Home
How to

PAN கார்டு தொலைஞ்சு போச்சா.. இப்போ 10 பைசா செலவு இல்லாமல் 10 நிமிடங்களில் கிடைக்கும்.. எப்படி?

வருமான வரித் துறை (Income Tax Department) ஆனது - 10 பைசா செலவு இல்லாமல் 10 நிமிடங்களில் ஆன்லைன் வழியாகவே கிடைக்கும், பான் கார்டு (PAN Card) தொடர்பான ஒரு முக்கிய சேவையை அனைவருக்கும் வழங்கி வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

வருமான வரித் துறையானது, பான் கார்ட்டை தொலைத்த இந்திய குடிமக்கள், எந்த அலுவலகத்திற்கும் செல்லாமலும், ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்காமலும், முற்றிலும் ஆன்லைனில், டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் இ-பான் கார்டை (e-PAN Card) உடனடியாக பெற அனுமதிக்கிறது. எல்லாவற்றை விட முக்கியமாக - இது ஒரு அசல் பான் கார்டுக்கு இணையான செல்லுபடியாகும் தன்மையை கொண்டுள்ளது!

PAN தொலைஞ்சு போச்சா.. 10 பைசா செலவு இல்லாமல் 10 நிமிடங்களில்!

இ-பான் கார்டு ஆனது அதை வைத்திருப்பவரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் (Digital Signature), ஒரு தனித்துவமான 10-இலக்க நிரந்தர கணக்கு எண்ணையும் (Permanent Account Number) கொண்டுள்ளது. இது அடையாள சரிபார்ப்பு, கேஒய்சி (KYC) இணக்கம் மற்றும் வருமான வரி நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இ-பான் கார்டு என்றால் என்ன? இ-பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படும் பாரம்பரிய பான் கார்டின் டிஜிட்டல் வடிவம் ஆகும். அசல் பான் கார்டை போலல்லாமல், இதை ஒரு மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் சேமித்து, நிதி பரிவர்த்தனைகள், வரி தாக்கல் மற்றும் பல்வேறு சேவைகளில் அடையாள சரிபார்ப்புக்கு பயன்படுத்தலாம்.

10 பைசா செலவு இஇல்லாமல் 10 நிமிடங்களில் கிடைக்கும்: செல்லுபடியாகும் ஆதார் நம்பர் உள்ளவர்களுக்கு, வருமான வரி இ-ஃபைலிங் தளம் உடனடியாக இ-பான் கார்டை இலவசமாக வழங்குகிறது, இது சுமார் பத்து நிமிடங்களில் செயல்படுத்தப்படுகிறது. எந்த விண்ணப்ப படிவத்தையும் நிரப்ப தேவையில்லை, எந்த ஆவணங்களையும் பதிவேற்ற தேவையில்லை. விண்ணப்பதாரர் தனது ஆதார் எண்ணை உள்ளிட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி (OTP) மூலம் சரிபார்த்தவுடன், இ-பான் அவரது இமெயிலுக்கு அனுப்பப்படும்.

இ-பான் கார்ட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? இ-பான் அடங்கிய இஈம்யில் ஐடி உங்களுக்கு நினைவில் இல்லை என்றாலோ அல்லது அதை அணுகவதில் ஏதேனும் சிக்கல் இருந்தாலோ.. அல்லது குறிப்பிட்ட இமெயில் நீக்கப்பட்டு விட்டாலோ - ஒப்புகை எண் (acknowledgement number), பான் அல்லது பிறந்த தேதி மற்றும் ஒரு ஒடிபி-ஐப் பயன்படுத்தி என்எஸ்டிஎல் (NSDL) அல்லது யுடிஐஐடிஎஸ்எல் (UTIITSL) இணையதளங்களிலிருந்து பான் அட்டையை மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்.

இ-பான் வழங்கப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு பதிவிறக்கம் கோரப்பட்டால் கட்டணம் பொருந்தும். உடனடி இ-பான்களுக்கு, ஆதார் எண் மற்றும் ஓடிபி-ஐ பயன்படுத்தி வருமான வரி இணையதளத்தில் நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட இ-பான் பாஸ்வேர்ட் ஆல் பாதுகாக்கப்பட்ட பிடிஎப் (PDF) ஆக வரும். பாஸ்வேர்ட் என்பது அட்டைதாரரின் பிறந்த தேதியை DDMMYYYY வடிவத்தில் குறிப்பிடுவதாகும்.

அச்சிடப்பட்ட பான் கார்டு நகல் தேவையா? அச்சிடப்பட்ட பான் கார்ட்டை விரும்புவோர் என்எஸ்டிஎல் (NSDL) அல்லது யுடிஐஐடிஎஸ்எல் (UTIITSL) மூலம் மறு அச்சிடலுக்கு (Reprint) கோரலாம். பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தை செலுத்திய பிறகு, அச்சிடப்பட்ட பான் கார்டு விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Lost PAN Card How to Download e-PAN Online immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X