உங்களது ஸ்மார்ட்போன் ஸ்லோவாக இருக்கிறதா? சரி செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்.!
பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும் இப்போது சீன நிறுவனங்கள் சில 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்களது ஸ்மார்ட்போனின் வேகம் மெதுவாக இருக்கிறதா? அதாவது ஸ்லோவாக இருக்கிறதா? இப்போது ஸ்லோவாக இருக்கக் காரணங்கள் என்ன, அதை எப்படிச் சரி செய்வது போன்ற வழிமுறைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அப்டேட்ட செய்ய வேண்டும். அதாவது உங்களது போன் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என்று எதுவாக இருந்தாலும் அவற்றைச் சரியாக அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு அப்டேட்டும் ஸ்மார்ட்போனுக்கு அவசியமாகிறது. அப்படி அப்டேட் செய்யப்படவில்லை என்றால், உங்கள் போன் மெதுவாக இருப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதைச் சரி செய்ய உங்கள் போனை வைஃபையுடன் இணைத்து, settings> about phone அல்லது system updates> search for updates கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
உங்களது போனில் தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குவது மிகவும் அவசியமான ஒன்று. குறிப்பாக பயன்படுத்தப்படாத ஆப்ஸ்களை நீக்கிவிட வேண்டும் இத்தகைய ஆப்ஸ்கள் நிறைய சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்கின்றன. பின்பு வைரஸ் தடுப்பு செயலிகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குவதால் சேமிப்பிடத்தை காலியாக்குவது மட்டுமல்லாமல் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்க முடியும்.
நீங்கள் குறைந்த விலை போன்கள் அல்லது பழைய பயன்படுத்துகிறீர்கள் என்றால், பெரிய அளவிலான ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது இது அதிகளவு ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளும். பின்பு இதனால் உங்களது போன் ஹேங் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே லைட் வெர்ஷன் ஆப்ஸ்களை உங்களது போன்களில் பயன்படுத்துங்கள்..
குறிப்பாக போனின் செயல்திறனை மேம்படுத்தப் பயனுள்ள வழிகளில் ஒன்று ரீஸ்டார்ட் செய்வது. அதாவது உங்களது ஸ்மார்ட்போன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் வேகம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்களது ஸ்மார்ட்போனை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது மிகவும் அவசியம்.

ஸ்மார்ட்போனை வாங்கிய புதிதில், அதற்குரிய சார்ஜ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று முனைப்பு மற்றும் போனில் சின்ன கீறல் கூட விழக்கூடாது என்று மிகவும் பத்திரமாகப் பாதுகாப்பது என்று போனை மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளுவோம். ஆனால் நாளாக நாளாக அந்த போனில் அவ்வளவு அக்கரை செலுத்த மாட்டோம். குறிப்பாக போனின் ஸ்க்ரீனை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் நல்லது. பின்பு டூப்ளிகேட் சார்ஜர் பயன்படுத்துவது கூட போனின் வேகத்தைக் குறைக்கும். எனவே, ஒரிஜினல் சார்ஜரைப் பயன்படுத்துவது நல்லது.
குறிப்பாக உங்களது போனில் பயன்பாட்டில் இல்லாத பெரிய பைல்கள், வீடியோக்கள் அல்லது படங்களை மொபைலில் இருந்து நீக்க வேண்டும். இதன்மூலம் கூட ஸ்மார்ட்போனை வேகமாகச் செயல்பட வைக்கமுடியும்.


Click it and Unblock the Notifications