Home
How to

மணிநேர 3ஜி / 4ஜி தரவு பொதிகளை தேர்வு செய்யலாமா.?

ஒரு மணி நேரத்தில் வரம்பற்ற தரவு பயன்பாடு சாத்தியமா.? இதன் நன்மைகள் என்ன.? இதை தேர்வு செய்யலாமா..?

By Muthuraj

அனுதினமும் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக காண முடிகிறது. அதாவது மாற்றங்கள் என்று சொன்னதன் மூலம், நாம் இருக்கும் பிணைய சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மேம்படுவதை மட்டும் கூறலாம் என்று அர்த்தமில்லை. உடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நம்பமுடியாத சலுகைகளையும் சேர்த்த மாற்றங்கள் என கூறலாம்.

ஒவ்வொரு சேவை வழங்குநரும் அவர்களின் சிறந்த சலுகைகள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி என்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

3ஜி / 4ஜி

3ஜி / 4ஜி

சமீபத்தில், சூப்பர்ஹவர் ரீசார்ஜ் என்ற பெயரில் வோடபோன் இந்தியா வெறும் ரூ.16/-க்கு ஒரு மணி நேரம் செல்லுபடியாகும் வரம்பற்ற 3ஜி / 4ஜி தரவு திட்டத்தை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஐடியா செல்லுலார் ரூ.22/-ல் இருந்து தொடங்கி அதன் மணிநேர தரவு திட்டங்களை அறிமுகம் செய்தது.

வரும் மாதங்களில்

வரும் மாதங்களில்

இந்த மணி நேர டேட்டா திட்டம் ஆனது ஒரு மாத காலம் செல்லுபடியாகும் டேட்டா பேக்குகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது மேலும் ஒவ்வொரு ஆப்ரேட்டரும் வரும் மாதங்களில் இது போன்ற மணிநேர தரவு பொதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உங்கள் மனதில் ஒரு மணி நேரத்தில் வரம்பற்ற தரவு பயன்பாடு சாத்தியமா.? இதன் நன்மைகள் என்ன.? இதை தேர்வு செய்யலாமா..? போன்ற கேள்விகள் எழும்.!

வரம்பற்ற தரவு பயன்பாடு சாத்தியமா.?

வரம்பற்ற தரவு பயன்பாடு சாத்தியமா.?

இந்த மணிநேர தரவு பொதிகளில் உள்ள பெரிய நன்மை என்னவேனால் நீங்கள் ஒரு மணி நேர கால கட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதாவது 1ஜிபி அல்லது 3ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக தரவை பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு லாபம் தான்.

நன்மைகள் என்ன.?

நன்மைகள் என்ன.?

ஒரு மணிநேரத்திற்குப் எவ்வளவு டேட்டா பயன்படுத்த முடியும் என்பது உங்கள் பயன்பாட்டை பொறுத்தது. ஒருவேளை, நீங்கள் ஒரு படம் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது யூட்யூப்பில் ஒரு சில வீடியோக்களை பார்க்கலாம், ஆன்லைனில் கேம் விளையாடலாம் அல்லது இணைய பயன்பாடு அதிகமாக செலவிடும் விடயங்களை மேற்கொள்ளலாம்.

தேர்வு செய்யலாமா..?

தேர்வு செய்யலாமா..?

மணிநேர மற்றும் மாதாந்திர தரவு திட்டங்களை தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டதாகும். நிச்சயமாக, மணிநேர தரவு பொதிகள் நேர எல்லை மற்றும் தற்காலிகமான திட்டமாகும். இந்த பேக்களில் ஒரு குறிகிய அளவிலான முற்றுப்புள்ளி இருக்கும், ஒரு மணிநேர தெளிவான செயல்பாடுகளில் நிச்சயமாக நீங்கள் அசத்துவீர்கள் என்றால் தாராளமாக இவ்வகை பேக்குகளை தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் போனின் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள்.!

Best Mobiles in India

English summary
Is hourly 3G 4G data packs are really useful.? Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X