Home
How to

நல்லவேளை இப்போவே சொன்னீங்க.. மறந்தும் கூட ITR Filing-ல் இந்த தப்பை செஞ்சிடாதீங்க.. அப்புறம் Refund கிடைக்காது!

முதலில் பின்வரும் இரண்டு 31 ஆம் தேதிகளையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும் அல்லது குறித்து வைத்து கொள்ளவும். 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் (ITR Filing) செய்வதற்கான கடைசி தேதி, தனிநபர்களுக்கும் மற்றும் கணக்குகள் தணிக்கை செய்ய தேவையில்லாத பெரும்பாலான வரி செலுத்துவோருக்கும் ஜூலை 31, 2026 ஆகும்.

ஜூலை 31 என்கிற தேதியை நீங்கள் தவறவிட்டால், டிசம்பர் 31, 2026 வரை தாமதமான அறிக்கையை தாக்கல் செய்யலாம், ஆனால் உங்கள் வருமானத்தை பொறுத்து, தாமத கட்டணம் விதிக்கப்படும். இந்த 2 தேதிகளை நினைவில் வைத்து அதற்கு முன்பாகவே ஐடிஆர் ஃபைலிங் செய்துவிட்டால் போதுமா.. எல்லாம் ஓகே-வா? என்று கேட்டால் - அதுதான் இல்லை.

ITR Filing-ல் இந்த தப்பை செஞ்சிடாதீங்க.. அப்புறம் Refund கிடைக்காது!

எந்த தவறும் இல்லாமல் சரியாக ஐடிஆர் ஃபைல் செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கான ரீபண்ட் ஆனது தாமதமாகிவிடும். இப்படி உங்கள் ரீபண்ட்டை தாமதம் ஆக்கக்கூடிய 6 முக்கியமான ஐடிஆர் ஃபைலிங் தவறுகளை தான் இங்கே பார்க்க உள்ளோம். இவைகளை முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வது உங்களுக்கும், உங்களின் மன அமைதிக்கும் மற்றும் உங்கள் பணத்திற்கும் நல்லது!

1. தவறான அல்லது சரிபார்க்கப்படாத பேங்க் அக்கவுண்ட்: ரீபண்ட் ஆனது மின்னணு முறையில் வரவு வைக்கப்படுகிறது. தவறான பேங்க் அக்கவுண்ட் நம்பர், தவறான ஐஎப்எஸ்சி, க்ளோஸ்டு அக்கவுண்ட் அல்லது அக்கவுண்ட்டை முன்கூட்டியே சரிபார்க்க தவறுவது ஆகியவைகள் - பணம் திரும்ப பெறுவதில் தோல்வி அல்லது தாமதத்தை ஏற்படுத்தலாம்.

2. ஏஐஎஸ் / பார்ம் 26ஏஎஸ் பொருந்தாமை: நீங்கள் தெரிவித்த வருமானம் அல்லது டிடிஎஸ் (தட்ஸ்) ஆனது அரசாங்க பதிவுகளில் இருந்து வேறுபட்டால், வருமான அறிக்கை கூடுதல் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படலாம்.
3. தவறான டிடிஎஸ் கோரிக்கை: வரிப்பதிவுகளில் இல்லாத டிடிஎஸ்-ஐ கோருவது பெரும்பாலும் செயலாக்கத்தை தாமதப்படுத்துகிறது.

4. அறிவிப்புகள் அல்லது நிலுவையில் உள்ள வரிக் கோரிக்கைகளை புறக்கணிப்பது: நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அல்லது தீர்க்கப்படாத அறிவிப்புகள், பிரச்சினை தீர்க்கப்படும் வரை ரீபண்ட் தாமதப்படுத்தலாம்.
5. பான்-ஆதார் சிக்கல்கள்: ஆதார் இணைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஒரு பான் செயல் இழந்தால், ரீபண்ட் பெறுவது நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது தாமதமாகலாம்.

6. வருமான அறிக்கையை மின்னணு முறையில் சரிபார்க்காமல் இருப்பது: 2026 ஆம் ஆண்டில் நீங்கள் வருமான அறிக்கையை சமர்ப்பிப்பது மட்டும் போதாது. குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் மின்னணு சரிபார்ப்பை ( e-verification) முடிக்கவில்லை என்றால், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படாததாக கருதப்படலாம்.

உங்கள் வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் சரிபார்ப்பதற்கான (e-verify your ITR) பல்வேறு வழிகள் உள்ளன. வரி செலுத்துவோர் பின் வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தங்கள் வருமான வரிக் கணக்கை ஆன்லைனில் மின்னணு முறையில் சரிபார்க்கலாம்:

ஆதார் ஒடிபி: வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் சரிபார்ப்பதற்கான எளிமையான வழிகளில் இதுவும் ஒன்றாகும். இதில், வரி செலுத்துவோர் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி-ஐ பெறுவார்கள். நீங்கள் ஒடிபி-ஐ உள்ளிட்டவுடன், உங்கள் சரிபார்ப்பு நிறைவடையும். தங்கள் பான் (PAN) மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (Electronic verification code - EVC): உங்கள் முன்-சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு, டீமேட் கணக்கு அல்லது ஏடிஎம் (ஆஃப்லைன் முறை) மூலம் உருவாக்கப்படும் மின்னணு சரிபார்ப்பு குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் சரிபார்க்கலாம்.

நெட் பேங்கிங்: பல வங்கிகள், பயனர்கள் தங்கள் ஆன்லைன் வங்கி கணக்கு மூலம் நேரடியாக வருமான வரி அறிக்கையை சரிபார்க்க அனுமதிக்கின்றன. லாக்இன் செய்த பிறகு, வரி செலுத்துவோர் வரி தாக்கல் அல்லது மின்னணு சரிபார்ப்பு பகுதிக்கு செல்ல வேண்டும். இது அவர்களை வருமான வரி இணையதளத்திற்கு திருப்பி, செயல்முறையை உடனடியாக முடிக்க உதவும்.

டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ் (Digital signature certificate - DSC): நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (LLPகள்), மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டிய எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் இந்த ஏற்பாட்டை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில், டிஜிட்டல் கையொப்பத்தை இணைப்பது சான்றாக செயல்பட்டு, சரிபார்ப்பு செயல்முறையைப் பாதுகாப்பாக நிறைவு செய்கிறது.

பிஸிக்கல் ஐடிஆர்-வி (Physical ITR-V): இது நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கையின் கையொப்பமிடப்பட்ட காகித ஒப்புகை ஆகும். உங்கள் வருமான வரி அறிக்கையை நீங்கள் டிஜிட்டல் முறையில் இ-வெரிஃபை செய்யவில்லை என்றால், நீங்கள் படிவத்தை அச்சிட்டு, நீல மையில் கையொப்பமிட்டு, உங்கள் அறிக்கையை தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் மூலம் பெங்களூரு சிபிசி-க்கு அனுப்ப வேண்டும்.

இ-வெரிஃபை நிறைவடைந்துவிட்டது என்பதை நீங்கள் எப்படி அறிந்துகொள்வீர்கள்? வருமான வரி அறிக்கையை சரிபார்க்க, நீங்கள் incometax.gov.in என்ற இணையதளத்தில் லாக்-இன் செய்யவேண்டும். இப்போது நீங்கள் 'e-file' என்பதை கிளிக் செய்து, பின்னர் 'income tax returns' என்பதை தேர்ந்தெடுத்து, 'e-verify returns' என்பதை தேர்ந்தெடுக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நீங்கள் இ-வெரிஃபையை முடித்த பிறகு, ஒரு பரிவர்த்தனை அடையாள எண்ணுடன் (Transaction ID) ஒரு மெசேஜ் காட்டப்படும், மேலும் மின்னணு தாக்கல் இணையதளத்தில் (e-Filing portal) பதிவுசெய்யப்பட்ட உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். வரி செலுத்துவோர் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வருமான வரி இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் ஒடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு இந்த விவரங்களை சார்ந்துள்ளது. இது மின்னணு சரிபார்ப்பு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும்.

Best Mobiles in India

English summary
ITR Filing 2026 Mistakes that can directly delay or Hold your refund
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X