட் தொலைந்துவிட்டது என்பவர்கள் வருமான வரித்துறையின் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி உடனடி இ-பான் அல்லது டிஜிட்டல் பான் பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். இதை பெறுவதும் மிகவும் எளிதான ஒன்றாகும் காரணம் அதிகபட்சமாக 10 நிமிடங்களில் இதை பெறலாம். இ-பான் அல்லது டிஜிட்டல் பான் பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

இ-பான் பெற வழிமுறைகள்

இ-பான் பெற வழிமுறைகள்

முதலில் https://www.incometax.gov.in என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும். அந்த வலைதளத்துக்குள் சென்றதும் Our Services என்ற தேர்வுக்குள் சென்று உடனடி இ-பான் என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Get New E-Pan என்ற விருப்பத்தை தேர்வு செய்து உள்ளே நுழைய வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்

அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்

முன்னதாக இ-பான் டவுன்லோட் செய்திருந்தால் Check Status/Download E-Pan என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் கொடுக்கப்பட்ட விருப்பங்களை தேவைகளை பூர்த்தி செய்து Continue என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் 12 இலக்கு ஆதார் எண்ணை உள்ளிடும்படி கேட்கப்படும் அதை உள்ளிட வேண்டும். இதன்பின் Continue என்ற விருப்பத்தை கொடுக்க வேண்டும். இதையடுத்து தங்கள் ஆதார் கார்ட் உடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணை உள்ளிட வேண்டும்.

தகவலை சரிபார்க்கவும்

தகவலை சரிபார்க்கவும்

இதன்பின் தங்களை குறித்து அனைத்து விவரங்களும் காண்பிக்கப்படும். அனைத்து தகவலையும் சரியா என்பதை பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். இதன்பின் தாங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐடிக்கு தங்களது இ-பான் வந்துவிடும். பான் எண் இருக்கும்பட்சத்தில் UTIITSL, TIN-NSDL வலைதளத்தில் தங்களது இ-பான் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பான் மற்றும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இணைக்கப்படாத நபர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.

ஆதார் பான் இணைப்பது கட்டாயம்

ஆதார் பான் இணைப்பது கட்டாயம்

இந்தியாவில் மிகப்பெரிய வங்கி சேவை வழங்குநராக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)., எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களை ஜூன் 30-க்குள் பான் ஆதார் கார்டை இணைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது. இந்த டுவிட்டரில் எஸ்பிஐ பதிவிட்டுள்ள தகவல் குறித்து பார்க்கையில், இதில் எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க தடையற்ற வங்கி சேவை தொடர்ந்து அனுபவிக்க தங்கள் வாடிக்கையாளர்களை ஆதார் பான் அட்டையை இணைக்கும்படி அறிவுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lost Your Pan Card?- Here the Methods to Get E-Pan Card With in 5 Minutes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X