Gas சிலிண்டர் புது ரூல்ஸ்.. e-KYC, Re-KYC செய்யாத வீட்டுக்கு இன்டேன், HP, பாரத் கேஸ் வராது.. செய்வது எப்படி?
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation), உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (Ujjwala yojana scheme) பயனாளிகள், வருகிற 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தங்கள் இ-கேஒய்சி செயல்முறையை (e-KYC Process) நிறைவு செய்யுமாறு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தகவல்களின் படி, இ-கேஒய்சி செயல்முறையை செய்யாவிட்டால், இண்டேன் கேஸ் (Indane Gas), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் ஹெச்பி கேஸ் (HP Gas) ஆகியவற்றிற்கான மானியத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் இ-கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதை செய்வது நல்லது.

இண்டேன் கேஸ் சிலிண்டர் முன்பதிவு இ-கேஒய்சி: ஆதார் முக அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்வது எப்படி?
1. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். இதற்காக இந்தியன்ஆயில் ஒன் அல்லது ஆதார் பேஸ்ஆர்டி ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்தியன்ஆயில் ஒன் ஆப் ஆனது எல்பிஜி சேவைகள் மற்றும் இ-கேஒய்சி தொடர்பான வசதிகளை வழங்குகிறது.
2. ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு, இந்தியன்ஆயில் ஒன் ஆப்பை திறந்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
3. பின்னர், உங்கள் பண ரசீது (Cash Memo) அல்லது சப்ஸ்க்ரிப்ஷன் வவுச்சரில் (Subscription Voucher) உள்ள 16 இலக்க எல்பிஜி ஐடி எண்ணை இணைக்கவும். அதன் பிறகு உங்கள் வாடிக்கையாளர் விவரங்கள் திரையில் தோன்றும்.
4. ஹோம் பேஜிற்கு சென்று மை ப்ரொபைல் (My Profile) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
5:. மை ப்ரொபைல் பகுதியில் உள்ள எல்பிஜி விவரங்களை சரிபார்த்து, ரீ-கேஒய்சி (re-KYC) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
6. அடுத்ததாக சில வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் திரையில் காண்பிக்கப்படும். அவற்றை கவனமாக படித்து உங்கள் ஒப்புதலை வழங்கவும்.
7. பேஸ் ஆதென்டிகேக்ஷன் அட்வைஸரீஸ் (Face Authentication Advisories) பக்கத்தில் உள்ள டிக் பாக்ஸை தேர்வு செய்து, பேஸ் ஸ்கேன் (Face Scan) பட்டனை அழுத்தவும். பின்னர் ஆதார் முக அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்யவும்.
குறிப்பு: உங்கள் ஆதார் அக்கவுண்டில் பயோமெட்ரிக் லாக் (Biometric Lock) செயல்படுத்தப்பட்டிருந்தால், முதலில் அதை அன்லாக் செய்ய வேண்டும். இல்லையெனில் இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க முடியாது.
பாரத் கேஸ் சிலிண்டர் முன்பதிவு இ-கேஒய்சி: ஆதார் முக அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்வது எப்படி?
1. பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் முதலில் ஹலோ பிபிசிஎல் (Hello BPCL)ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2 . ஆப்பை திறந்து தேவையான விவரங்களுடன் பதிவு செய்யவும்.
3. ஹோம் பேஜில் இ-கேஒய்சி என்ற விருப்பம் காணப்படும். அதனை தேர்வு செய்யவும்.
4. அடுத்த பக்கத்தில் ஓடிபி சரிபார்ப்பு கேட்கப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் 6 இலக்க ஓடிபி எண்ணை உள்ளிடவும்.
5: ஓடிபி சரிபார்ப்பு முடிந்ததும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
6: பின்னர் ப்ரொசீட் (Proceed) என்பதை கிளிக் செய்து இ-கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யலாம்.
எச்பி கேஸ் சிலிண்டர் முன்பதிவு இ-கேஒய்சி: ஆதார் முக அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்வது எப்படி?
1. எச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி மற்றும் பிற எல்பிஜி சேவைகளுக்காக எச்பி பே (HP Pay) ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆதார் பேஸ்ஆர்டி ஆப்பையும் பயன்படுத்தலாம்.
2. எச்பி பே ஆப்பை திறந்து ரிஜிஸ்டர் என்கிற விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் எச்பி கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்ப்பை நிறைவு செய்யவும்.
4. அடுத்ததாக, எதிர்காலத்தில் எளிதாக லாக்-இன் செய்வதற்காக 4 இலக்க எம்பின் (MPIN) நம்பரை செட் செய்யவும்
5. எம்பின்-ஐ பயன்படுத்தி ஆப்பில் லாக்-இன் செய்து, லொக்கேஷன் அக்சஸ் (Location Access) அனுமதியை வழங்கவும்.
6. பின்னர் மை எச்பி பகுதிக்குச் சென்று எல்பிஜி என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
7. அங்கு இ-கேஒய்சி விருப்பம் காணப்படும். அதனை தேர்வு செய்தால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்திற்கு செல்லும்.
8. அவற்றை கவனமாக படித்து ஒப்புதல் வழங்கிய பிறகு கேப்சர் பேஸ் (Capture Face) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
9. அதன் பிறகு ஆதார் பேஸ்ஆர்டி ஆப் தானாக திறக்கும். முகத்தை ஸ்கேன் செய்ய தேவையான அனுமதிகளை வழங்கி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றி இ-கேஒய்சி செயல்முறையை வெற்றிகரமாக முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications