Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

|

நம்மில் பலரும் Google Pay வழியாக கரெண்ட் பில் கட்டுவதையும், மொபைல் ரீசார்ஜ் செய்வதையும், Paytm வழியாக பஸ், சினிமா டிக்கெட்களை புக் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.

இப்படியாக நாம், பெரும்பாலான விடயங்களை செய்ய ஆன்லைனையே பெரிதும் நம்பி உள்ளோம். அவ்வளவு ஏன்? பேங்க் அக்கவுண்ட் வழியாக நடக்கும் பணப்பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கும் கூட நாம் ஆன்லைனை தான் நம்பி உள்ளோம்.

சைலன்ட் ஆக

சைலன்ட் ஆக "காணாமல் போகும்" பணம்!

பலவகையான வேலைகளை வீட்டில் அமர்ந்தபடியே செய்து முடிக்க உதவும் Google Pay, Paytm போன்ற யுபிஐ ஆப்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வலைதளங்கள் உட்பட, ஒட்டுமொத்த ஆன்லைன் உலகமுமே - டிஜிட்டல் வழியிலான பண மோசடிகள், போலியான ஆப் மற்றும் வெப்சைட் வழியிலான வங்கி மோசடிகள் என பல வகையான சைபர் குற்றங்களால் நிரம்பி வழிகின்றன என்பதே நிதர்சனம்.

நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து, மொபைல் பேங்கிங் ஆப்பில் இருந்து, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து "சைலன்ட் ஆக" பணம் காணாமல் போன சம்பவங்கள் - பணம் திருடப்பட்ட - குற்றங்கள் இங்கே அதிகம்!

WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!WhatsApp யூஸ் பண்றீங்களா? அப்போ மனச தேத்திக்கோங்க! இப்போதைக்கு அது நடக்காது!

"அது" நடந்தால்.. உடனே "இதை" செய்யவும்!

ஒருவேளை நீங்கள் ஆன்லைன் வழியாக பணத்தை இழந்த சம்பவம் ஏதேனும் நடந்தால், உடனே இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டலுக்கு (Cybercrime Portal) சென்று புகார் அளிக்கவும்!

நீங்கள் ஏதேனும் ஒரு சைபர் க்ரைமால் அல்லது ஆன்லைன் மோசடியால் அல்லது டிஜிட்டல் வழியிலான பணம் இழப்பால் பாதிக்கப்பட்டால், இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டல்-ஐ பயன்படுத்தி உடனடியாக அது தொடர்பான புகாரை அளிக்கலாம்.

அரசாங்கத்தின் இந்த Cyber Crime Portal வழியாக புகார் அளிப்பது எப்படி?

அரசாங்கத்தின் இந்த Cyber Crime Portal வழியாக புகார் அளிப்பது எப்படி?

- முதலில் cybercrime.gov.in என்கிற வலைத்தளத்திற்குள் செல்லவும்.

- பின்னர் File a complaint (ஃபைல் எ கம்ப்ளெயிண்ட்) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- இப்போது நீங்கள் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க வேண்டியிருக்கும்.

- பிறகு Report Other Cybercrime (ரிப்போர்ட் அதர் சைபர்க்ரைம்) என்கிற பட்டனைக் கிளிக் செய்யவும்.

- நீங்கள் ஏற்கனவே ஒரு 'யூசர்' ஆக இருந்தால் (அதாவது புகார் அளிக்க இந்த வலைத்தளத்தை முன்னரே பயன்படுத்தி இருந்தால்) உங்கள் அக்கவுண்ட் தொடர்பான விவரங்களை உள்ளிடவும் அல்லது புதிய அக்கவுண்ட்டை உருவாக்க Click Here for New User (கிளிக் ஹியர் ஃபார் நியூ யூஸர்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

Login தொடங்கி நடந்த மோசடி சம்பவத்தை விளக்குவது வரை!

Login தொடங்கி நடந்த மோசடி சம்பவத்தை விளக்குவது வரை!

- புதிய அக்கவுண்ட்-ஐ உருவாக்க Citizen Login (சிட்டிசன் லாக்இன்) என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம், பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.

- இப்போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பிவைக்கப்படும். அதை உள்ளிட்டு கோரப்படும் CAPTCHA-வையும் உள்ளிடவும்.

- இப்போது Submit (சப்மிட்) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

- அடுத்த பக்கத்தில் காணப்படும் படிவத்தில், முக்கிய விவரங்களை உள்ளிட வேண்டும். அந்த படிவமானது சம்பவ விவரங்கள், சந்தேக நபர்களின் விவரங்கள், புகார் விவரங்கள் மற்றும் முன்னோட்டம் மற்றும் சமர்ப்பிப்பு என்கிற 4 பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

- Incidents details (சம்பவ விவரங்கள்) வரிசையின் கீழ், கேட்கப்பட்ட விவரங்களையும் உள்ளிடவும்.

Save செய்து PDF File-ஐ டவுன்லோட் செய்யும்வரை!

Save செய்து PDF File-ஐ டவுன்லோட் செய்யும்வரை!

- தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு Save and Next (சேவ் அன்ட் நெக்ஸ்ட்) என்பதை கிளிக் செய்யவும்.

- Suspect detail (சஸ்பெக்ட் டீடெயில்) என்கிற பிரிவின் கீழ், உங்கள் பெயர், நீங்கள் கொண்டு செல்லப்போகும் அடையாளச் சான்று அல்லது வேறு ஏதேனும் ஆதாரத்தை குறிப்பிடவும்.

- Complaints details (கம்ப்ளெயின்ட்ஸ் டீட்டெயில்) என்கிற விருப்பத்தின் கீழ், உங்கள் மின்னஞ்சல் ஐடி, புகைப்படம் போன்ற விவரங்களை உள்ளிட்டு, அடுத்த படிக்கு செல்லவும்.

- நீங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர் Confirm and Submit (கான்ஃப்ர்ம் அன்ட் சப்மிட்) பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்! உங்கள் புகார் பதிவு செய்யப்படும்.

- நீங்கள் தாக்கல் செய்த புகாரின் PDF ஃபைலையும் கூட டவுன்லோட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Lost Money in Online Here is How To File Register Cyber Crime Complaint Using Indian Government Official Website

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X