உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது.?
"உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது" - இப்படியான ஒரு மெசேஜை யாருமே விரும்ப மாட்டார்கள், இன்னும் சொல்லப்போனால் முகநூல் பிரியர்களுக்கு இதுவோரு ஒரு பயங்கரமான பகல்கனவிற்கு சமம்..!
சரி ஒருவேளை நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள செய்தி கிடைக்கும் போது நீங்கள் தானாக முன்வந்து உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை மீட்க முடியும். அதற்கு நீங்கள் விரைவில் செய்யப்பட வேண்டும். அது சார்ந்த எளிய தந்திரங்களை பற்றிய தொகுப்பே இது.

காப்பாற்றிக் கொள்ள..
ஹேக் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க / காப்பாற்றிக் கொள்ள, எப்போதுமே இறுக்கமான ப்ரைவஸி செட்டிங்ஸ் மற்றும் ஒரு வழக்கமான அடிப்படையில் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டியது அவசியம். மீறி ஒருவேளை உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்தால் உடனடியாக இவைகளை நிகழ்த்தவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாஸ்வேர்ட்டை மாற்றவும்
உங்கள் அக்கவுண்ட்டை மீட்க முதல் விடயமாக உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும். ஹோம் > அக்கவுண்ட் செட்டிங்ஸ் > ஜெனரல் > பாஸ்வேர்ட் ஆப்ஷன் கிளிக் செய்து இருப்பு பாஸ்வேர்ட்தனை உறுதி செய்த பின்னர் புதிய பாஸ்வேர்ட்தனை சமர்ப்பிக்கவும்.

பாஸ்வேர்ட் ரீசெட் செய்யவும்
ஒருவேளை உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்ட பின்பும் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய முடியவில்லை எனில் உங்கள் கடவுச்சொல்லை ரீசெட் செய்வது தான் ஒரே வழி. பாஸ்வேர்ட்தனை ஹோம் பக்கத்தில் ரீசெட் செய்யலாம் அதை க்ளிக் செய்வதன் மூலம் பதிவு செய்யபட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்து ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும், உங்கள் கணக்கை மீட்டெடுக்கலாம்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கம்ப்ரமைஸ்டு அக்கவுண்ட் என ரிப்போர்ட் செய்யவும்
திடீரென்று உங்கள் கட்டுப்பாடின்றி அங்கீகரிக்கப்படாத இணைப்புகள் மற்றும் விளம்பரங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் இந்த எரிச்சலூட்டும் நிகழ்வை பெரிய அளவிலான பயனர்கள் எதிர்கொண்டுள்ளன. இதை தடுக்க பயனர்கள்,கம்ப்ரமைஸ்டு அக்கவுண்ட் என ரிப்போர்ட் செய்து உங்கள் தொடர்புகளுக்கு இணைப்புகள் அனுப்புவதை தடுத்து நிறுத்தலாம்.

சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகள் அகற்றவும்
பெரும்பாலும் உங்கள் அக்கவுண்ட் ஆனது ஒரு நபரால் ஹேக் செய்யப்படாமல் ஒரு தீங்கிழைக்கும் பயன்பாட்டால் ஹேக் செய்யப்பட்டு இருக்க முடியும். ஆக உங்களை பொருத்தமட்டில் சந்தேகத்திற்குரிய சில பயன்பாடுகளை நீக்கி விட வேண்டும். அதை நிகழ்த்த ஹோம் > அக்கவுண்ட் செட்டிங்ஸ் > ஆப்ஸ் சென்று சந்தேகத்திற்கு உரிய ஆப்களை நீக்கி விடவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை கண்டறிவது எப்படி..?


Click it and Unblock the Notifications