Home
How to

ஓஹோ அப்படியா.. Sony LIV க்கு பணம் கட்டாமல் செப்.28 வரை ASIA CUP 2025 போட்டிகளை LIVE ஆக பார்ப்பது எப்படி?

கிரிக்கெட் ரசிகர்களுக்கான குட் நியூஸ் என்னவென்றால் - ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் போட்டிகள் ஆனது வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. பேட் நியூஸ் என்னவென்றால் - இந்த போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் பெறவில்லை; சோனி லைவ் (SONY Liv) பெற்றுள்ளது!

சோனி லைவ் சந்தா திட்டங்களின் விலைகள் நெட்பிளிக்ஸ்-ஐ அதிகமாகும். நெட்பிளிக்ஸ் ஆனது ரூ.199 முதல் கிடைக்கும் மறுகையில் சோனி லைவ் மொபைல் ஒன்லி சந்தாவின் 1 ஆண்டு திட்டத்தின் விலை ரூ.699 ஆகவும், லைவ் பிரீமியம் சந்தாவின் மாதாந்திர திட்டத்தின் விலை ரூ.399 ஆகவும் உள்ளது.

செப்.28 வரை FREE ஆக ASIA CUP 2025 போட்டிகளை பார்ப்பது எப்படி?

சோனி லைவ் சந்தாவின் விலையை கேட்டு, கிரிக்கெட் ரசிகர்களும், பட்ஜெட் வாசிகளும் தங்கள் கைகளை பிசையும் இந்த இடத்தில் தான் சோனி லைவ் சந்தாவை இலவசமாக வழங்கும் ப்ரீபெய்ட் மொபைல் (ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ) ரீசார்ஜ் திட்டங்கள் "மாஸ்" ஆக என்ட்ரி கொடுக்கின்றன.

சோனி லைவ் சந்தாவை இலவசமாக வழங்கும் ஜியோ திட்டங்கள்: முதலாவதாக ரூ.175 டேட்டா பேக் உள்ளது, இது 10ஜிபி டேட்டாவையும் சோனி லைவ் உட்பட 10 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

அடுத்ததாக ரூ.445 திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. மேலும், சோனி லைவ், ஜீ5 மற்றும் டிஸ்கவரி பிளஸ் ஆகியவற்றின் இலவச சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கடைசியாக ரூ.1049 திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. மேலும், சோனி லைவ் உட்பட இலவச ஓடிடி சந்தாக்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

சோனி லைவ் சந்தாவை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்: முதலாவதாக ரூ.181 டேட்டா பேக் உள்ளது, இது 15ஜிபி டேட்டாவையும் சோனி லைவ் உட்பட ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைல் பிரீமியமிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 மாதம் ஆகும்.

அடுத்ததாக ரூ.279 திட்டம் உள்ளது. இது மொத்தம் 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. மேலும், சோனி லைவ் உட்பட பல ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாக்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கடைசியாக ரூ.979 திட்டம் உள்ளது. இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. மேலும், சோனி லைவ் உட்பட 22 க்கும் மேற்பட்ட இலவச ஓடிடி சந்தாக்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

சோனி லைவ் சந்தாவை இலவசமாக வழங்கும் வோடாபோன் ஐடியா திட்டங்கள்: முதலாவதாக ரூ.95 டேட்டா பேக் உள்ளது, இது 4ஜிபி டேட்டாவையும் சோனி லைவ் இலவச சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள் ஆகும். அடுத்ததாக ரூ.175 திட்டம் உள்ளது. இது மொத்தம் 10ஜிபி டேட்டா, இலவச சோனி லைவ் ஓடிடி சந்தா ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

அடுத்ததாக ரூ.154 திட்டம் உள்ளது. இது 2ஜிபி டேட்டா, சோனி லைவ் சந்தாவை 1 மாத கால வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இதேபோல ரூ.202 திட்டம் 5ஜிபி டேட்டா, சோனி லைவ் சந்தாவை 1 மாத கால வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. இப்படியாக வோடாபோன் ஐடியா சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.998 மற்றும் 408 திட்டங்களும் இலவ சோனி லைவ் சந்தாவை வழங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Jio Airtel Vi Plans That Offer Free SONY Liv To Watch Ind Vs Pak Asia Cup 2025 LIVE on Sep 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X