நீங்கள் கட்டும் வரிப்பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக காலாண்டு (3 மாதம்) கணக்கில் வருமான வரித்துறையிடம் டிடிஎஸ்-ஐ பைல் செய்ய வேண்டும்.

|

டிடிஎஸ் என்னும் வரிப்பணம் ஒவ்வொருவருடைய சம்பளத்திலிருந்து கண்டிப்பாக கழிக்கப்படும். இதை அந்தந்த நிறுவனமே பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. மேலும் 447 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தொழில் தேவைகளுக்காக பயன்படுத்தி உள்ளன என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

நீங்கள் கட்டும் வரிப்பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா.?

இப்போது ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாக காலாண்டு (3 மாதம்) கணக்கில் வருமான வரித்துறையிடம் டிடிஎஸ்-ஐ பைல் செய்ய வேண்டும். மேலும் உங்களிடம் பிடிக்கும் வரி பணம் அரசிடம் சரியாக போய்சேருகிறதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி? பார்ப்போம்.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

முதிலில் tax e-filing-என்ற வலைதளம் மூலம் உள்நுழைய வேண்டும். பின்பு உங்களுடைய சரியான ஐடி மற்றும் பாஸ்வர்ட் போன்றவற்றை அந்த வலைதளத்தில் பதிவிட வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ்(AS) என்ற இரண்டு விருப்பங்கள் இருக்கும், ஃபார்ம் 16 பொறுத்தவரை சம்பள தொகையில் பிடிக்கப்பட்ட வரி குறித்த தகவல் இடம்பெற்றிருக்கும். அதன்பின்பு ஃபார்ம் 26ஏஎஸ் பொறுத்தவரை நீங்கள் வருமான வரித்துறையினரிடம் செலுத்திய வரித்தொகை குறித்த அரசு ஆவணங்கள் இடம்பெற்றிருக்கும்.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் நீங்கள் ஃபார்ம் 26ஏஎஸ் -எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

ஃபார்ம் 26ஏஎஸ் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், மேலும் இரண்டு ஃபார்ம்களின் தொகையும் ஒத்துப்போகவில்லை என்றால், உங்கள் நிறுவனம் உங்கள் கணக்கில் சரியாக வரி செலுத்தவில்லை என்று அர்த்தம்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

குறிப்பாக டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் பைல் செய்த 10 நாட்களுக்குள் இதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஒத்துப்போகவில்லை என்றால், உடனடியாக வரி பிடித்தம் செய்பவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

பின்பு TRACES வலைத்தளத்தில் இருந்து ஃபார்ம் 26ஏஎஸ்-ஐ எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும், குறிப்பாக இது உங்களின் வரி விவரங்களை சேமித்து வைத்திருக்கும்.

வழிமுறை-7:

வழிமுறை-7:

பான் எண்ணுடன் சரியான மொபைல் எண்ணை இணைத்திருந்தால், டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ் குறித்த எஸ்எம்எஸ்-ஐ வருமான வரித்துறையினர்
அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிப்பது எப்படி?

ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிப்பது எப்படி?

ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் முழுத் தகவல்களையும் மிக எளிமையா கண்டுபிடிக்க முடியும், மேலும் இந்த பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட செயலி தேவைப்படுகிறது. ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு செயலிகளில் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிக்க ஆன்லைனில் Eyecon-எனும் செயலி வெளிவந்துள்ளது, இவற்றில் உள்ள சிறப்பம்சம் பொறுத்தவரை மொபைல் நம்பரை வைத்து மற்றவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. இதுவரை Eyecon செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் Eyecon-எனும் செயலி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து இந்த செயலியில் மொழியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு நாடு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், அதன்பின்பு Eyecon-செயலியில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயரை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் Eyecon-செயலியில் search contacts-எனும் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் நபரின் மொபைல் எண் கொடுத்து, அவரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
வழிமுறை-5:

வழிமுறை-5:

இந்த செயலியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன, இவற்றை பயன்படுத்தி கூட மிக எளிமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Is your TDS actually going to government Heres how to check ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X