ஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி?

|

ஆப்பிள் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடலில் டச்பார் அம்சத்தை சேர்த்து இருந்தது. இது மேக்புக் சாதனங்களுக்கென பிரத்யேக அம்சமாக இருந்து வந்தது. இதை கொண்டு பல்வேறு அம்சங்களின் செட்டிங்கை இயக்க முடியும். பயனர்கள் மத்தியில் இந்த அம்சம் அதிக பிரபலமாகவும், பயன்தரும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆல்காட்18 எனும் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் டச்பார் எனும் செயலியை உருவாக்கி இருக்கின்றனர்.

ஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி?

டச் பார் அம்சத்திற்கான ஆண்ட்ராய்டு செயலி ஸ்மார்ட்போனில் உள்ள கண்ட்ரோல் சென்டர் அம்சத்தை இயக்கும் வழி செய்கிறது. மேக்புக் போன்ற டச்பார் அம்சத்தை பெற சில வழிமுறைகள் இருக்கின்றன. டச்பார் செயலியை இலவசமாக டவுன்லோடு செய்வது மட்டுமின்றி இதனை ரூட் செய்த சாதனங்கள் மற்றும் ரூட் செய்யப்படாத சாதனங்களிலும் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டில் மேக்புக் போன்ற டச்பார் பெற என்ன செய்ய வேண்டும்?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றி ஆண்ட்ராய்டில் மேக்புக் போன்ற டச்பார் பெறலாம்:


வழிமுறை 1: ஆண்ட்ராய்டு செயலியை திறந்து செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- அன்-நோன் சோர்சஸ் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்.

வழிமுறை 2: டச் பார் ஃபார் ஆண்ட்ராய்டு செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வழிமுறை 3: செயலியை திறந்து தேவையான அனுமதியை வழங்க வேண்டும். இவற்றில் Overlay, Write System Settings, Do Not Disturb Access போன்றவை இடம்பெற்று இருக்கிறது.

வழிமுறை 4: ஆண்ட்ராய்டில் டச்பாரை செயல்படுத்த டச்பார் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி டச்பாரை ஆக்டிவேட் செய்ததும், அதனை உங்கள் விருப்பம் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதன் உயரம் மற்றும் நீலத்தை மாற்றுவதோடு கஸ்டம் ஷார்ட்கட்களையும் செயல்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Like Macbook Lite Touch Bar? How To Get It On Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X