உங்க போனோட ரீடெயில் பாக்ஸை பத்திரமா எடுத்து வச்சி இருக்கீங்களா? நல்லதா போச்சு.. உடனே எடுத்து நோட் பண்ணுங்க!
உங்களிடம் இருப்பது சற்றே பழைய ஸ்மார்ட்போனாக (Old Smartphone) இருந்தாலும் சரி அல்லது சமீபத்தில் வாங்கிய லேட்டஸ்ட் போன்களில் (Latest Phone) ஒன்றாக இருந்தாலும் சரி.. அந்த போனின் ரீடெயில் பாக்ஸை (Retail Box) பத்திரமாக வைத்து இருக்கிறீர்கள் என்றால்.. உடனே அதை கையில் எடுங்க!
ஏனென்றால், உங்கள் ஸ்மார்ட்போன் எங்கே இருக்கிறது என்கிற லோக்கேஷனை (Location) கண்டுபிடிக்க உதவும் "ஒரு நம்பர்" அந்த ரீடெயில் பாக்ஸில் தான் உள்ளது. உங்களில் சிலருக்கு நாம் இங்கே பேசுவது ஐஎம்இஐ நம்பரை (IMEI Number) பற்றித்தான் என்பது இந்நேரம் புரிந்து இருக்கும்.

ஒருவேளை உங்களுக்கு ஐஎம்இஐ நம்பர் என்றால் என்ன? அதை ஏன் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்? அதை தெரிந்து வைத்துக்கொள்வதால் என்ன பயன்? ரீடெயில் பாக்ஸ் தவிர்த்து ஒரு ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுப்பிடிப்பது எப்படி? என்று எதுவுமே தெரியாதென்றால்.. இதோ அந்த விவரங்கள்:
ஐஎம்இஐ நம்பர் என்றால் என்ன? சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (International Mobile Equipment Identity) தான் ஐஎம்இஐ நம்பர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொபைல் போனிற்கும் வெவ்வேறு 15 இலக்க (15 Digit) ஐஎம்இஐ நம்பர்கள் இருக்கும்.
ஐஎம்இஐ நம்பரின் பயன் என்ன? முன்னரே குறிப்பிட்டபடி, இது உங்களுடையய மொபைல் போனின் இருப்பிட தகவல்களை வெளிப்படுத்தும். ஒருவேளை உங்கள் போன் தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ.. உங்கள் மொபைலில் உள்ள சிம் கார்டு அகற்றப்பட்டிருந்தாலும் கூட ஐஎம்இஐ நம்பர் வழியாக அது எங்கே இருக்கிறது என்கிற தகவல்களை கண்டறிய முடியும்.
உங்கள் ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? ஒரு மொபைல் போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிக்க 3 வழிகள் உள்ளன. முதல் மற்றும் மிகவும் எளிமையான வழி - ரீடெயில் பாக்ஸ் தான். ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸிலும் அந்த போனின் ஐஎம்இஐ நம்பர் இருக்கும். ஒன்று அதை பத்திரமாக வைத்துகொள்ளுங்கள்; அல்லது ஐஎம்இஐ நம்பரை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ரீடெயில் பாக்ஸ் இல்லையா.. கவலை வேண்டாம்! ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் கிடைக்கவில்லை என்றால், .கவலைப்பட வேண்டாம். உங்கள் மொபைல் போனில் உள்ள டயலரை (Dialer) திறந்து *#06# என்கிற எண்ணிற்கு டயல் செய்யவும். அவ்வளவு தான், இப்போது உங்கள் ஸ்க்ரீனில் ஐஎம்இஐ நம்பர் காட்சிப்படும்; அதை ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து கூகுள் ட்ரைவ்வில் (Google Drive) சேமித்து வைத்துக்கொள்ளவும்.
மூன்றாவது வழி: உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் (Settings) வழியாக, ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிக்கலாம். இதை செய்ய உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு சென்று, கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து அபௌட் போன் (About Phone) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின் மறுபடியும் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்ய ஐஎம்இஐ நம்பரை காண்பீர்கள், அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications








