Home
How to

கடைசி கெடு.. ரூ.1000 அபராதம்.. ஆதார், பான் அட்டை வச்சிருந்தா அலெர்ட்.. ஜூன் 30 வரை மட்டுமே.. அதுக்கு அப்புறம்?

பான் கார்டு (PAN Card) மற்றும் ஆதார் கார்டு (Aadhaar Card) தொடர்பான இந்திய அரசாங்கத்தின் காலக்கெடு ஒன்று மிகவும் நெருக்கமாக உள்ளது. முன்னதாக மார்ச் 31, 2022 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த இந்த காலக்கெடு, தற்போது ஜூன் 30, 2023 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை தங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைக்காத நபர்கள், அபராதம் செலுத்தால் அதை செய்ய விரும்பினால் ஜூன் 30 ஆம் தேதி தான் அதற்கான கடைசி கெடு நாள். அதன் பின்னர் நீங்கள் ரூ.1000 அபராதம் செலுத்தினால் மட்டுமே உங்களுடைய ஆதார்-பான் கார்டுகளை இணைக்க முடியும்.

கடைசி கெடு.. ரூ.1000 அபராதம்.. ஆதார், பான் அட்டை வச்சிருந்தா அலெர்ட்!

ஒருவேளை "பொருந்தாத விவரங்கள்" (Mismatched details) காரணமாக உங்கள் ஆதார்-பான் கார்டுகளை இணைப்பதில் சிரமங்களை சந்தித்தால், அதாவது ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ஆனது பான் அட்டையில் உள்ள விவரங்களோடு பொருந்தவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்.

இந்த சிக்கலை சரி செய்வதற்காக, அதாவது ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள முரண்பாடுகளை சரி செய்யவும், அதன் பின்னர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை வெற்றிகரமாக இணைக்கவும் வருமான வரித்துறை (Income Tax Department) ஒரு பிரத்யேக நடைமுறையை வழங்கியுள்ளது.

இதன் கீழ், மிகவும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் வழியாகவே ஆதார் மற்றும் பான் கார்டுகளில் தேவையான திருத்தங்களை செய்ய முடியும்; அதனை தொடர்ந்து இரண்டையும் எளிதாக இணைக்கவும் முடியும். இதை செய்வது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

ஆதார் அட்டையில் உள்ள முகவரி விவரங்களை மாற்றுவது / திருத்துவது எப்படி? யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India) கூற்றுப்படி எஸ்எஸ்யுபி (SSUP) என்று அழைக்கப்படும் செல்ஃப் சர்வீஸ் அப்டேட் போர்ட்டலின் (Self Service Update Portal) வழியாக, ஆதார் அட்டையில் உள்ள முகவரி விவரங்களை ஆன்லைன் வழியாகவே அப்டேட் செய்ய முடியும்.

அதை செய்ய முதலில் ssup.uidai.gov.in/ssup/ என்கிற எஸ்எஸ்யுபி போர்டல் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அப்டேட் ஆதார் (Update Aadhaar) என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை மாற்றிக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற மக்கள்தொகை விவரங்களையோ அல்லது கைரேகைகள், கருவிழிகள் மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக்ஸ் விவரங்களையோ மாற்ற விரும்பினால் ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

பான் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றுவது / திருத்துவது எப்படி? NSDL PAN இணையதளமான onlineservices.nsdl.com/ அல்லது UTIITSL இணையதளமான pan.utiitsl.com/ க்கு செல்லவும். பின்னர் "பான் கார்டு விவரங்களில் மாற்றம் / திருத்தம்" (Change / Correction in PAN card details) என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் உங்கள் பான் கார்டு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு "சப்மிட்" (Submit) என்பதை கிளிக் செய்யவும். கிடைக்கப்பெறும் படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, கோரப்படும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றவும். பிறகு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும். கடைசியாக "சப்மிட்" என்பதை கிளிக் செய்யவும்.

அவ்வளவு தான்.. இனிமேல் ஒரே ஒரு வேலை மட்டுமே மிச்சம்! ஆதார் அட்டையில் உள்ள விவரங்களானது பான் அட்டையில் உள்ள விவரங்களோடு பொருந்தும்படியான திருத்தங்களை செய்த பின்னர் eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar வழியாக உங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டுகளை மீண்டும் இணைக்க முயற்சி செய்யவும்!

யாரெல்லாம் தங்களுடைய ஆதார்-பான் கார்டுகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை? 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்; வருமான வரிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வரையறையின்படி நாட்டில் வசிக்காதவர்கள்; இந்திய குடிமக்களாக அல்லாதவர்கள். மேற்கண்ட நபர்களுக்கு தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Last Date to Link Your Pan Card and Aadhaar Card Without Rs 1000 fine is June 30 2023 How to Avoid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X