10 விநாடியில் பணம்.. Mobile Loan Apps இல் கடன் வாங்கலாமா? எது பெஸ்ட்?

|

மாதம் பிறந்தால் சம்பளம் வருவதும் தெரியவில்லை போவதும் தெரியவில்லை, அடுத்தடுத்து வரும் பண்டிகை தினங்கள் மாத சம்பளத்தில் துண்டு விழ வைக்கிறது என இதுபோன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளில் வேறு வழியில்லாமல் கடன் பயன்பாடுகளை தேடி செல்ல வேண்டியது இருக்கிறது.

டிஜிட்டல் யுகத்தில் லோன் ஆப்ஸ்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இதில் வரும் சிக்கலை பலரும் அறிவதில்லை. லோன் ஆப்ஸ்களை நம்பலாமா வேண்டாமா? வாங்க பார்க்கலாம்.

இவர்கள் எல்லாம் யார்?

இவர்கள் எல்லாம் யார்?

இந்த டிஜிட்டல் யுகத்தில் லோன் ஆப்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.

10 வினாடிகளில் கடன், கண் இமைக்கு நேரத்தில் கடன் தொகை, மூன்று ஸ்டெப்ஸ் முடித்தால் வங்கிக் கணக்கில் பணம் வரவு என பல விளம்பரங்களுடன் லோன் ஆப்ஸ்கள் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த லோன் ஆப்ஸ்கள் எல்லாம் எங்கிருந்து செயல்படுகிறது, யார் இவர்கள், நமது இருப்பிடம் கூட உறுதி செய்யாமல் நமக்கு ஏன் அவர்கள் லோன் கொடுக்க வேண்டும், இவர்களை நேரில் சந்திக்க முடியுமா என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

சரி, நாம் வாங்கியக் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் இவர்கள் எப்படி வசூலிப்பார்கள் என்று தெரியுமா? பதில்கள் இருக்கிறது பார்க்கலாம் வாங்க.

அதிகரிக்கும் புகார்கள்

அதிகரிக்கும் புகார்கள்

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இதுபோன்ற கடன் பயன்பாடுகளால் துன்புறத்தல் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவகிறது. லோன் ஆப் ஏஜென்ட்களின் துன்புறத்தல் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.

இதையடுத்து நாட்டில் உள்ள சட்டவிரோத/ஆதாரமற்ற கடன் பயன்பாடுகளை ஒடுக்குவதற்கு என மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

வரம்பற்ற முறையில் வட்டி வசூல்

வரம்பற்ற முறையில் வட்டி வசூல்

இந்த சட்டவிரோத ஆப்ஸ்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் எதையும் பொருட்படுத்தாமல் கடன்களை வழங்குகின்றன.

மொபைலில் உள்ள தொடர்பு பட்டியலில் தொடங்கி பல முக்கிய அணுகலை வாடிக்கையாளர்களிடம் இருந்து நூதன முறையில் பெறுகின்றன.

நீங்கள் பணத்தை திரும்ப தரவில்லை என்றால் உங்களை தவறாக சித்தரித்து உங்களது தொடர்பு பட்டியலில் இருக்கும் எண்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். இந்த லோன் ஆப்ஸ்கள் வட்டி அடிப்படையிலும் முறையற்று செயல்படுகின்றன.

எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்

எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து பயன்பாடுகளையும் ஆராய்ந்து சட்டப்பூர்வமாக செயல்படும் பயன்பாடுகளை "ஒயிட் லிஸ்ட்" பட்டியலில் இணைக்கும் என்றும் அதற்கு மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடன் செயலிகளிடம் இருந்து கடன் வாங்குவதை மக்கள் தவிர்க்கும்படியும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

2000 தனிநபர் கடன் பயன்பாடுகள் நீக்கம்

2000 தனிநபர் கடன் பயன்பாடுகள் நீக்கம்

கடன் வாங்குபவர்களை துன்புறத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு என கட்டுப்பாடற்ற முறையில் கடன் வழங்கும் பயன்பாடுகளை தடை செய்வதற்கான சில வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாகவே கொண்டு வந்தது.

அதன்படி கூகுள், இந்தியாவில் கடன் வழங்கும் பயன்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2000 தனிநபர் கடன் பயன்பாடுகளை நீக்கியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மிச்சம் கையில் இருப்பது இதுமட்டும் தான்

மிச்சம் கையில் இருப்பது இதுமட்டும் தான்

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி கடன் பயன்பாடுகள் நடத்திய 115 நேபாள நாட்டினரும், இரண்டு சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர். இந்தியர்களை குறிவைத்து நடத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பெரும்பாலும் இந்த லோன் ஆப்ஸ்கள் சீனாவில் இருந்து இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இவர்கள் எல்லாம் யார், எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்றே தெரியாது. இவர்களிடம் ஏன் கடன் வாங்க வேண்டும், சரியாக செலுத்தி நல்ல பெயர் வாங்குவதால் என்ன பயன் என்றால் ஒன்றும் இல்லை. நாம் அவர்கள் வலையில் சிக்குவது தான் மிச்சம்.

எளிய முறையில் கடன்

எளிய முறையில் கடன்

மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கி துயரத்துக்கு உள்ளானவர்களின் சிரமக் கதைகள் ஏராளம். மொபைல் மூலமாக ஒரு personal loan appஐ இன்ஸ்டால் செய்து, அதன்மூலம் எளிய வழிமுறைகளில் சில வினாடிகளில் கடனை பெற்றுவிடலாம்.

ஆனால் அதை திரும்ப செலுத்துவதற்குள் படாதபாடு பட வேண்டியது இருக்கும். வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது தானே முறை, இதில் என்ன சிரமம் என்ற கேள்வி வரலாம்.

டிஜிட்டல் ஆயுதம் பாயும்

டிஜிட்டல் ஆயுதம் பாயும்

குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கிய கடனை கட்ட வேண்டும், அப்படி செலுத்தாத பட்சத்தில் அபராதம், நாள் வட்டி என பல முறையில் சட்டத்துக்கு புரம்பாக கடனை திரும்பக் கேட்பார்கள்.

சில ஆப்ஸ்களுக்கு பணத்தை செலுத்தினாலும் எங்களுக்கு பணம் வரவில்லை மீண்டும் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

அப்படி எல்லாம் தர முடியாது, வாங்கிய கடனும் முறையான வட்டியும் தான் செலுத்துவேன் என்றால். உடனே வீட்டு வாசலில் வந்து நிற்கமாட்டார்கள். டிஜிட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.

அரங்கேறும் பல துயர சம்பவங்கள்

அரங்கேறும் பல துயர சம்பவங்கள்

நீங்கள் மொபைல் ஆப்ஸ்களில் லோன் பெறும் போது சிலவற்றுக்கு Access கேட்கும் அதை உடனே Accept செய்துவிடுவீர்கள்.

நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் பிறரின் மொபைல் எண்ணை எடுத்து, உங்களை தவறாக சித்தரித்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்புவேன் என மிரட்டுவார்கள். உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு போன் செய்துவிடுவேன் என்றும் மிரட்டுவார்கள். காவல்துறைக்கு செல்ல அச்சப்பட்டு உடனே அதிக பணத்தை செலுத்தியவர்கள் ஏராளம். இதுபோன்ற பல துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

உங்கள் பாதுகாப்பு., உங்கள் பொறுப்பு

உங்கள் பாதுகாப்பு., உங்கள் பொறுப்பு

இதுவரை பார்த்த தகவலின் மூலம் லோன் ஆப்ஸ் குறித்த நிலைபாடுகளை கண்டிப்பாக தெரிந்திருப்பீர்கள். முறையாக கடன் பெறுவதற்கு என பல வங்கிகள் இருக்கிறது.

ஆர்பிஐ கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தளங்களில் மட்டுமே கடன் பெறுவது என்பது பாதுகாப்பான ஒன்று.

நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து அதில் இருந்துக் கூட லோன்கள் அப்ளை செய்யலாம், தேவை இருக்கும்பட்சத்தில் மட்டும்.தற்போதைய நிலவரப்படி ஆன்லைன் லோன் ஆப்ஸ்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பாதுகாப்பு., உங்கள் பொறுப்பு.

Best Mobiles in India

English summary
Is it Good to get a Loan on a Mobile Loan App? How to find the Best Online Loan Apps?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X