பேங்க் பேலன்ஸை ரகசியமா வச்சிக்க விரும்பும் எல்லாருக்கும் ஒரு முக்கிய அலெர்ட்!

|

நம்முடைய ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும், பலருக்கும் தெரியாத ஒரு பாதுகாப்பு ஓட்டை உள்ளது. அதுவும் பேங்க் பேலன்ஸ் (Bank Balance) தொடர்பான ஒரு பாதுகாப்பு ஓட்டை!

அதுபற்றி தெரிந்து கொண்டால்.. உங்கள் ஆதார் அட்டையை பீரோவுக்குள் போட்டு பூட்டி விடுவீர்கள்; யாரிடமும் அதை காட்ட மாட்டீர்கள்.. அவ்வளவு ஏன்? உங்கள் ஆதார் அட்டையின் ஜெராக்ஸ்-ஐ கூட எடுத்து ஒளித்து வைத்துக்கொள்வீர்கள்!

அப்படி என்ன பாதுகாப்பு ஓட்டை?

அப்படி என்ன பாதுகாப்பு ஓட்டை?

ஆதார் அட்டை தொடர்பான பாதுகாப்பில் இருப்பதை ஓட்டை என்று கூறுவதை விட, ஒரு குறை என்றே கூறலாம்.

ஏனெனில் ஒருசிலர் தங்கள் சொந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கூட தன்னுடைய பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்பது தெரிந்து விட கூடாது என்று நினைக்கிறார்கள்.

Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!Vodafone கஸ்டமர்களுக்கு நிரந்தர ஆபத்து! ஆன்லைனில் அம்பலமான அட்ரெஸ்கள்!

அப்படியான நபர்களுக்கு இதுவொரு சிக்கல் தான்!

அப்படியான நபர்களுக்கு இதுவொரு சிக்கல் தான்!

ஏனெனில், உங்கள் ஆதார் அடையாள எண்களை (ஐடி) பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் மொத்த தொகை எவ்வளவு என்பதை அறிந்துகொள்ள முடியும் ஒரு எளிய வழிமுறை உள்ளது.

சுவாரசியமான விடயம் என்னவென்றால்., இது ஒரு திருட்டுத்தனமான வழியல்ல; அரசாங்கமே ஒத்துழைக்கும் அதிகாரபூர்வமான வழியாகும்!

அதெப்படி?

அதெப்படி?

UIDAI (Unique Identification Authority of India) வழங்கும் ஒரு எஸ்எம்எஸ் சேவை வழியாக, ஆதார் அட்டை வழியாக பேங்க் பேலன்ஸ்-ஐ செக் செய்யும் ஒரு சேவை அணுக கிடைக்கிறது.

கேட்பதற்கு ஒரு நல்ல சேவை போல தோன்றினாலும், இதில் தான் நாங்கள் குறிப்பிடும் பாதுகாப்பு ஓட்டை உள்ளது!

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

அது என்னது?

அது என்னது?

துரதிர்ஷ்டவசமாக, ஆதார் அட்டை வழியாக பேங்க் பேலன்ஸை அறிந்துகொள்ள உதவும் யுஐடிஏஐ-யின் எஸ்எம்எஸ் சேவையில் OTP அங்கீகாரம் எதுவும் இல்லை.

அதாவது உங்கள் ஆதார் அட்டையை அல்லது ஆதார் நம்பரை வைத்து இருக்கும் மற்றும் உங்கள் மொபைல் போனை வைத்து இருக்கும் அல்லது பயன்படுத்தும் எவரும் (யுஐடிஏஐ-யின் எஸ்எம்எஸ் சேவை வழியாக) உங்கள் வங்கி கணக்கின் இருப்பை (Bank Balance) அறிந்து கொள்ள முடியும்.

இன்னும் கொடுமையான விடயம் என்னவென்றால்?

இன்னும் கொடுமையான விடயம் என்னவென்றால்?

ஒடிபி அங்கீகாரம் இல்லை என்பது மட்டுமே, யுஐடிஏஐ-யின் இந்த எஸ்எம்எஸ் சேவையில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாடு அல்ல.

கூடுதலாக, இந்த செயல்முறையின் கீழ் நீங்களே உங்களின் பேங்க் பேலன்ஸை பார்த்தாலும் கூட, அதுகுறித்த மெசேஜ் அலெர்ட் உங்களுக்கு கிடைக்காது.

ஆக யார் வேண்டுமானாலும் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை வைத்து உங்கள் மொபைல் போன் வழியாக உங்களின் பேங்க் பேலன்ஸை ரகசியமாக செக் செய்யலாம். அது பற்றி உங்களுக்கு தெரியவே வராது!

IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!IRCTC டிப்ஸ்: அடச்சே! இவ்ளோ நாள் இது தெரியாம.. ரயில்ல பயணிச்சி இருக்கோமே!

நல்லது செய்ய போய்.. கெட்டதாக மாறிவிட்டது!

நல்லது செய்ய போய்.. கெட்டதாக மாறிவிட்டது!

மொபைல் பேங்கிங் ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியாத பீச்சர் போன்களை வைத்திருப்பவர்களை மற்றும் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாதவர்களை மனதிற்கொண்டு உருவாக்கப்பட்ட UIDAI-யின் இந்த SMS சேவைக்கு - தீங்கு விளைவிக்கும் - இன்னொரு பக்கமும் இருப்பது சற்றே அதிர்ச்சி அளிக்கிறது.

ஒருவேளை..?

ஒருவேளை..?

ஒருவேளை நீங்கள் நல்ல எண்ணத்தின் கீழ், ஆதார் கார்டு வழியாக பேங்க் பேலன்ஸை அறிந்துகொள்வது எப்படி என்கிற எஸ்எம்எஸ் செயல்முறையை தெரிந்துகொள்ள விரும்பினால்...

அதெப்படி என்கிற எளிய வழிமுறைகள் இதோ..

- ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்யவும்.

- இப்போது உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

- இப்போது உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு, அதை உறுதிப்படுத்தவும்.

விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?

அவ்வளவு தான்!

அவ்வளவு தான்!

இப்போது உங்கள் மொபைல் ஸ்க்ரீனில், உங்களின் பேங்க் பேலன்ஸ் ஒரு ஃபிளாஷ் மெசேஜ் வடிவில் காட்டப்படும். இந்த ஃபிளாஷ் எஸ்எம்எஸ் ஆனது UIDAI மூலமாகவே அனுப்பப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Just SMS Your Aadhaar Details to this Number and Check Your Bank Balance Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X