Home
How to

ITR filing 2026 லாஸ்ட் டேட் அறிவிப்பு.. யார் எந்த Form-ஐ தேர்வு செய்ய வேண்டும்? என்னென்ன Documents தேவை?

2025-26 நிதியாண்டிற்கான உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் (ITR filing 2026) செய்வதற்கான கடைசி தேதி (தனிநபர்கள் மற்றும் கணக்குகள் தணிக்கை செய்ய தேவையில்லாத பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு) ஜூலை 31, 2026 ஆகும். இந்த தேதியை நீங்கள் தவறவிட்டால், டிசம்பர் 31, 2026 வரை தாமதமாக தாக்கல் செய்யலாம், ஆனால் உங்கள் வருமானத்தைப் பொறுத்து தாமத கட்டணம் விதிக்கப்படும்.

தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்கும்போது, ​​உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது மிகவும் எளிதான வேலையாக இருக்கும். கடைசி நிமிடம் வரை ஆவணங்களை சேகரிப்பதை தாமதப்படுத்தினால் - அது பிழைகள், வரி விலக்குகளை தவறவிடுதல் மற்றும் தேவையற்ற மன அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

ITR filing 2026 லாஸ்ட் டேட் அறிவிப்பு.. Form மற்றும் Documents!

அப்படியாக ஐடிஆர் ஃபைலிங் 2026-க்கு உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் (ITR filing 2026 Documents) தேவைப்படும்? மொத்தம் 7 வகையான வருமான வரிப் படிவங்கள் (ITR forms) உள்ளன. அதில் யார் எல்லாம் எந்த ஐடிஆர் படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்கிற விவரங்கள் இதோ:

நீங்கள் எந்த வருமான வரிப் படிவத்தை (Type of ITR form) தேர்ந்தெடுக்க வேண்டும்? வரி செலுத்துபவரின் வருமான வகை மற்றும் தொகையை பொறுத்து, பொருந்தக்கூடிய வருமான வரிப் படிவம் அமையும். வருமான வரி இணையதளத்தில் கிடைக்கும் பல்வேறு படிவங்களும், அவற்றை யார் தாக்கல் செய்ய வேண்டும் என்கிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வருமான வரிப் படிவம் 1 (ITR 1): ரூ.50 லட்சம் வரையிலான வருமானம் மற்றும் ரூ.1.25 லட்சம் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயங்களை கொண்ட சம்பளம் பெறும் தனிநபர்கள்.
வருமான வரிப் படிவம் 2 (ITR 2): வணிக வருமானம் இல்லாத தனிநபர்கள் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் (HUF). மூலதன ஆதாயங்கள் மற்றும் பல சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானம் தெரிவிக்கப்பட வேண்டும்.

வருமான வரிப் படிவம் 3 (ITR 3): வணிகம் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம்.
வருமான வரிப் படிவம் 4 (ITR 4): வணிகம் மற்றும் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.50 லட்சத்தை தாண்டாத பட்சத்தில்.

வருமான வரிப் படிவம் 5 (ITR 5): நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (LLPs), சங்கங்களின் கூட்டமைப்புகள் (AOPs), மற்றும் நிறுவன உரிமையாளர்கள் (BOIs)
வருமான வரிப் படிவம் 6 (ITR 6): நிறுவனங்கள்
வருமான வரிப் படிவம் 7 (ITR 7): அறக்கட்டளைகள்

வருமான வரித் துறையின்படி, தங்களின் அசல் வருமான வரிப் படிவத்தில் தவறுகள் செய்துள்ள வரி செலுத்துபவர்கள், அவற்றை சரிசெய்து திருத்தப்பட்ட வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்யலாம். இருப்பினும், திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அசல் வருமான வரி அறிக்கையில் உள்ள விவரங்களுக்கு பதிலாக அமலுக்கு வரும்.

ஐடிஆர் தாக்கல் செய்ய உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
- பான், ஆதார் மற்றும் அடிப்படை விவரங்கள்
- படிவம் 16 (தற்போது படிவம் 130, ஆனால் இந்த ஆண்டுக்கு பொருந்தாது)
- படிவம் 26AS மற்றும் AIS
- வட்டி சான்றிதழ்கள்
- முதலீட்டு ஆதாரங்கள்
- வாடகை ரசீதுகள் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) பதிவுகள்
- மூலதன ஆதாய அறிக்கை
- முந்தைய ஆண்டு வருமான வரி அறிக்கை நகல்
- பிற வருமான சான்றுகள்

Best Mobiles in India

English summary
ITR filing 2026 last date July 31 What documents you would need Which ITR form should you choose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X